வியாழன், 7 ஆகஸ்ட், 2014

Screen Shot எடுக்க...

இணையங்களில் மற்றும் கணணி தொடர்பான பாடக்குறிப்புக்களில் கணணியின் திரை படமாக்கப் பட்டிருக்கும். இதனை எவ்வாறு செய்வது என பார்ப்போம்.

ஸ்க்ரீன் ஷொட் எடுக்க வேண்டிய நிலையில் வைத்து தட்டச்சுப் பலகையில் வலது பக்கம் பாருங்கள் Print Screen என்றொரு கீ இருக்கும் அதை இப்போது தட்டுங்கள். 
Print Screen கீயைத் தட்டியதும் உங்கள் கணனியின் திரையில் தெரியும் விடயங்கள் இப்போது கிளிப் போட்டில் சேமிக்கப் பட்டிருக்கும்.
உதாரணமாக இப்போது கீயை தட்டிவிட்டு மைக்ரொசாப்ட் வேர்ட் சென்று Edit ---> Paste என்று சொடுக்குங்கள் உடனடியாக உங்கள் கணனித் திரையில் தெரிந்த காட்சிகள் உங்கள் வேர்ட் டொகுமென்டில் வரும்.
அடுத்து ஸ்க்ரீன் ஷொட்டை எவ்வாறு படமாகச் சேமிப்பது என்று பார்ப்போம். அதாவது முதலில் சொன்னவாறு Print Screen விசையை அமத்திய பின்னர் போடோசொப் அல்லது பெயின்ட் போன்ற படங்களை சேமிக்கக் கூடிய ஏதாவது புரோகிராமுக்குச் சென்று Edit ---> Paste (Ctrl + V) என்று சொடுக்குங்கள். இப்போது திரையின் படம் உங்கள் பெயின்டில் ஒரு படமாக அமர்ந்து இருக்கும். பின்னர் வழமைபோல சேமித்துக் கொள்ளலாம்.

USB இன்டர்நெட் டாங்கிலை wifi ஆக மாற்றி மற்றவர்களுடன் இன்டர்நெட்டை பகிர்வது எப்படி – எந்த சாதனமும் இன்றி!

நமது கணிணியில் நாம் ஏதாவது ஒரு இன்டர்நெட் இணைப்பு பயன்படுத்திக் கொண்டிருப்போம். அதே நேரத்தில் நமது மோபைலில் அல்லது டேப்லட்டில் இன்டர்நெட் பயன்படுத்த வேண்டியிருக்கும். இதற்காக நாம் தனியாக காசு செலவழித்து மொபைலில் இன்டர்நெட் pack ஐ Activate செய்வோம்.
இது போன்று நாம் செய்யத் தேவையில்லை. நீங்கள் உங்கள் கணிணியில் பயன்படுத்தும் இன்டர்நெட்டையே உங்கள் மொபைலிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உங்கள் மொலை மட்டும் அல்ல, tablet மற்ற கணிணி என அல்லா wifi enabled டிவைசிலும் உங்கள் இன்டர்நெட்டை பகிர்ந்து கொள்ளலாம்.
நீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle போன்றவற்றில் எதாவது ஒன்றை பயன்படுத்துவீர்கள் இதனை எந்தவொரு Router-உம் இல்லாமல் உங்கள்
கணினியில் இருந்தவாறே Wireless பயன்படுத்தக்கூடிய Laptop, Smart Phone, iPod Touch, iPhone, Android Phone, Netbook, போன்றவற்றுக்கு Wireless மூலம் உங்கள் இன்டர்நெட்டை பகிர்துந்து கொள்ளலாம்.
இதை எவ்வாறு செய்வது என்பதை காண்போம்
Virtual Router எனும் சிறந்த மென்பொருளின் மூலம் நீங்கள் பயன்டுத்தும் இன்டர்நெட்டை wifi மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
1.முதலில் இங்கு சென்று Virtual Router என்ற மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும்.
http://virtualrouter.codeplex.com/
2.Install செய்த Virtual Router மென்பொருளை Open செய்து கொள்ளவும் பின்பு கீழே படத்தில் உள்ளவாறு வரும்
vir
அதில் Network Name (SSID) என்பதில் உங்களுக்கு விரும்பிய ஒரு பெயரை கொடுக்கவும்
Password என்பதிலும் உங்களுக்கு விரும்பிய ஒரு Password -ஐ கொடுத்து Start Virtual Router என்பதை கிளிக் செய்யவும். மேலும் தாங்கள் எந்த இன்டர்நெட் இணைப்பை பகிர விரும்புகின்றீர்கள் என்பதையும் தேர்வு செய்து கொள்ளவும்.
3.இப்பொழுது உங்கள் கணினியில் இருந்து நீங்கள் கொடுத்த Network பெயரில் Wireless இணைப்பு பகிரப்படும். இதனை வேறு கணினி அல்லது Mobile Phone -களுக்கு பயன்படுத்தவேண்டும்மென்றால் நீங்கள் கொடுத்த Password ஐ கொடுத்து இணைப்பை இணைத்துக்கொள்ளலாம்.
நீங்கள் பயன்படுத்தும் இன்டர்நெட்டை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்கள் கணிணியில் wifi enable ஆக இருக்க வேண்டும்.

