புதன், 18 செப்டம்பர், 2013

தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள்

* சிரிப்பதன் மூலம், மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோனின் உற்பத்தி அளவு குறைகிறது.

* புகழ்பெற்ற `டைட்டானிக்' கப்பலை உருவாக்க சுமார் 70 லட்சம் டாலர்கள் செலவானது.

* நமது உடலில் 20 முதல் 30 லட்சம் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன.

* தீப்பெட்டியைக் கண்டுபிடிப்பதற்கு முன்னரே சிகரெட் லைட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன.

* அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலையின் சுட்டுவிரல் நீளம், 8 அடி.

* தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம்பெல்லின் தாயும், மனைவியும் காது கேளாதவர்கள்.

* ஆந்தை மட்டுமே தன்னுடைய மேல் இமையை விரிக்க முடியும். மற்ற பறவைகள் கீழ் இமையை மட்டுமே விரிக்க முடியும்.

* கடவுளின் பெயர் சூட்டப்படாத ஒரே கிரகம், பூமி.

* கண்களைத் திறந்து கொண்டே உங்களால் தும்ம முடியாது.

* பன்றிகளின் நாக்கில் சுமார் 15 ஆயிரம் சுவை நரம்புகள் உள்ளன.

* கி.மு. 2737-ம் ஆண்டில் தேயிலை கண்டுபிடிக்கப்பட்டது.

* நீண்ட காலம் வரை கெட்டுப்போகாமல் இருக்கும் ஒரே உணவுப்பொருள், தேன்.

ஈசி சேரில் (சாய்வு நாற்காலி) நீண்ட நேரம் ஜாலியாக அமர்ந்திருப்போம். ஆனால் சாதாரண நாற்காலியில் கொஞ்ச நேரம் இருந்தாலே உடல் சோர்வடைந்து விடுகிறது. இது ஏன் தெரியுமா? தரையிலிருந்து உடலின் ஈர்ப்பு மையம் வேறுபடுவதுதான் காரணம். சாதாரண நாற்காலியில் நிமிர்ந்து உட்காரும்போது நம் உடலின் ஈர்ப்பு மைய உயரம் அதிகமாக இருக்கும். இதனால் உடலின் எடை, இடைப்பகுதியில் அழுத்துகிறது. ஆனால் சாய்வு நாற்காலியில் உடலின் எடை சீராக சாய்மானத்தை அழுத்துகிறது. இதனால் உடல் சோர்வை உணர்வதில்லை. சந்தோஷமாக இருக்கிறோம்.

கலங்கரை விளக்கு ஒளி நீண்ட தொலைவு தெரிவதால்தான் கப்பல்கள் பாதுகாப்பாக கரைக்குத் திரும்புகிறது. கலங்கரை விளக்கம் உயரமாக இருப்பதால் மட்டும் அதன் ஒளி நீண்ட தூரம் தெரிவதில்லை. அதற்கு வேறு அறிவியல் காரணம் இருக்கிறது. கலங்கரை விளக்கில் ஒளிதரக்கூடிய விளக்கு ஒன்று குழி ஆடியின் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும். இந்தக் குழி ஆடி ஒளிக்கதிரை இணைக்கற்றையாக எதிரொளிக்கிறது. இப்படிப்பட்ட இணைக் கற்றை ஒளிதான் நீண்டதூரம் சென்றாலும் திண்மை குறையாமல் செல்லும். அப்படி இருந்தால்தான் தூரத்தில் வரும் கப்பல்கள்வெளிச்சத்தை உணர முடியும். கலங்கரைவிளக்க ஒளி சுமார் 5 கி.மீ. தொலைவுக்குத் தெரியும்.
                                                                                                                                       
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். சிறப்புக்குரிய கோபுரங்களை இடிமின்னலில் இருந்து காப்பவை கலசங்கள் தான். மின்னேற்றம் பெற்றுள்ள மேகங்கள் காற்றைக் கடக்கும்போது உராய்வினால் இடி-மின்னல் உருவாகிறது. கூர் முனையுடைய உலோகம் மின்னேற்றத்தை தன்பால் இழுத்து கடத்தும். இடி-மின்னல் ஏற்படும்போது உலோகத்தால் செய்யப்பட்ட கலசம் மின்சாரத்தை ஈர்க்கிறது. கலசத்தில் இருந்து தரைக்குள் இணைக்கப்பட்டிருக்கும் கம்பி வழியாக அந்த மின்சாரம் கடத்தப்பட்டு பாதுகாப்பாக தரைக்குள் அனுப்பப்படுவதால் கோபுரங்கள் இடி தாக்குதலுக்கு பாதிக்கப்படுவதில்லை.

மனிதனின் கண்ணீரும், வியர்வையும் உப்புக்கரிக்கும். ஏனெனில் அவை உணர்வுப்பூர்வமானவை என்று இயல்பான விளக்கம் தரலாம். ஆனால் அறிவியல் என்ன சொல்கிறது தெரியுமா? மனிதனின் தோற்பரப்பு சுமார் 18 சதுர அடி. இந்த தோற்பரப்பில் லட்சக்கணக்கான வியர்வை சுரப்பிகள் உள்ளன. உடலின் கழிவுப் பொருட்களான நீர், கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் கழிவு உப்புகள் போன்றவை வியர்வை சுரப்பிகள் வழியாக வெளியேறும். இது உடல்வெப்பத்தை சமநிலைப்படுத்தும். கண்ணீரிலும் சோடியம் குளோரை உப்பு உள்ளது. எனவே கண்ணீர், வியர்வை இரண்டுமே உப்புக் கரிக்கிறது.
                                                                                                                                              இசையென்றால் எல்லா உயிர்களுக்கும் ஒரு கிறக்கம் உண்டு. அது ஏன் தெரியுமா?. இசை உணர்வுப்பூர்வமானது. உடற்செயலியல் முறையில் சொல்வதானால் மனித மூளை வலது அரைக்கோளத்தின் நெற்றிக் கதுப்பில்தான் இசையை உணரும் மையம் உள்ளது. இந்த உணர்வு மையத்தை இசை ஒரு தாளலயத்தில் தூண்டும்போது இசை நம்மால் முழுமையாக உள்வாங்கப்பட்டு கிறங்கச் செய்கிறது. வலது பக்க நெற்றிக்கதுப்பின் வளர்ச்சியால் இசைத்திறனும், படைப்புத்திறனும் அதிகமாகும் என்பது ஆய்ந்தறிந்த உண்மையாகும்.                                                                                    டாக்டர்கள் நோயாளிகளின் நாக்கை நீட்டச் சொல்லி பார்ப்பது உண்டு. உள்ளுறுப்புகளில் ஏற்படும் நோய்களின் அறிகுறிகளை வெளிக்காட்டும் தன்மை நாக்கிற்கு இருக்கிறது என்பதால்தான் டாக்டர்கள் இப்படி செய்கிறார்கள். சில நேரங்களில் நாக்கு சுவை அறிவதில் கோளாறு செய்யும். நாக்கு மாறுபட்டு சுவை அறிவதை `டைஜென்சியா' என்றும், குறைவான சுவை உணர்வதை `ஹைபோஜென்சியா' என்றும் கூறுவர். உடலில் துத்தநாகம் என்ற உப்புச்சத்து குறைவதால் இந்த பிரச்சினைகள் ஏற்படும். காய்ச்சலின்போது அதிகமாக துத்தநாகம் இழப்பு ஏற்படுவதால்தான் அப்போது வாய் கசப்பதாக உணர்கிறோம்.                                                                                      
குழந்தைகள் தூங்கும்போது புலம்புவதை அதிகமாக காண முடியும். இது ஏன் தெரியுமா? தூக்கத்திற்கான கட்டுப்பாட்டு மையமாக மூளையின் முகுளம் பகுதி செயல்படுகிறது. இருந்தாலும் தலாமஸ், நடுமூளையின் வலைப்பின்னல் அமைப்பு, மூளைத்தண்டுப் பகுதி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினால் தூக்கத்தின் தன்மை மாறுபடுகிறது. ஆழ்ந்த தூக்கத்தின் இறுதிக்கட்டத்தில் உணர்வு நரம்பின் தூண்டுதலால் தானாகப் பேசுவதும் புலம்புவதும் ஏற்படுகிறது. பொதுவாக குழந்தைகளிடம் ஆழ்ந்த தூக்க வகை காணப்படுவதால் அவர்களே அதிகம் புலம்புகிறார்கள்.
                                                                                                                               பனிச்சறுக்கு விளையாட்டு வீரர்கள் கறுப்புக் கண்ணாடி அணிந்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இது ஸ்டைலுக்காக அல்ல. சூரிய ஒளி பனிக்கட்டிகளின் மேல்பட்டு பிரதிபலிக்கும். இந்த பிரதிபலிப்பின் ஒளி கண்ணை பாதித்து பார்வைத்திறனை குறைக்கச் செய்யும். இந்த பிரச்சினையை எதிர்கொள்ளத்தான் பனிச்சறுக்கு வீரர்கள் கறுப்புக் கண்ணாடி அணிகிறார்கள்.

கோடை காலங்களில் உப்பளங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் இதே ஆபத்து இருக்கிறது. அவர்களும் கண்ணாடி அணிந்து கொண்டால் பார்வைத்திறன் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

அரிய பொது அறிவுத் தகவல்கள்!

வினிகரில், `அசிட்டிக் அமிலம்' உள்ளது.

* தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின்போது ஆக்சிஜனை வெளியிடுகின்றன.

* சிங்கப்பூரின் முந்தைய பெயர், டெமாஸெக்.

* பிரபல இசைமேதையான பீத்தோவன், ஜெர்மனியில் உள்ள `பான்' நகரில் பிறந்தார்.

* `சீனக்குடியரசின் தந்தை' என்று போற்றப்படுபவர், சன்யாட்சன்.

* ஒருசெல் உயிரியான அமீபாவின் உடல், புரோட்டோபிளாசத்தால் ஆனது.

* `வைட்டமின் ஏ'-ன் வேதியியல் பெயர் ரெட்டினால்.

* சூரியக்குடும்பத்தைக் கண்டறிந்தவர், கோபர் நிக்கஸ்.

* `பாரத ரத்னா' விருது பெற்ற முதல் பெண்மணி, இந்திரா காந்தி.

* சீனர்கள் தான் முறையான நெல் சாகுபடி முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.

