திங்கள், 17 மார்ச், 2014

இணைய இணைப்பு இல்லாமல் இணையதளத்தைப் படிக்க!!!!



இணைய இணைப்பு இல்லாத போதும் ஒரு இணையதளத்தை வாசிக்க முடியுமா? என்றால் கண்டிப்பாக வாசிக்க முடியும். அதைப்பற்றித்தான் இந்த பதிவு.

சாதாரணமாக நமக்குப் பயன்படும் இணையதளங்களிலிருந்து தேவைப்படுவைகளை நாம் நம் கணினியில் சேமித்து வைப்போம்.

read website without internet

உதாரணமாக இணையத்தளத்திலிருக்கும் ஒரு படம் வேண்டுமானால், அவற்றின் மீது ரைட் கிளிக் செய்து Save Image As கொடுத்து சேமித்துக்கொள்வோம்.

அந்த இணையப் பக்கம் வேண்டுமெனில் Save As கொடுத்து அப்பக்கத்தை ஒரு Html Page ஆக சேமித்துக்கொள்வோம்.

இவ்வாறு சேமித்த படத்தையோ, அல்லது இணையப் பக்கத்தையோ மீண்டும் இணைய இணைப்பு இல்லாதபோதும் பார்வையிட முடியும். இதுபோல ஒரு முழு இணையத்தளத்தையும் நம்மால் பார்வையிட முடியுமா? என்றால் அது சிறிது கடினமே.

காரணம், ஒவ்வொரு வலைப்பக்கத்தையும் நாம் சேமித்துக்கொண்டிருக்க முடியாது.

ஆனால் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் நமக்கு வேண்டிய விஷயங்கள் நிறைய கொட்டிக்கிடக்கின்றன. ஒவ்வொரு பதிவும் நமக்கு பயனுள்ளதாக இருக்கின்றன' (Every articles are useful for us)அவற்றை இணைய இணைப்பு இல்லாத போதும் பார்வையிடவேண்டும் (without internet connection) என நீங்கள் நினைத்தால் அதற்கு உதவுகிறது
 இம்மென்பொருள்.

மென்பொருளைத் தரவிறக்கி நிறுவியவுடன் அதில் உங்களுக்கு பயன்படுகின்ற வலைத்தளம், அல்லது இணையதளத்தின் முகவரியை உள்ளிட்டு, உங்கள் கணினியில் எந்த இடத்தில் சேமிக்கப்பட வேண்டும் (Destination Folder) என்பதையும் கொடுத்துவிட்டால் போதும்.

மென்பொருள் நீங்கள் குறிப்பிட்ட வலைத்தளத்தை (a Particular website)அப்படியே சேமித்து வைத்துவிடும். பிறகு இணைய இணைப்பு இல்லாமலே நீங்கள் அந்த வலைத்தளத்தைப் பார்வையிட முடியும்.




எவ்வாறு Download செய்வது?

1. Download என்பதை க்ளிக் பண்ணவும்.

2. 5 Seconds காத்திருக்கவும்.

3. பின்னர் SKIP AD என்பதை க்ளிக் பண்ணவும்.

                                                                                நன்றி நண்பர்களே..!!



கம்ப்யூட்டர் கேம்ஸ் உருவாக்கப் பயன்படும் மைக்ரோசாப்டின் புதிய மென்பொருள்...




மைக்ரோசாப்டின் புதிய மென்பொருள் - Microsoft's new software


உலகின் மிக பிரபலமான மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் தனது புதிய மென்பொருளை அறிமுகம் செய்திருக்கிறது. 



கம்ப்யூட்டர் கற்றுக்கொள்வதற்கு முன்பே, அதில் இருக்கிற கேம்சைகளைத்தான் நாம் விரும்பியிருப்போம். இது சிறுவயதில் ஏற்படும் ஒரு அதீத ஆர்வம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் சில சமயம் விரும்பி விளையாடுவது Computer Games கள்தான்...