செலவே இல்லாமல் சிசிடிவி கேமரா வைப்பது எப்படி ?

சிலர் தனது வீட்டை அல்லது அலுவலகத்தை கண்காணிக்க நினைப்பார்கள். ஆனால் அதற்கு ஆயிரக்கணக்கில் செலவாகும் என நினைத்து வைக்காமலே விட்டு விடுவார்கள். எந்த வித செலவும் இல்லாமல் உங்கள் கணிணியில் உள்ள வெப்கேமரா அல்லது லாப்டாப்பில் உள்ள camera வை எளிதில் cctv கேமராவாக எளிதல் மாற்றி விடலாம்.
இதை செய்வதற்கு yawcam என்ற மென்பொருளை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் மகிழ்ச்சியான செய்தி என்னவெனில் இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம் தான். எனவே எந்த செலவும் நமக்கு இல்லை.
இதில் பல்வேறு வசதிகள் உள்ளது. உதாரணமாக motion detection என்ற வசதி உள்ளது. எதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் அசைவு ஏற்பட்டால் உடனே நமக்கு email மூலம் alert செய்யும். நாம் கேமராவை கண்காணிக்காது இருக்கும் போது வீட்டில் யாராவது புகுந்தால் அதை நமக்கு தெரியப்படுத்த இந்த வசதி உதவியாக இருக்கும்.
screen8
இன்டர்நெட் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் உங்கள் வீட்டை அல்லது கடையை கண்காணித்து கொள்ளலாம். இதில் கூடுதல் ஒரு வதி என்னவெனில் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுின்றது என யாருக்கும் தெரியாது. எதோ கம்யுட்டர் என்று தான் அனைவரும் நினைத்துக் கொள்ளவார்கள்.  இதனால் வீட்டில் கடையில் நடக்கும் உண்மை நிலையை யாருக்கும் தெரியாமல் நாம் கண்காணிக்கலாம்.
screen6
இந்த மென்பொருளில் பின் வரும் வசதிகள் இடம் பெற்றுள்ளது.
Yawcam features:
.: Video streaming
.: Image snapshots
.: Built-in webserver
.: Motion detection
.: Ftp-upload
.: Text and image overlays
.: Password protection
.: Online announcements for communities
.: Scheduler for online time
.: Time lapse movies
.: Run as a Windows service
.: Multi languages
பின் வரும் இணையத்திற்கு சென்று இந்த மென்பொருளை இலவசமாக Download செய்து கொள்ளலா்ம:
http://www.yawcam.com/download.php
இந்த மென்பொருளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை விளக்கும் வீடியோ:
இன்டர்நெட் மூலம் பார்ப்பதற்கு உங்கள் Router ல் Port forwerd செய்ய வேண்டும்.  இதை எவ்வாறு செய்து என்பதை பின் வரும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்: http://portforward.com/english/routers/port_forwarding/routerindex.htm