* `உயிரியல் கோட்பாட்டின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், சார்லஸ் டார்வின்.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணை, பிரித்வி.

* இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம்', லக்னோவில் அமைந்துள்ளது.

* முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம், மீன்.

* `திருவருட்பா'வை இயற்றியவர், வள்ளலார்.

* பாலில் `லாக்டிக் அமிலம்' உள்ளது.

* குஜராத் மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம், தாண்டியா.

* இன்சுலின், கணையத்தில் சுரக்கிறது.

* பெரு நாட்டின் தலைநகரத்தின் பெயர், லிமா.

* முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, இந்தியா.

* `பிரமிடு கோவில் நாடு' என்று அழைக்கப்படுவது, பர்மா.

* இத்தாலி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவர், முசோலினி.
* சுமத்ரா தீவில் மலரும் ராப்லிசியா ஆர்னல்டை எனும் பூ தான், உலகிலேயே மிகப்பெரிய பூவாகும்.

* ஒவ்வொரு மனிதனுக்கும் சுமார் 11/2 கிலோ எடையுடைய மூளை உள்ளது.

* கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப்பொடியைக் கட்டியாக்கி சாக்பீஸ் தயாரிக்கப்படுகிறது.

* நத்தை ஒரு மைல் (1.6 கிலோமீட்டர்) தூரம் செல்வதற்கு, சுமார் 17 நாட்கள் வரை ஆகும்.

* ஆக்வா ரெஜியா என்ற திரவத்தில் கரைத்தால், தங்கம் கரைந்து விடும்.

* பல்பில் உள்ள டங்ஸ்டன் இழை, சுமார் 3400 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் பெற்றது.

* மாலத்தீவில் விளைகிற லொடாய்சியா என்ற இரட்டைப் பனங்கொட்டை தான், உலகிலேயே மிகப்பெரிய விதையாகும்.

* நம்முடைய தலைமுடியில் இருந்து அமினோ அமிலம் தயாரிக்கப்படுகிறது. இது மருந்து மற்றும் ரசாயனப் பொருட்கள் தயாரிப்பில் உதவுகிறது.
* ஒருவரின் பிறப்பிலேயே அமையும் ரத்த வகை, அவருடைய ஆயுள் முழுவதும் மாறாது.

* ஐரோப்பாவில், மரங்களில் வாழும் தவளைகள் அதிகம். இவை குரங்குகளைப் போல ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவும்.

* நெருப்புக்கோழி, தனது உணவைச் செரிக்க வைப்பதற்காக சிறு சிறு கற்களை விழுங்கும். இது, மற்ற பறவையினங்களில் காணப்படாத வினோதமான செயல்.

* நல்ல நிலையில் உள்ள மனிதரின் கண்கள், சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வண்ணங்களின் வேறுபாடுகளை அறியக்கூடியது.

* பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபலமான ஈபிள் கோபுரத்தை வடிவமைத்தவர், கஸ்டவ் ஈபிள். இவர்தான் அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை வடிவமைத்தவர்.

* ஒரு மனிதனின் சராசரி உயரம், அவனுடைய தலையின் உயரத்தைப்போல் சுமார் ஏழரை மடங்கு இருக்கும்.

* தந்தி அனுப்புவதற்கான சங்கேதக்குறியை, 1837-ம் ஆண்டு சாமுவேல் மோர்ஸ் என்ற அமெரிக்க அறிஞர் கண்டுபிடித்தார்.

* குழந்தை பிறந்த 15 நாட்களுக்குப் பிறகே கண்ணீர்ச் சுரப்பி வளர்கிறது.* தீப நகரம் என்று அழைக்கப்படுவது, மைசூர்.

* நெருப்புக்கோழி மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும்.

* பைசா நகர சாய்ந்த கோபுரத்தில் 294 படிக்கட்டுகள் உள்ளன.

* அன்னாசிப் பழத்தில் விதை கிடையாது.

* ஒளிச்சிதறலைக் கண்டுபிடித்தவர், சர். சி.வி.ராமன்.

* அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி, அன்னை தெரசா.* கலர் டி.வி.யை முதன்முதலில் உலகத்திற்கு அறிமுகம் செய்த நாடு, பிரான்சு.

* பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் அறிவியல் துறைக்கு ஆர்னித்தாலஜி என்று பெயர்.

* மழையின் அளவைக் கண்டறிய உதவும் கருவி, ரெயின்கேஜ்.

* விலங்குகளில் அறிவுள்ளதாக கருதப்படுவது, டால்பின்.

* ராணித்தேனீயின் ஆயுட்காலம், 3 முதல் 4 ஆண்டுகள்.

* கடற்குதிரை மீன், ஒரே நேரத்தில் தனது கண்களால் இரண்டு வெவ்வேறு பொருட்களைப் பார்க்கும் தன்மை கொண்டது.
* இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினம் - திமிங்கலம்.

* விதையில்லாமல் முளைக்கும் தாவரம் - தர்ப்பைப்புல்.

* உலகின் வெண்தங்கம் - பருத்தி.

* இந்தியாவின் முதல் பெண் கவர்னர் - சரோஜினி நாயுடு.

* இந்தியாவின் மிக உயரமான கோவில் கோபுரம் - முருதேஷ்வரா கோவில் (கர்நாடகா).
* ஆரிய இனத்தவர்களின் தாயகம், மத்திய ஆசியா.

* விஞ்ஞானக் கழகத்தை ஏற்படுத்தியவர், சையது அகமது கான்.

* `குடியரசு' என்னும் நாளிதழை நடத்தியவர், பெரியார்.

* வங்கப்பிரிவினை ரத்து செய்யப்பட்ட ஆண்டு, 1911.

* இந்தியாவை ஆட்சி செய்த கடைசி இந்தியப் பேரரசர், ஹர்ஷர்.

* வினிகரில், அசிடிக் அமிலம் உள்ளது.

* தாவரங்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுப்பது, பொட்டாசியம்.

* சைக்கிளைக் கண்டுபிடித்தவர், மாக்மில்லன்.

* திரவ நிலையில் உள்ள உலோகம், பாதரசம்.

* `தாவர வகைப்பாட்டியலின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், லின்னேயஸ்.

* ரத்தச் சிவப்பணுக்களின் ஆயுட்காலம், 120 நாட்கள்.

* இந்திய துணை ஜனாதிபதியின் பதவிக்காலம், 5 ஆண்டுகள்.

* தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம், ஆனைமுடி.* நீண்ட தொலைவு பறக்கும் ஆற்றலும், நீண்ட நேரம் வானில் வட்டமிடும் திறனும் கொண்ட பறவை, புறா.

* உயிரினங்களில் நெடுநேரம் மூச்சை அடக்கும் சக்தி பெற்றது, முதலை.

* பறவைகளிலேயே மிகவும் நீளமான நாக்கு உடையது, மரங்கொத்தி.

* தவளை, தன்னுடைய கண்கள் மூலம் ஒலியைக் கேட்கிறது.

* `விவசாயிகளின் எதிரி' என்று அழைக்கப்படுவது, எலி.* பூனையின் விலங்கியல் பெயர், பெலிஸ்கேடால்.

* பூச்சி இனங்களில் அதிக அறிவு உடையது, எறும்பு.

* நேருவுக்கு 84 பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.

* அமிர்தசரஸ் நகரை உருவாக்கியவர், குரு ராம்தாஸ்.

* `ஸ்காலிப்' என்ற கடல் சிப்பிக்கு நூறு கண்கள் உள்ளன.

* ஆண்டுதோறும் கழுதைக் கண்காட்சி நடக்கும் இடம், உஜ்ஜைனி.
வாயுக்களின் அழுத்தத்தை அளவிடும் கருவி, மானோ மீட்டர்.
* உலகத் தொழிலாளர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு, 1919.
* பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரம், சூரியன்.
* பால், முட்டை, கேரட், வெண்ணை, மீன், பப்பாளி ஆகியவற்றில் `வைட்டமின் ஏ' அதிகமாக உள்ளது.
* `உயிரின் ஆறு' என அழைக்கப்படுவது, ரத்தம்.
* ஒரு உணவு நிலையில் இருந்து மற்றொரு உணவு நிலைக்கு சக்தி கடத்தப்படுவதே `உணவுச்சங்கிலி' எனப்படும்.
* பூனையின் ஆயுட்காலம், 12 வருடங்கள்.
* ராக்கெட்டுகளில் எரிபொருளாகப் பயன்படும் சேர்மம், ஹைட்ரஜன்.
* நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு, 1986.
* தமிழ்நாட்டில் உள்ள கடற்கரையின் நீளம் சுமார் 1000 கிலோமீட்டர்.
* நிதி ஆணையத்தின் பதவிக்காலம், 5 ஆண்டுகள்.
* நம்முடைய கால் பாதங்களில் 16 எலும்புகள் இருக்கின்றன.

* போலியோ தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்தவர், ஆல்பர்சேலின்.

* அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை, 27.

* `ரஷ்யப்புரட்சி'யை தலைமையேற்று நடத்தியவர், ஜோசப் ஸ்டாலின்.

* தட்டைப்புழுவின் விலங்கியல் பெயர், டீனியா.

* செஸ் விளையாட்டு தோன்றிய நாடு, இந்தியா.

* வாத்துகள், அதிகாலை நேரத்தில் மட்டுமே முட்டையிடுகின்றன.

* சிங்கப்பூரின் பழைய பெயர், டெமாஸெக்.

* வானவில்லில் 7 நிறங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடித்தவர், ஜசக் நிïட்டன்.

* `திராவிட மொழியியல் ஆய்வின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், கால்டுவெல்.

* மூன்றாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு, 1761.
* வரிக்குதிரை, ஆப்பிரிக்க கண்டத்தில் மட்டுமே காணப்படுகிறது.

* சிப்பியில் முத்து உருவாக சுமார் 15 ஆண்டுகள் ஆகும்.

* இந்தியாவிலேயே அதிக நூலகங்களைக் கொண்ட மாநிலம், கேரளா.

* `செவாலியர்' விருதை வழங்கும் நாடு, பிரான்ஸ்.

* வண்ணப் புகைப்படத்தைக் கண்டுபிடித்தவர், ஜார்ஜ் ஈஸ்ட்மன்.

* ஹார்மோன்களே இல்லாத உயிரினம், பாக்டீரியா.
* `அரபிக்கடலின் ராணி' என்று வர்ணிக்கப்படும் நகரம், கொச்சி.

* மனிதன் ஒரு நிமிடத்தில் சுவாசிக்கும் காற்றின் அளவு, சுமார் 15.5. லிட்டர்.

* `பிக் ஆப்பிள்' என்று அழைக்கப்படும் அமெரிக்க நகரம், நிïயார்க்.

* `இந்தியாவின் ஏவுகணை மனிதர்' என்று போற்றப்படுபவர், ஏ.பி.ஜே. அப்துல்கலாம்.

* நீரைவிட ரத்தத்துக்கு 6 மடங்கு அடர்த்தி அதிகம்.* ஒரு நெருப்புக்கோழியின் முட்டை, 22 கோழி முட்டைகளுக்கு சமம்.

* ஒரு புள்ளியில் சுமார் 70 ஆயிரம் அமீபாக்களை நிரப்பலாம்.

* உலக வானிலை மையம் அமைந்துள்ள இடம், ஜெனீவா.

* யுரேனஸ் கிரகம் சூரியனைச் சுற்றி வரும் காலம், 84 ஆண்டுகள்.

* உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை, டிரான்ஸ்-கனடா (8 ஆயிரம் கிலோமீட்டர்).

* தெற்காசியாவின் மிகப்பெரிய காய்கறிச்சந்தை, ஒட்டன்சத்திரத்தில் (திண்டுக்கல் மாவட்டம்) உள்ள காந்தி மார்க்கெட்.
* உலகிலேயே அதிக அளவில் மீன் பிடிக்கும் நாடு, ஜப்பான்.

* புத்தர் பிறந்த இடம், லும்பினி.

* `புனித நகரம்' என்று அழைக்கப்படுவது, ஜெருசலேம்.

* `பூகோள சொர்க்கம்' எனப்படும் இடம், காஷ்மீர் (இந்தியா).

* உலகின் மிகப்பெரிய தீபகற்பம், அரேபியா.

* தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு, அமெரிக்கா.

* ஜப்பான் நாட்டில் தான் அதிக அளவில் ஆட்டோக்கள் தயாரிக்கப்படுகின்றன.
*`கிரையோஜெனிக் என்ஜின்கள்', விண்வெளி ஓடத்தில் (ராக்கெட்) பயன்படுத்தப்படுகின்றன.

* சராவதி ஆற்றின் `ஜோக்' அருவி தான் (கர்நாடகா), இந்தியாவிலேயே மிக உயரமானது.

* மிகப்பெரிய பூ பூக்கும் தாவரம், `ராப்லேசியா'.

* பச்சோந்தியின் நாக்கு, அதன் உடலைப்போன்று இரண்டு மடங்கு நீளமாக இருக்கும்.

*100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படும் பொருள், கண்ணாடி* 15 நிமிடங்கள் மட்டுமே அரசராக இருந்தவர், 14-ம் லூயி.

* `லிட்டில் கார்ப்பொரல்' என்று அழைக்கப்பட்டவர், நெப்போலியன்.

* `வாசனைப் பொருட்களின் ராணி' என அழைக்கப்படுவது, ஏலக்காய்.

* பிரிட்டனின் தேசிய மலர், ரோஜா.

* இந்தியா முதன்முதலில் அணுவெடிப்புச் சோதனை நிகழ்த்திய இடம், பொக்ரான் (ராஜஸ்தான்).யானையின் துதிக்கையில் சுமார் 40 ஆயிரம் தசைகள் உள்ளன.

நமது மூளை ஏறக்குறைய 60 லட்சம் செல்களால் ஆனது.

உலகில் மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன.

இசைக்கருவிகளுள் ஒன்றான வீணையில், 7 தந்திக்கம்பிகள் உள்ளன.

எறும்பின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள்.

முதலைக்கு 60 பற்கள் உண்டு.* உலகிலேயே சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, கியூபா.

* வீரத்தைப் பாடிய 400 சங்க இலக்கியப் பாடல்களின் தொகுப்பு `புறநூனூறு'.

* இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதுவர், விஜயலட்சுமி பண்டிட்.

* இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், அம்பேத்கர்.

* `கறுப்பு ஈயம்' எனப்படும் தாது, கிராபைட்.

* கார்பன் மோனாக்சைடும், ஹைட்ரஜனும் சேர்ந்த கலவையின் பெயர், `நீர்வாயு'.

* காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளக்கும் கருவியின் பெயர், ஹைக்கோ மீட்டர்.

* `இந்தியாவின் நைட்டிங்கேல்' என்று அழைக்கப்படுபவர், கவிக்குயில் சரோஜினி நாயுடு.

* `திருமறைக்காடு' என்று அழைக்கப்படும் ஊர், வேதாரண்யம்.
* `பெருலா' என்ற செடியில் இருந்து வெளிவரும் ஒரு திரவப்பொருள் தான், பெருங்காயம்.

* கரிகால் சோழ மன்னனின் இயற்பெயர், திருமாவளவன்.

* உயிர் காக்கும் உன்னத உலோகம் என அழைக்கப்படுவது, ரேடியம்.

* மின்னூட்டத்தினை தேக்கி வைக்கும் சாதனம், மின்தேக்கி.

* `சுங்கம் தவிர்த்த சோழன்' எனப் பெயர் பெற்ற மன்னன், முதலாம் குலோத்துங்க சோழன்.
பாம்பு, நாக்கினால் வாசனையை நுகரும் திறன் கொண்டது.

கார்கள் அதிகமுள்ள நகரம், நியூயார்க்.

யானை தினமும் சுமார் 300 பவுண்டு அளவுள்ள உணவை உட்கொள்ளும்.

நாய்க்கு வியர்ப்பது கிடையாது.*`பறவைத்தீவு' என அழைக்கப்படுவது, நியூசிலாந்து.

* நாகலாந்தில் ஒரே ஒரு ரெயில் நிலையம் தான் உள்ளது.

* வீட்டிற்கு ஒரு பியானோ உள்ள நாடு, இங்கிலாந்து.

* பழங்களின் அரசன் எனப்படுவது, மாம்பழம்.

* எலும்புக்கூடு இல்லாத உயிரினம், ஜெல்லி மீன்.* `ஆகஸ்டு புரட்சி' என அழைக்கப்படுவது, வெள்ளையனே வெளியேறு இயக்கம்.

* `வாதாபி கொண்டான்' என்று அழைக்கப்படும் மன்னன், நரசிம்ம பல்லவன்.

* தென்னிந்தியாவின் உயரமான மலைச்சிகரம், தொட்டபெட்டா.

* வாகனங்களில் இருந்து வெளியாகும் மாசு, கார்பன் மோனாக்சைடு.

* `கூத்தராற்றுப்படை' என்று குறிப்பிடப்படும் சங்க இலக்கியம், மலைபடுகடாம்.

* டெல்லி யூனியன் பிரதேசத்தின் முதல் பெண் முதல்வர், சுஷ்மா சுவராஜ்.

* முன்னங்கால்களில் காதுகளைக் கொண்ட உயிரினம், வெட்டுக்கிளி.

* `உயிரியல் கவிஞர்' என்று அழைக்கப்படுபவர், சர் ஜெகதீஸ் சந்திரபோஸ்.
ஐம்புலனறிவு எல்லா உயிர்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

பறவைகளுக்குப் பார்வைச் சக்தி அதிகம். வானத்தில் வட்டமிடும் பருந்து, தரையில் உள்ள பல்லியைக் கூடப் பார்த்து அதன் மீது பாய்ந்து பற்றும்.

வேட்டையாடும் விலங்குகளுக்குப் பார்வைச் சக்தி குறைவு. ஆனால் மோப்ப உணர்வு மொட்டுகள் சராசரியாக 22 கோடி என்ற அளவில் உள்ளன.

மனிதர்களுக்கு வாசனையை உணரும் மொட்டுகள் 50 லட்சம் உள்ளன. பத்தாயிரம் வெவ்வேறு விதமான வாசனைகளை நம்மால் பிரித்து அறிய முடியும்.

உயிர் வாழ்வதற்கு எல்லா உணர்வுகளும் வேண்டும் என்பதில்லை. செடிகள் வெளியிடும் கரியமில வாயுவை உண்டு வாழும் ஒரு புழு உள்ளது. அதற்கு அந்த ஒரு வாசனை மட்டுமே தெரியும்.

ஒவ்வோர் உயிரினமும் தம் உடலிலிருந்து தனித்தனி வாசனையைக் காற்றில் கலக்கிறது. வண்ணத்துப்பூச்சி தனது வாசனையால் பல மைல்களுக்கு அப்பால் உள்ள தனது இணையைக் கவரும்.

சூரியனின் புறஊதாக் கதிர்களை தேனீக்கள் உணர்கின்றன. சூரியன் இருக்குமிடத்தை வைத்து, தம் கூட்டுக்குத் திரும்பும் திசையை அவை தெரிந்துகொள்கின்றன.

தவளைக்குப் பார்வைத் திறன் குறைவு. தனது இரை மட்டுமே அதற்குப் புலப்படும்.

* உலகின் மீது ஒரு மணி நேரம் விழும் சூரியசக்தி, 2 லட்சத்து 10 ஆயிரம் டன் நிலக்கரி தரும் சக்திக்கு சமம்.

* கணினி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு, 1952.

* மனித உடலில் அதிகளவில் உள்ள உப்பு, கால்சியம்.

* கடல்நீரில் உள்ள உப்பின் அளவு, 35 சதவீதம்.

* நாகாலாந்து தனி மாநிலமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு, 1962.
* ஒரு நாளில் நாம் ஏறக்குறைய 15 ஆயிரம் முறை கண்களை இமைக்கிறோம்.

* தேனீக்களுக்கு 5 கண்கள் உள்ளன.

* மனிதனின் நாக்கில் 8 ஆயிரம் சுவை மொட்டுகள் உள்ளன.

* செஸ் போர்டில் உள்ள வெள்ளைக் கட்டங்களின் எண்ணிக்கை, 32.

* ஒரு பென்சிலைக் கொண்டு சுமார் 50 கிலோமீட்டர் நீளத்திற்கு கோடு வரைய முடியும்.

* மின்சார பல்பில் `இனர்ட்' என்ற வாயு பயன்படுத்தப்படுகிறது.* மனித உடலில் 640 தசைகள், 206 எலும்புகள் உள்ளன.

* மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும் இணையுமிடம், நீலகிரி.

* இலைகளை உதிர்க்காத மர வகை, ஊசியிலை மரங்கள்.

* இளம்வயதில் ஓவியராக இருந்தவர், ஹிட்லர்.

* ஓர் எறும்பு ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி முட்டைகள் வரை இடும்.

* சில வகையான ஆந்தைகளுக்கு கொம்பு போன்ற தோற்றம் உண்டு.* உலகளவில் மக்கள் பயன்பாட்டிற்காக முதன் முதலில் நூல் நிலையங்களை ஆரம்பித்தவர், ஜுலியஸ் சீசர்.

* தபால்பெட்டிக்கு சிவப்பு நிறம் பூசும் பழக்கம் முதன்முதலில் 1876-ம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது.

* செவ்வாய்க் கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்களுக்கு பகலாகவே இருக்கும்.

* இந்திய நாட்டுப் பெண் யானைகளுக்குத் தந்தம் கிடையாது; ஆப்பிரிக்க தேசத்துப் பெண் யானைகளுக்குத் தந்தம் உண்டு.

* 24 மணி நேரத்தில் இதயம் சராசரியாக லட்சம் முறை துடிக்கும்.* அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழம், 8 ஆயிரத்து 381 மீட்டர்கள்.

* ஒளிவிடும் தன்மை கொண்ட உலோகம், சீர்கான்.

* முதன்முதலில் இந்தியாவின் உதவி ஜனாதிபதியாய் இருந்தவர், டாக்டர் ராதாகிருஷ்ணன்.

* ஜவஹர்லால் நேரு பெல்லோஷிப் விருதை இரண்டு முறை பெற்ற இந்திய எழுத்தாளர், கே.கே. நாயர்.

* உலக சிகரங்களில், மூன்றாவது பெரிய சிகரம், கஞ்சன் ஜங்கா.

* கியூபாவில் நீண்ட காலம் ஆட்சி செய்த அதிபர், பிடல் காஸ்ட்ரோ.

* சர் ஐசக் நிïட்டன் உருவாக்கிய கணித வகை, கால்குலஸ்.

* செங்குத்தான நிலையிலேயே நீந்திச் செல்லும் ஆற்றல் உள்ள மீன், கடற்குதிரை.

* அமெரிக்க காந்தி என அழைக்கப்பட்டவர், மார்ட்டின் லூதர்கிங்.

* ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு, லிட்டில்பாய்.

* நிக்கல் உலோகத்தைக் கண்டறிந்தவர் கிரான்ஸ்டட்.மனிதனைப் போலவே நடக்கக் கூடிய பறவை, பெங்குவின்.

புறாப் பந்தயம் தோன்றிய இடம், பெல்ஜியம்.

ஒலிம்பிக் போட்டியில் கபடி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு, 1952.

ஒருகாலத்தில் மாமன்னர்கள் மட்டுமே சாப்பிடும் பழமாக அத்தி இருந்தது.

துருப்பிடிக்கும் போது இரும்பின் எடை கூடுகிறது.

நெருப்புக்கோழியை, `ஒட்டகப்பறவை' என்றும் அழைக்கிறார்கள்.* பச்சையம் இல்லாத தாவரம், காளான்.

* காகம் இல்லாத நாடு, நியூசிலாந்து.

* பாம்பு இல்லாத தீவு, ஹவாய்.

* திரையரங்கு இல்லாத நாடு, பூட்டான்.

* எரிமலை இல்லாத கண்டம், ஆஸ்திரேலியா.

* தலை இல்லாத உயிரினம், நண்டு.
* அனிமாமீட்டர், காற்றின் வேகத்தை அளக்கப் பயன்படுகிறது.

* உலகிலேயே முதன்முதலில் அமெரிக்காவில் தான் கண்வங்கி தொடங்கப்பட்டது.

* சென்னை விமான நிலையம், 1945-ம் ஆண்டு கட்டப்பட்டது.

* உலகின் மிகப்பெரிய நகரம், ஷாங்காய்.

* புனிதபூமி என்று அழைக்கப்படுவது, பாலஸ்தீனம்.
* அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாஸா தொடங்கப்பட்ட ஆண்டு, 1958.

* `குளோரின்' என்பது கிரேக்க மொழி வார்த்தையாகும்.

* `நவீன இந்தியாவின் தந்தை' என்று போற்றப்படுபவர், ராஜாராம் மோகன்ராய்.

* தீக்குச்சியைக் கண்டுபிடித்தவர், லேண்ட் ஸ்டார்ம்.

* குளிர்சாதனப் பெட்டியில் பயன்படுத்தப்படும் வாயு, அம்மோனியா.

* உலகின் முதல் மின்னணு கம்ப்ïட்டர், எனியாக்.

* எந்த அமிலத்தாலும் கரைக்க முடியாத உலோகம், பிளாட்டினம்.

* `இங்க் பேனா'வைக் கண்டுபிடித்தவர், லீவிஸ் வாட்டர்மேன்.

* இந்திய நீச்சல் தலைமைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு, 1948.

* மிக விரைவில் ஆவியாகும் திரவம், ஆல்கஹால்.

* காற்றிற்கும் அழுத்தம் உண்டு எனக் கண்டுபிடித்தவர், டாரி செல்லி.

* `அமைதியின் மனிதர்' என்று அழைக்கப்படுபவர், லால்பகதூர் சாஸ்திரி.* நம்முடைய மூளைக்குள் ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 800 மில்லி லிட்டர் ரத்தம் பாய்கிறது.

* நாட்டின் பெயரில் அமைந்துள்ள தனிமங்கள் அமெரீஷியம், பிரான்சிஷியம், ஜெர்மேனியம், பொலோனியம்.

* மார்ச் 21-ந் தேதியிலும், செப்டம்பர் 23-ந் தேதியிலும் பகலும், இரவும் சமமாக இருக்கும்.

* முட்டையின் ஓட்டில் உள்ள வேதிப்பொருள், கால்சியம் கார்பனேட்.

* மோரின் புளிப்புச் சுவைக்கு காரணம், லாக்டிக் அமிலம்.

* வைட்டமின் பி மற்றும் சி இரண்டும் நீரில் கரையக்கூடியவை.

* இந்தியாவின் தலைசிறந்த பறவையியல் நிபுணர், சலீம் அலி.

* சிலந்திக்கு எட்டு கால்கள் இருப்பதைப் போன்று, கண்களும் எட்டு இருக்கின்றன.

* முதுகெலும்பு தரையில் படுமாறு உறங்கும் ஒரே விலங்கு, மனிதன் மட்டுமே.

* தேனில், 31 சதவீதம் குளுக்கோஸ் அடங்கியுள்ளது.

* ஒரு மைக்ரான் என்பது, ஒரு மீட்டர் அளவை பத்து லட்சமாகப் பிரித்தபின் கிடைக்கும் ஒரு பகுதியாகும்.ஏப்ரல் முதல் தேதியை அனைவரும் முட்டாள்கள் தினமாகக் கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் நடைபெற்ற சில முக்கியமான வரலாற்று நிகழ்வுகளை இங்கு பார்ப்போம்.


* 1793 - ஜப்பானில் உள்ள உன்சென் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 53 ஆயிரம் பேர் இறந்தனர்.

* 1935 - இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

* 1946 - மலாய் கூட்டமைப்பு உருவானது.

* 1948 - பரோ தீவுகள், டென்மார்க்கில் இருந்து தன்னாட்சி பெற்றன.

* 1973 - புலிகளைக் காப்பதற்கான செயல்திட்டம், இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் தொடங்கப்பட்டது.

* 1976 - ஆப்பிள் கணினி தொடங்கப்பட்டது.

* 1979 - 98 சதவீத மக்கள் ஆதரவுடன் இஸ்லாமியக் குடியரசாகியது, ஈரான்.

* 2001 - நெதர்லாந்து, சமப்பால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதல் நாடானது.

* 2004 - ஆயிரம் மெகாபைட் கொள்ளளவு கொண்ட ஜி-மெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தியது, கூகுள்.* பறக்கத் தெரியாத பறவை, பெங்குவின்.

* கார் உற்பத்தியில் சிறந்து விளங்கும் நாடு, ஜப்பான்.

* ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை உருவாக்கியவர், நேதாஜி.

* கரையான் அரிக்காத மரம், தேக்கு.

* ஏலக்காய்ச்செடி, சுமார் 40 ஆண்டுகள் வரை பலன் தரும்.

* அறிவு வளர்ச்சி அதிகமுள்ள கடல் பிராணி, டால்பின்.

* `திரவத்தங்கம்' என்று அழைக்கப்படுவது, பெட்ரோல்.

* உலகின் முதல் கண்வங்கி, அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் தொடங்கப்பட்டது.

* கண்ணீர்ச் சுரப்பின் பெயர், லாக்ரிமல் கிளாண்ட்ஸ்.

* ரஷிய நாட்டு நாணயத்தின் பெயர், ரூபிள்.

* கணிதத்தில் பூஜ்யத்தைச் (0) சேர்த்தவர், ஆரியபட்டர்.                   * 24 மணி நேரத்தில் (ஒருநாள்) சுமார் 3 அடி உயரம் வளரும் திறன் மூங்கிலுக்கு உண்டு.

* ஆக்டோபசுக்கு 3 இதயங்கள் உள்ளன.

* பெரும்பாலான உதட்டுச்சாயங்களில் (லிப்ஸ்டிக்) மீனின் செதில்கள் பயன்படுத்தப் படுகின்றன.

* அட்டைப்பூச்சிகளுக்கு 4 மூக்குகள் உள்ளன.

* நீலநிறத்தைப் பார்க்க முடிந்த ஒரே பறவை, ஆந்தை.

* கால் நகங்களைவிட, கை நகங்கள் 4 மடங்கு வேகத்தில் வளர்கின்றன.

* மனிதனின் தொடை எலும்புகள், கான்கிரீட் கலவையை விட வலிமை வாய்ந்தவை.

* நெருப்புக்கோழியின் கண்கள், அதன் மூளையைவிடப் பெரியதாக இருக்கும்.

* டால்பின்கள், மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் நீந்தும்.

* 13-ம் நூற்றாண்டில், ஞானதேவ் என்ற கவிஞர் தான் `பரமபத' விளையாட்டைக் கண்டுபிடித்தார்.

* நத்தைகள், 3 ஆண்டுகள் வரை தூங்கும் தன்மை பெற்றவை.

* ராணி எறும்புகள், 30 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.

* மனிதர்களின் தோலுக்கும், தசைக்கும் இடையிலான ஒட்டுதல் தான் கன்னத்தில் விழும் குழிக்கு காரணம்.

பொது அறிவுத் தகவல்கள்!

ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பெயர்கள் ‘Little Boy,’ ‘Fat man’.

பேடன் பவலால் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கத்தின் குறிக்கோள், ‘Be prepared’.

Couch Potato’: எப்போதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பவர்.

Gentleman at Large’: வேலையில்லாத மனிதன்!

எஸ்கிமோக்களின் வீட்டுக்குப் பெயர்: இக்லூ.

கங்காருக் குட்டியை ‘Joey’ என்பர்.

‘கரிபி ஹட்டாவோ’(வறுமையே வெளியேறு) என்று முழங்கியவர் இந்திரா காந்தி.

ஜெய் ஜவான், ஜெய் கிஸான்’ என்று முழங்கியவர் லால்பகதூர் சாஸ்திரி.

ஜவஹர்லால் நேரு, ஹிட்லர், சார்லி சாப்ளின் மூவரும் ஒரே ஆண்டில் (1889) பிறந்தவர்கள்.

முகமது நபி, ஷேக்ஸ்பியர், முத்துராமலிங்கத் தேவர்... மூன்று பேரும் தங்கள் பிறந்த தேதி அன்றே மறைந்தனர்.

ஆசியாவிலேயே முதல் முதலாக விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. அறிமுகப்படுத்தியவர் ராஜாஜி.

பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பிறந்தநாள் வரும். பிப்ரவரி 29 அன்று பிறந்தவர் மெரார்ஜி தேசாய்.

கொறிக்கும் விலங்குகளில் (Rodents) பெரியது Capybara .

ஹூலக் (Hoolock) எனப்படும் கிப்பன் (Gibbon) குரங்குதான் இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லாக் குரங்கு.

இந்திய ஹாக்கி வீரர் த்யான்சந்தின் வாழ்க்கை வரலாற்றின் பெயர் ‘Goal’.

பேஸ்பால் விளையாட்டு களம் ‘Diamond’ எனப்படுகிறது.

‘Bogey’, Bunker‘, ‘Bormy’ போன்ற வார்த்தைகள் போலோ விளையாட்டோடு தொடர்புடையவை.

இந்தியா சுதந்திரமடைந்தபோது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஆச்சார்ய கிருபளானி.

மார்க்ரெட் மிட்சல் எழுதிய ஒரே நாவலான ‘Gone with the wind’ அவருக்கு மிகப்பெரிய புகழைத் தேடித்தந்தது.

ஐரோப்பிய நாடுகளின் காலனியாக இருந்திராத ஒரே ஆப்பிரிக்க நாடு லைபீரியா (Liberia).

ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லாகான், சிதார் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் இருவரும் வாரணாசியில் பிறந்தவர்கள்.

ஷேக்ஸ்பியர் படைப்புகளில் the என்ற சொல் 27, 457 முறையும் and என்ற சொல் 25, 285 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

போப்பாண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட முதல் நாவல் ’பென்ஹர் (Benhur). நூலின் ஆசிரியர் Lewis Wallace. பென்ஹர் படத்தை இயக்கியவர் வில்லியம் வைலர்.

அலிபாபாவும் நாற்பது திருடர்களும், அலாவுதீனும் அற்புத விளக்கும், சிந்துபாத் மாலுமியின் சாகஸங்கள் ஆகியவை '1001 அரேபிய இரவுகள்' நூலில் உள்ள கதைகள்.

இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் 'தெனாலி' என்ற ஊர் இருப்பதுபோல இலங்கையிலும் 'தெனாலி' என்ற ஊர் உள்ளது.

தெனாலிராமன் எழுதிய நூலின் பெயர் மகாதேவ பாண்டுரங்கம்.

விக்கிரமாதித்தன் கதைகளில் வரும் அமைச்சரின் பெயர் பட்டி.

இந்தியா சுதந்திரமடையும்போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் கிளமன்ட் அட்லி.

உலகிலேயே மிக அதிகமான ஆண்டுகள் ஒரு நாட்டின் அதிபராக இருந்து வருபவர் ஃபிடல் காஸ்ட்ரோ (கியூபா நாடு, 47ஆண்டுகள்).

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் நினைவாக அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டன் DC (District of Columbia) எனப்படுகிறது.

DC என்பது அறிவியலில் நேர் மின்சாரம்(Direct Current). அமெரிக்காவில் District of Columbia!

1912 ஏப்ரல் மாதம் 'டைட்டானிக்’ அட்லாண்டிக் கடலில் மூழ்கியது.

உயர் பதவியில் இருப்பவர்கள் தங்கள் உறவினர்களை முக்கியமான பதவிகளில் அமர்த்திக் கொள்வதை Nepotism என்பர்.

தமிழில் முதல் உரைநடை நூல், வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதை.

இந்திய - பாகிஸ்தான் பிரிவினை பற்றி எழுதப்பட்ட புத்தகங்களில் முக்கியமானது குஷ்வந்த் சிங் எழுதிய ‘Train to Pakistan’.

உஸ்தாத் அம்ஜத் அலிகான் பிரபல சரோத் (Sarod) இசைக்கலைஞர்.

ஜேம்ஸ்பாண்டின் '007' என்ற எண், கொல்வதற்கு லைசன்ஸ் பெற்றவர் (Licensed to kill) என்பதைக் குறிக்கிறது.

அகராதியில் அதிக அர்த்தங்களைக் கொண்டுள்ள வார்த்தை set.

ஆந்தைகள் கூட்டம்: ‘A Parliament of owls’

காக்கைகள் கூட்டம்: ‘A murder of crows’

டேவிட் நிவன், ஷான் கானரி, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ்பிராஸ்னன் ஆகியோர் ஜேம்ஸ்பாண்டாக நடித்துள்ளனர்.

Dr. No என்ற ஜேம்ஸ்பாண்ட் கதையில் ‘Dr. No’ (வில்லன்)-க்கு இதயம் உடலின் வலப்புறத்தில் இருக்கும்.

இயான் ஃப்ளமிங் கதாபாத்திரத்துக்கு சூட்டிய ஜேம்ஸ்பாண்ட் என்ற பெயர், அவர் காலத்தில் புகழ்பெற்றிருந்த பறவையியலாளரின் பெயர்.

விலாடிமிர் இலியச் லெனின்
என்பது லெனினின் இயற்பெயர்.

சார்பியல் தத்துவத்தைக் கண்டுபிடித்தபோது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு வயது 26.

ஜான் தி. கென்னடி எழுதிய ‘Profiles in courage’ புலிட்சர் பரிசு பெற்றுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதிகளின் இருப்பிடத்திற்கு ‘வெள்ளை மாளிகை’ என்று பெயரிட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட். மிக இளம் வயதில் அமெரிக்க ஜனாதிபதி ஆனவர் தியடோர் ரூஸ்வெல்ட். முப்பத்தொன்பது புத்தகங்கள் எழுதிய தியடோர் ரூஸ்வெல்டின் முதல் புத்தகம், 'தி நேவல் வார் ஆஃப் 1812'. டெடி பியர், தன் பெயரை தியடோர் ரூஸ்வெல்ட்டிடமிருந்துதான் பெற்றது.

டாக்டரேட் பட்டம் பெற்ற ஒரே அமெரிக்க ஜனாதிபதி வுட்ரோ வில்ஸன்.

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்து, பின்னர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆனவர் வில்லியம் டாஃப்ட் (William Taft).

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரிவர்களில் 34% பேர் இந்தியர்கள்.

அமெரிக்காவிலுள்ள 38% டாக்டர்களும் 12% விஞ்ஞானிகளும் இந்தியர்கள்.

ஜான் ஆடம்ஸ், ஜேம்ஸ் மன்றோ, தாம்ஸ் ஜெஃபர்ஸன் ஆகிய ஜனாதிபதிகள் அமெரிக்க சுதந்திர தினமான ஜுலை 4-ல் மறைந்தவர்கள்.

நான்கு முறை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட். பிறகுதான், ‘ஒருவர் இருமுறைக்கு மேல் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட முடியாது’ என்ற சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இந்தியாவுக்கு வந்த முதல் அமெரிக்க அதிபர் ஐசன் ஹோவர்.

பதவியிலிருக்கும்போது படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதிகள்: ஆப்ரஹாம் லிங்கன், ஜேம்ஸ் கார்ஃபீல்டு, வில்லியம் மெக்கின்லி மற்றும் ஜான் எஃப். கென்னடி ஆகியோர்.

1955ல் தொடங்கப்பட்ட மிக்கி மவுஸ் கிளப் டி.வி.ஷோவின் மூலம்தான் பாப் நட்சத்திரம் பிரிட்னி ஸ்பியர்ஸ் அறிமுகமானார்.

* அமில மழை உண்டாக காரணம், காற்று மாசுபடுதலாகும்.

* தமிழிசைச் சங்க தலைவர்களில் முதன்மையானவர் - ராஜா சர் முத்தையா செட்டியார்.

* நமது அசோகச் சக்கரத்தில் 6 விலங்குகள் உள்ளன.

* தமிழகத்தில் கிடைக்கும் தாதுப்பொருள் - அலுமினியத் தாது.

* நோபல் பரிசு பெற்ற இரண்டாவது தமிழர் - சந்திரசேகர சுப்பிரமணியம்.

* இந்தியாவில் முதல் மகளிர் காவல்நிலையம் கேரளமாநிலம் கோழிக்கோடு நகரில் உருவாக்கப்பட்டது.

* டாபர்மேன், ஜெர்மன் செப்பர்டு, அல்சேசியன் என ஒரு சில நாய்களைத்தான் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் உலகில் சுமார் 200 வகை நாய்கள் உள்ளன



* மங்கோலியர்கள் இந்தியாவை தெய்வத்தின் நாடு என்று அழைத்தார்கள்.

* இந்தியாவின் வரைபடத்தை வரைந்தவர் டா ஆன்வில் என்ற பிரெஞ்சுக்காரர்.

* இந்தியாவில் முதன் முதலில் துவக்கப்பட்ட மாநிலம் உத்தரபிரதேசம்.

* இந்திய மொழிகளில் முதன் முதலாக கலைக்களஞ்சியம் தமிழில் உருவாக்கப்பட்டது.

* இந்தியாவில் அதிக நாட்கள் உயிர் வாழ்பவர்கள் பஞ்சாபியர்.




* உலகின் மிகப்பெரிய தங்கச் சந்தை இந்தியாவாகும்.

* தும்பா ராக்கெட் ஏவுதளம் கேரள மாநிலத்தில் உள்ளது.

* கார்த்திகை மலர் என்று அழைக்கப்படுவது காந்தள் மலர்.

* தென்கொரிய நாட்டின் தலைநகர் சியோல்.

* பாராசூட் போன்ற பெரிய பலூன்களில் நிரப்பப்படுவது ஹீலியம் வாயு.

* கோவா மாநிலம் பானாஜியில் கடல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது.


* இந்தியாவின் முதல் ரேடியோ டெலஸ்கோப் கொடைக்கானலில் 1952-ம் ஆண்டு நிறுவப்பட்டது.

* இந்தியாவின் முதல் நினைவு நாணயம் 1964-ல் வெளியிடப்பட்டது.

* இந்தியாவின் முதல் நீர்மின்நிலையம் கர்நாடக மாநிலம் சிவசமுத்திரத்தில் 1902-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆசியாவின் முதல் நீர்மின் நிலையமும் இதுவே.

* இந்தியாவில் மூன்று கடல்கள் சந்திக்கும் இடம் கன்னியாகுமரி.

* இந்தியாவின் பெரிய நதிகளில் ஒன்றான யமுனை கடலில் கலப்பது இல்லை.

* இந்தியாவின் செயற்கைத் துறைமுகம் கொச்சின்.

* இந்தியாவின் பெரிய துறைமுகம் மும்பை துறைமுகம்.


பாலூட்டி: கன்று ஈன்று பாலூட்டுபவை பாலூட்டி களாகும். இவை காற்றை சுவாசிப்பவை. பெரும்பாலும் நிலத்தில் வாழ்பவை: மனிதன், மிருகங்கள். சில பாலூட்டிகள் நீரிலும் வாழும். உதாரணம்: திமிங்கலம்.

பறவைகள்: பறக்க சிறகுகள் உடையவை. இவை முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். பெங்குவின் போன்ற சில பறவைகளால் பறக்க முடியாது.

ஊர்வன: குளிர் ரத்தப் பிராணிகள். சுற்றுப்புறச் சூழ்நிலைகளுக்கு தக்கபடி அது மாறவும் கூடும். உதாரணம்: ஓணான்.

இருவாழ்விகள்: தரையிலும், தண்ணீரிலும் வாழக் கூடிய தன்மை பெற்ற உயிரினங்கள் இருவாழ்விகளாகும். அவை குளிர் ரத்தப் பிராணிகள். உதாரணம்: தவளை.

மீன்கள்: தண்ணீரில் வாழும் முதுகெலும்புள்ள உயிரினங்கள் இவை. கடல் நீரில் அதிக மீன் இனங்கள் வாழ்கின்றன.

பொது அறிவு வினா-விடை - வரலாறு

1. இரண்டாம் கர்நாடக போரின் முடிவில் கீழ்க்கண்ட ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று.

அ. அய்-லா-சாப்பேல் உடன்படிக்கை
ஆ. பாண்டிச்சேரி உடன்படிக்கை
இ. பாரிசு உடன்படிக்கை
ஈ. வட சர்க்கார் உடன்படிக்கை

2. கனிஷ்கரின் தலைநகர்

அ. காஷ்கர்
ஆ. யார்கண்டு
இ. பெஷாவர்
ஈ. எதுவுமில்லை

3. பொருத்துக:

I. கன்வ வம்சம் - 1. காட்பீசஸ்
II. சுங்க வம்சம் - 2. காரவேலர்
III. கலிங்க வம்சம் - 3. வசுதேவர்
IV. குஷான வம்சம் - 4. புஷ்ய மித்ரம்


அ. I-3 II-4 III-1 IV-2
ஆ. I-4 II-3 III-1 IV-2
இ. I-3 II-4 III-2 IV-1
ஈ. I-4 II-3 III-2 IV-1

4. பாண்டியர்களின் ஓவியக்கலை வளர்ச்சியை பறைசாற்றுவது

அ. மதுரை
ஆ. தொண்டி
இ. சித்தன்னவாசல்
ஈ. மானமாமலை

5. நாலந்தா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர்

அ. ஹரிதத்தர்
ஆ. ஜெயசேனர்
இ. தர்மபாலர்
ஈ. எவருமில்லை

6. குஷானர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்

அ. கிரேக்கம்
ஆ. பாரசீகம்
இ. இந்தியா
ஈ. சீனா

7. தக்கர்களை ஒடுக்கிய ஆங்கிலேய ஆளுநர்?

அ. வில்லியம் பெண்டிங்
ஆ. காரன் வாலிஸ்
இ. வாரன் ஹேஸ்டிங்ஸ்
ஈ. டல்கௌசி

8. 'புத்த தத்தர்' யாருடைய காலத்தில் வாழ்ந்தார்

அ. கரிகாலன்
ஆ. இளஞ்சேரலாதன்
இ. அச்சுத களப்பாளன்
ஈ. தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்

9. சோழர்களைப் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ள வெனிசு வரலாற்று ஆசிரியர்

அ. அல்பருனி
ஆ. மார்க்கோ போலோ
இ. டாக்டர் ஜோன்ஸ் வில்லியம்
ஈ. இபன்படூடா

10. சமுத்திர குப்தனால் சிறை பிடிக்கப்பட்ட பல்லவ அரசன்

அ. பரமேஸ்வரவர்மன்
ஆ. விஷ்ணுகோபன்
இ. சிம்ம விஷ்ணு
ஈ. எவருமில்லை

விடை: 1. ஆ 2. இ 3. இ 4. இ 5. இ 6. ஈ 7. அ 8. இ 9. ஆ 10. ஆ






81. பல்லவ மன்னர்களின் தலை நகரமாக எது விளங்கியது?

அ. சென்னப்பட்டினம்
ஆ. காஞ்சிபுரம்
இ. மதுரை
ஈ. மகாபலிபுரம்

82. களப்பிரர்களின் காலம் எது?

அ. ஒன்று முதல் 3ம் நூற்றாண்டு
ஆ. 3 - 6ம் நூற்றாண்டு
இ. 5 - 8ம் நூற்றாண்டு
ஈ. இவை எதுவுமில்லை

83. யாருடைய ஆட்சியில் வர்த்தமான மகாவீரர் மற்றும் கௌதம புத்தர் ஆகியோர் தங்களது உபதேசங்களை மேற்கொண்டனர்?

அ. அஜாத சத்ரு
ஆ. பிம்பிசாரர்
இ. நந்திவர்த்தனர்
ஈ. அசோகர்

84. யாருடைய காலத்தில் கிராம சமூகம் அதிக அதிகாரங்களைப் பெற்றிருந்தது?

அ. பல்லவர்கள்
ஆ. சோழர்கள்
இ. குப்தர்கள்
ஈ. முகலாயர்கள்

85. சுதந்திரப் போரின் போது அமெரிக்காவில் எத்தனை காலனிகள் இருந்தன?

அ. 14
ஆ. 13
இ. 15
ஈ. 12

86. கி.பி. 1451 வரை இந்தியாவை ஆண்ட அரசர்கள் எந்த இனத்தை சார்ந்தவர்கள்?


அ. துருக்கியர்
ஆ. அரேபியர்
இ. பதானியர்
ஈ. ஆப்கானியர்

87. தைமூர் இந்தியாவிற்குள் படையெடுத்த ஆண்டு

அ. 1326
ஆ. 1349
இ. 1372
ஈ. 1398

88. 'அல்பரூனி' யாருடன் இந்தியா வந்தார்

அ. முகமது கஜினி
ஆ. முகமது கோரி
இ. முகமது பின் காசிம்
ஈ. தைமூர்

89. கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொறுத்தப்படவில்லை

அ. கன்னோசி - பிரதிகாரர்கள்
ஆ. ஆஜ்மீர் - சவுக்கான்கள்
இ. சந்தேளர்கள் - பந்தல்கண்ட்
ஈ. பாளர்கள் - டெல்லி

90. சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைக்கப்படுபவர்


அ. முதலாம் ராஜராஜன்
ஆ. முதலாம் குலோத்துங்கன்
இ. முதலாம் ராஜேந்திரன்
ஈ. இரண்டாம் ராஜராஜன்



விடை: 81. ஆ 82. ஆ 83. ஆ 84. ஆ 85. ஆ 86. அ 87. ஈ 88. அ 89. ஈ 90. ஆ

சுவாரஸ்சியமான அறிவுத் தகவல்கள்

* இந்தியாவில் அணுசக்தி கமிஷன் 1948 ஆகஸ்ட் 10-ம் தேதி நிறுவப்பட்டது.

* வேலூர் கோட்டை 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

* "மில்லினியம் மகாத்மா விருது' கேரளா முன்னாள் முதல்வர் கருணாகரனுக்கு வழங்கப்பட்டது.

* தமிழகத்தில் கரும்பு ஆராய்ச்சி நிலையம் கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மண்டலத்தில் உள்ளது.

* இந்திய திரைப்படத் தந்தை என்று போற்றப்படுபவர் தாதா சாகிப் பால்கே. சினிமா துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் இவரது பெயரில் விருது வழங்கப்படுகிறது.

சுவாரஸ்சியமான அறிவுத் தகவல்கள் !!!

1)14ம் லூயி மன்னன் வாழ்க்கையில் குளித்தது மூன்றே முறை தான்.
2)இந்திய கணித மேதை ராமானுஜர் கண்டுபிடித்த கணித உண்மைகள் 4000ஆகும்.
3)திபெத்தில் மீனை தெய்வமாக கருதுவதால் மீனை சாப்பிடமாட்டார்கள்.
4)நத்தையில் ஆண்,பெண் கிடையாது.
5)கணித சூத்திரங்களால் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் நெப்டியூன்(Neptune).
6)வலதுகால் செருப்புக்கள் தான் அதிகம் தேயும்.
7ஜப்பானியர்கள் இரு கைகளாலும் எழுதுவார்கள்.8மகளிர்க்கென காற்பந்து ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டது -1996 அட்லாண்டா (USA) ஒலிம்பிக்கில்
9) எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கண்கள் தெரியுமா?விடையினை கண்டுபிடித்தால் Comments பண்ணவும் நண்பர்களே?

அறிவுக்கு விருந்து !!!

பூமியானது தன்னையும் சுற்றிக்கொண்டு சூரியனைச்சுற்றி வருகின்றது என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் அறிந்திருப்பீர்கள். பூமியில் இருக்கும் நாம் முதலில் நம்மைச்சுற்றி என்ன நடக்கின்றது என்பதை அவதானித்துக்கொள்ள வேண்டும் என்பதை பூமி சொல்லித்தரும் பாடமாக அறிந்து கொள்வோம். அத்தோடு இதையும் அறிந்து கொள்ளுங்கள்.


பூமியின் நீர்ப்பரப்பு: 139,440,000 சதுர கி.மீ


பூமியின் நிலப்பரப்பு: 14 கோடி 90லட்சம் கி.மீxகி.மீ


பூமியின் விட்டம்: 7920 கி.மீ


பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம்: 240,000 கி.மீ


பூமியிலிருந்து வாயு பரந்திருக்கும் தூரம் :1000 கி.மீ


பூமி சுழலும் வேகம்: 66,600 கிமீ/மணிக்கு


பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போது : அமாவாசை


சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வருவது: பெளர்ணமி


பூமி சுழலும் பக்கம்: மேற்கிலிருந்து கிழக்காக


பூமிக்கு சூரிய ஒளி வர எடுக்கும் நேரம்: 480 விநாடிகள்


சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வரும் சந்திரன் சூரியனை மறைப்பதால் ஏற்படும் நிழல் பூமியின் மீது விழும் போது “சூரிய கிரகணம்” ஏற்படும் அதாவது அமாவாசையில் வரும்


சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும் பூமியின் நிழல் சந்திரனை மறைக்கும் போது “சந்திரகிரகணம்” ஏற்படும்; அதாவது பெளர்ணமியில் வரும்

தெரிந்துக் கொள்ளுங்கள் !!!

* கணடங்களில் பெரியது ஆசியா கண்டம்.
* கடல்களில் பெரியது பசுபிக் பெருங்கடல்.
* தீவுகளில் பெரியது ஆஸ்திரேலியா தீவு.
* சிகரங்களில் பெரியது எவரெஸ்ட் சிகரம்.
* மலைகளில் பெரியது இமயமலை.
* ஆறுகளில் பெரியது அமேசான் ஆறு.
* ஏரிகளில் பெரியது காஸ்பியன் ஏரி.
* பாலைவனங்களில் பெரியது சஹாரா பாலைவனம்.


* பாறைகளைப் பற்றிய படிப்புக்கு பெட்ராலஜி என்று பெயர்.
* வெள்ளை யானைகளின் நிலம் என்றழைக்கப்படுவது தாய்லாந்து.
* மலைகளின் நிலம் என்றழைக்கப்படுவது மியான்மர்.
* மணலின் வேதியியல் பெயர் சிலிகான் - டை - ஆக்ஸைடு.
* மண்புழுவுக்கு ஐந்து இதயங்கள் உள்ளன.
* மிக வெப்பமான கோள் வெள்ளி.
* உலகில் 2000 வகையான பாம்புகள் உள்ளன.
* சூரிய ஒளி பூமியை வந்தடைய 8.3 நிமிடங்கள் ஆகின்றன.* அரபிக் கடலின் ராணி எனப்படுவது கொச்சின்.
***********************
* இந்தியாவின் மிகப் பெரிய நூலகம் உள்ள இடம் கொல்கத்தா.
* ஓர் அணிலின் சராசரி ஆயுட்காலம் ஒன்பது ஆண்டுகள்.
* ஃபிலிப்பைன்ஸ் தீவுகளைக் கண்டுபிடித்தவர் மெகல்லன்.
* இரண்டாம் அசோகர் என்றழைக்கப்பட்டவர் கனிஷ்கர்.
* பாண்டிச்சேரியின் பழைய பெயர் வேதபுரி.
* செப்பு நாணயங்களை வெளியிட்டவர் முகமது பின் துக்ளக்.
* எரிமலை இல்லாத கண்டம் ஆஸ்திரேலியா.
***********************



தமிழ்நாட்டில் பண்டைய தமிழர்களின் வரலாற்றுச் சான்றாக பத்து அரண்மனைகள் உள்ளன.
அவை,
1. மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை
2. திருச்சி மங்கம்மாள் அரண்மனை
3. தஞ்சாவூர் சரபோஜி அரண்மனை
4. புதுக்கோட்டை அரண்மனை
5. சென்னை சேப்பாக்கம் அரண்மனை
6. சிவகங்கை அரண்மனை
7. எட்டயபுரம் அரண்மனை8. இராமநாதபுரம் அரண்மனை
9. பத்மனாபுரம் அரண்மனை
10. மதுரை அரசி மங்கம்மாள் அரண்மனை
***********************


* ராக்கெட்டினை முதலில் கண்டறிந்தவர் சீனர்கள். இது 13ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டது.
* நமது உடலில் 6 லிட்டர் ரத்தம் உள்ளது. இதில் 4 1/2 லிட்டர் உடல் முழுவதும் சுற்றி வருகிறது. மீதி 1 1/2 லிட்டர் ரத்தத்தை சேமிப்பாக உடல் வைத்துள்ளது.
* செவ்வாய் கிரகத்தில் ஒருநாள் என்பது 24 1/2 மணி நேரம். கோடை நண்பகலில் கூட இங்கு 16டிகிரி c நிலை இருக்கும். குளிர்கால இரவிலோ 85டிகிரி c வந்து விடும்.
* 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே ஆமைகள் பூமியில் வாழ்ந்து வருகின்றன. இவை மெதுவாகச் செல்லக் கூடியவை. இவற்றுக்குப் பற்கள் கிடையாது. தாவர வகை உணவைச் சாப்பிடுவதில்லை. 300 ஆண்டுகளுக்கு மேல் ஆமைகள் உயிர் வாழ்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

***********************





* தென் அமேரிக்கா பறவைகளின் கண்டம் என அழைக்கப்படுகிறது.
* இந்தியாவில் மிகப் பெரிய பால் பண்ணை குஜராத் மாநிலத்தில் உள்ளது.
* இந்தியாவில் முதன்முதலில் காப்பிச் செடி சிக்மகளூர் என்ற இடத்தில் பயிரிடப்பட்டது.
* உலகிலேயே மிகப் பெரிய வெந்நீர் ஏரி நியூசிலாந்து நாட்டில் உள்ளது.
* ஆஸ்திரேலியா நாட்டிற்கு இரு தேசியகீதங்கள் உள்ளன.
* இந்தியாவையும், பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக் கோட்டின் பெயர் ரெட்கிளிப் எனப்படுகிறது.
நன்றி தினமணி!

***********************


* தொழில்புரட்சி முதன் முதலில் நடந்த நாடு இங்கிலாந்து.
* பிரிட்டனின் தேசிய மலர் ரோஜா.
* இந்தியாவின் தேசிய விலங்கு புலி.
* சம்பா நடனத்திற்கு புகழ் பெற்ற நாடு பிரேசில்.
* சோவியத் ரஷ்ய ராணுவத்தின் பெயர் ரெட் ஆர்மி.
* சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவுக்கு கொடுத்த நாடு பிரான்ஸ்.
நன்றி தினமணி!
***********************


* 1905 - சுஸான்னே ஆர்டி டாட்டா என்னும் பெண்மணிதான் இந்தியாவில் முதன்முதலாக கார் ஓட்டியவர்.
* 1916 - தோண்டோ கேசவ் கார்வ் என்பவரால் பெண்களுக்கான முதல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. முதலாண்டில் எத்தனை மாணவிகள் படித்தார்கள் தெரியுமா? 5 பேர் தான்.
* 1927 - அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது.
* 1959 - அன்னா சாண்டி இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதிவியேற்றார்.
* 1966 - கேப்டன் துர்கா பானர்ஜி, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானச் சேவையின் முதல் பெண் விமானியாவார். இதே ஆண்டில், கமலாதேவி சடோபாத்யாய 'மகசேசே' விருதைப் பெற்றார். இந்தியாவின் முத்ல் பெண் பிரதமராக இந்திரா காந்தி பதவியேற்றார்.
* 1970 - ஆசிய விளையாட்டுப் போட்டியில் கமல்ஜித் சாந்து முதன் முதலாக தங்கப் பதக்கம் வென்றார்.
* 1972 - இந்தியாவின் முதல் ஐ.பி.எஸ். அதிகாரியாக கிரண் பேடி காவல் துறையில் பதவியேற்றார்.* 1989 - முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியாக எம். பாத்திமா பீவி பதிவியேற்றார்.
* 1997 - கல்பனா சாவ்லா, விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் என்னும் சாதனைக்குச் சொந்தக்காரர்.
* 2005 - பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த மந்திர் ராஜ்புட், முதல் பெண் ரயில் எஞ்சின் ஓட்டுனராக ஆஸ்திரேலியா வேல்ஸ் ரயில் கார்ப்பரேஷனில் பணிபுரிந்து சாதனை படைத்தார்.
* 2007 - இந்தியாவின் முத்ல் பெண் குடியரசுத் தலைவராக இருப்பவர் பிரதிபா பாட்டீல்.
நன்றி தினமணி!
***********************


* நாம் உபயோகப்படுத்தும் 'டை' 3300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.
* இந்தியாவில் மே தினத்தை 1927 -ம் ஆண்டுலிருந்து கொண்டாடப்படுகிறது.
* சிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும்.
* பள்ளிக்கூடத்தை முதன்முதலில் உருவாக்கியவர்கள் ரோமானியர்கள்.
* இந்தியாவின் முதல் வங்கி பிரசிடென்ட் பேங்க்.
நன்றி தினமணி!
***********************


* ஆண்டுதோறும் உலகில் எட்டு லட்சத்திற்கும் அதிகமான நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. புவியின் உட்புறத்தில் ஏற்படும் நிலநடுக்கம் 'வல்கானிக்' என்றும், மலைப்பகுதிகளில் நிலச்சரிவுடன் தோன்றும் சிலநடுக்கம் 'டெக்டானிக்' என்றும், கடலுக்கடியில் உருவாகி கொந்தளிப்பை ஏற்படுத்தும் நிலநடுக்கம் ' சம்மாரின்' என்றுஇம் அழைக்கப்படுகிறது.
* 1906 - ம் ஆண்டு பசிபிக் கடலில் கொலம்பியாவிற்கு அருமே ஏற்பட்ட நிலநடுக்கம் தான் உலகின் மிகக் கடுமையான நிலநடுக்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ரிக்டரில் 8.9 ஆகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
* ஜூன் 19 - ம் தேதி உலக தந்தையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.* அமெரிக்காவில் வேர்க்கடலையை விட பாதாம் பருப்பின் விலை மலிவு. இதனால் அங்குள்ள இந்துக் கோயில்களில் பாதாம் பருப்பு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
* ஏப்ரல் 23 - ம் தேதி உலக புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது.
* ஏப்ரல் 7 - ம் தேதி உலக சுகாதார தினமாக அனுசரிக்கப்படுகிறது.
நன்றி தினமணி!


* இந்தியாவில் நுழைந்த முதல் ஐரோப்பியர் அலெக்ஸாண்டர்.
* தாமோதர் நதி வங்காளத் துயரம் என்று அழைக்கப்படுகிறது.
* அண்டார்டிகா வெள்ளைக் கண்டம் என்று அழைக்கப்படுகிறது.
* சாக்பீஸின் வேதிப் பெயர் கால்சியம் கார்பனேட்.
* ரைட்டர்ஸ் பில்டிங் என்ற கட்டடம் கொல்கத்தாவில் உள்ளது.
* ஹெபடைடிஸ் - பி என்ற வைரஸ் ஏற்படுத்தும் நோய் மஞ்சள் காமாலை.
* மின்மினிப் பூச்சி வண்டு இனத்தைச் சேர்ந்தது. பெண் மின்மினிப் பூச்சிகளே அதிக ஒளி தரும். பறக்கும் போதுதான் மின்மினி பிரகாசிக்கிறது. தென்னாப்பிரிக்காவில் உள்ள மின்மினிப் பூச்சிகள் வெளியிடும் ஒளியில் புத்தகம் கூட படிக்க முடியுமாம். மின்மினியின் பிரதான உணவு நத்தைகள் தான்.
* இந்தியாவின் பூங்கா நகரம் பெங்களூரு.
* ப்ரஷியா என்னும் பழைய பெயரை உடைய நாடு ஜெர்மனி.
* தங்க உரோம நாடு என்பது ஆஸ்திரேலியா.
* சாசுவதமாகன நகரம் என்று ரோம் நகரம் அழைக்கப்படுகிறது.
* இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு 1911-ம் ஆண்டு மாற்றப்பட்டது.
* வெளவால்களில் மொத்தம் 2000 வகைகள் உள்ளன.
* கொசுவில் 2700 வகைகள் உள்ளன.
* யானையின் தும்பிக்கையில் 40000 தசைகள் உள்ளன.
* குரங்குகளில் அழகானது மர்மோசைட் என்ற வகை குரங்கு.
* நம் கண்களில் லாக்ரிமல் கிளாண்ட் என்ற சுரப்பியால் சுரக்கப்படும் லாக்ரிமா என்ற திரவத்தைத்தான் பொதுவாக கண்ணீர் என்கிறோம்.
நன்றி தினமணி!
***********************


* ஆந்தையில் மொத்தம் 133 வகை உண்டு. மற்ற பறவைகளின் கண்களைப் போல ஆந்தைகளின் கண்கள் அதன் விழிக்க்குள் இலகுவாக அசைவதில்லை. கண்கள் இரண்டும் முகத்தின் முன்னாலேயே பக்கவாட்டில் இல்லாமல் இருக்கின்றன. இந்த குறையை ஈடு செய்ய தன் தலையை 180டிகிரி வரை சுற்றி பார்க்க முடியும்.
* மாட்டுக்கு பற்கள் தேய ஆரம்பித்து விட்டால் அது பத்துவயதிற்கு மேற்பட்டது.
* எவரெஸ்ட் சிகரத்தை சாகர் மாதா என்று நேபாள நாட்டினர் அழக்கின்றனர்.
* ரிசன்டோலியா என்ற ஆஸ்திரேலியத் தாவரம் மண்ணுக்குள் மணம் வீசும் மலரைக் கொண்டது.
* பவ்டக் என்ற பர்மியச் செடி மூன்று முறை தொடர்ந்து பூத்தால் பருவமழை தொடங்கி விடும்.
* கோட்ஸ்பியர்டு என்ற ஆப்பிரிக்க நாட்டுப் பூச்செடியில் ஒவ்வொரு கொத்திலும் பத்தாயிரம் கொட்டுக்கள் வரை இருக்கும்.
* ஒரு இதழோ அல்லது ஒன்பது இதழ்களோ உள்ள பூக்களை எங்கும் காணமுடியாதாம்.
* ஆஸ்திரேலிய மலரான கேண்டில் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும். கற்றழை எனப்படும் கள்ளி 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும்.
நன்றி தினமணி!

***********************


* இந்தியாவில் வீரச் செயலுக்காகக் கொடுக்கப்படும் இரண்டாவது உயர்ந்த விருது மகாவீர் சக்ரா விருது.
* ஜனாதிபதி நெருக்கடி நிலை பிரகடனம் செய்தால் மக்களின் அடிப்படை உரிமை தற்காலிகமாக நீக்கப்படும்.
* இங்கிலாந்து நாட்டின் புக்கர் பரிசை முதன் முதலாகப் பெற்ற இந்தியர் சல்மான் ருஷ்டி.
* ரத்தச் சிவப்பணுக்கள் முதிர்ச்சிக்கு காரணமாய் அமைவது சயனா கோபலமின்.
* இந்தியா பாகிஸ்தானை பிரித்து இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கும் திட்டத்தை வெளியிட்டவர் மவுன்ட் பேட்டன்.
* நார் தயாரிக்க பயன்படும் பாக்டீரியா கிளாஸ்டரியம்.
* தங்கம் 60 நாடுகளில் வெட்டி எடுக்கப்படுகிறது.
* தங்கம் அதிகமாக விற்பனையாகும் நாடு இந்தியா.
* 22 கேரட் தங்கம் என்பது 91.67% தூய்மையானது.
* தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆண்டுதோறும் 600 டன்கள் தங்கம் பயன்படுத்தப்படுகிறது.
* பூமியில் இன்னும் 41 ஆயிரம் டன் தங்கம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
* இங்கிலாந்து நாட்டு மக்கள் 9 காரட் தங்க நகைகளை விரும்பி அணிகிறார்கள்.
நன்றி தினமணி!





***********************



***********************நன்றி தினமணி!
***********************



*லெகோஸ் என்ற ஒன்றுடன் ஒன்று செருகிக் கொள்ளும் வண்ண பிளாஸ்டிக் துண்டுகள் 1949ம் ஆண்டு டென்மார்க்கைச் சேர்ந்த கிறிஸ்டியான்ஸன் என்பவரால் கண்டுபிகிக்கப்பட்டது. சிறுவர்கள் இவற்றைக் கூட்டி வைத்து பொம்மை நகரங்கள் கட்ட உதவிய இந்தத் துண்டுகள் இதுவரை இரண்டாயிரம் கோடிக்கு மேல் உற்பத்தி செய்யப்பட்டுவிட்டன. இன்றும் மாறாமல் முதலிடம் பெற்றிருக்கும் சிறுவர்களுக்கான இந்த விளையாட்டுப் பொருள்களில் இரண்டாயிரம் வகைத் துண்டுகள் உள்ளன.*தென் அமேரிக்காவைச் சேர்ந்த நஞ்சற்ற பாம்பான அனகொண்டா ஒன்பது மீட்டர் நீளம் கூட வளரும். இது ஒரு மானையே முழுமையாக விழுங்கும் வலிமை கொண்டது.
*பாம்புகளின் நுகர்ச்சி உறுப்பு மூக்கல்ல. அதன் பிளவுபட்ட நாக்கு போன்ற உறுப்பே மூக்காகச் செயல்படுகிறது.
*பாம்பு குளிர்ந்த ரத்தம் கொண்ட உயிரி.
*பாம்பின் நஞ்சில் பலதரப்பட்ட நச்சுப் பொருள்கள், புரதங்கள் மற்றும் என்சைம்மன்கள் நிறைந்துள்ளன.
*ம்மபாள், பூம்சிலாங், பஃப் ஆடர்ஸ் ஆகியவை கொடிய விஷமுள்ள ஆப்பிரிக்க பாம்புகள்.*நச்சுப் பாம்புகளில் மிகச் சிறியது சுருட்டை விரியன்.


மிருகங்களில் குறைந்த நேரம் தூங்கும் மிருகம் கழுதை. இது ஒரு நாளில் 30நிமிஷங்கள் மட்டுமே தூங்கும்.

ஒவ்வோரு மிருகத்திலும் பல்வேறு இனங்கள் உள்ளன.
ஆனால் சிங்கம் மட்டுமே ஃபெலிஸ் லியோ என்ற ஒரே இனத்தை உடையது.

இப்போது கிரிக்கேட் வீரர்கள் பயன்படுத்தும் பேட்டை முதன்முதலாக பயன்படுத்தி ஆடியவர் ராபர்ட் ராபின்சன் என்பவர் தான். இவர் 1792 மற்றும் 1819 ம ஆண்டுகளில் இன்றைய பேட்டை முதன்முதலாகப் பயன்படுத்தி விளையாடினார்.

சமம் என்பதற்கு அடையாளமான = என்ற குறியீடு 1557ம் ஆண்டு முதல் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உலகிலே அதிக வேகத்தில் பாயும் ஆறு அமேசான் ஆறு தான். இது ஒரு நொடிக்கு 63 லட்சத்து 50 ஆயிரம் கன அடிகள் வீதம் பாய்கிறது.
பக்ராநங்கல் அணையைக் கட்டிமுடிக்க 15ஆண்டுகள் ஆயின. இதன் உயரம் 740 அடி.

அமெரிக்காவின் முத்ல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டன் 200 ஆண்டுகளுக்கு முன்பு எந்த பைபிள் மீது கை வைத்து ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டாரோ அதே மைபிளின் மீதுதான் எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றனர்.