Computer Game கள்தான் விளையாட வேண்டுமா? விளையாடுபவர்களே அந்த கேம்களை உருவாக்கினால் என்ன? என்று யோசித்து செயல்படுத்தியன் விளைவுதான் தற்போது மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த கேம்ஸ் உருவாக்கும் மென்பொருள். 



இந்த மென்பொருளைக் கொண்டு நீங்களே கேம்ஸ்களை உருவாக்க முடியும்.  இந்த மென்பொருளுக்கு KODU என பெயரிட்டிருக்கின்றனர். 



இந்த மென்பொருளைப் பயன்படுத்தி நீங்களே கேம்ஸ் உருவாக்கலாம். இதற்கு உங்களுக்கு எந்த ஒரு கணினி மொழியும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை... சாதாரணமானவர்களும் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி computer Games களை உருவாக்கலாம். அவ்வளவு எளிமையான செயல்முறைகள் அடங்கியுள்ளது. 



தற்போது படிக்காதவர்கள் கூட கணினியைப் பயன்படுத்தி வரும் காலம் இது. கணினி பயன்பாடு அனைவருக்கும் சாத்தியமாகியிருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் அதி அற்புத முயற்சியில் தயாரிக்கப்பட்ட இந்த KODU Games Creating software கொண்டு xbox என்று சொல்லப்படும் சாதனத்திற்கும் விளையாட்டுக்களை உருவாக்கலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்  இதனுடைய எளிமையான பயன்பாட்டை....!!!!



KODU மென்பொருளை ஆதரிக்கும் இயங்கு தளங்கள்: 



1. Windows 7
2. Windows xp
3. Windows vista
  மேலும் 
A graphics card that supports DirectX 9.0c and Shader Model 2.0 or higher is required. .NET Framework 3.5 or higher is required. XNA Framework 3.1 Redistributable is required.  




எவ்வாறு Download செய்வது?

1. Download என்பதை க்ளிக் பண்ணவும்.

2. 5 Seconds காத்திருக்கவும்.

3. பின்னர் SKIP AD என்பதை க்ளிக் பண்ணவும்.

                                                                                நன்றி நண்பர்களே..!!




ஆடியோ, வீடியோ, புகைப்படம் அனைத்தையும் Edit செய்ய‌ ஒரே மென்பொருள்






நாம் மொபபைல் போனில் வீடியோ எடுக்கிறோம் பின்பு அதை டிவிடி பிளேயர்கள், மற்றும் டிவி 'களில் பார்ப்பதர்க்கு வெவ்வேரான ஃபார்மெட்களில் கன்வெர்ட் செய்ய வேண்டும்.  அத்ற்க்கு தேவையான



மென்பொருட்களை தனித்தனியாக டவுன்லோட் செய்ய வேண்டும்.  அதுவும் சிலவற்றை பணம் செலுத்தி வாங்கியும் இருக்கின்றோம்.  அத்ற்க்கு விடுதலை தரும் விதமாக அனைத்து மென்பொருட்களும் ஓரே மென்பொருளில் இனைக்கப்பட்டு நமக்கு கிடைக்கிறது.  அதுவும் முற்றிலும் இலவசமாக.  இந்த மென்பொருளின் பெயர்  Free Studio.   இதில் கீழ்காணும் வசதிகள் உள்ளன‌.






தேவையானதை மட்டும் Download செய்ய மேலே உள்ள வசதிகளில் வேண்டியவற்றை தேர்வு செய்து Download செய்துக் கொள்ளுங்கள்.  அல்லது அனைத்தையும் ஓரே மென்பொருளாக Download செய்ய இங்கு செல்லுங்கள்.

நன்றி...

மென்பொருள் இல்லாமல் Hard Disk ஐ Partition பிரிப்பது எப்படி?

மென்பொருள் இல்லாமல் Hard Disk ஐ Partition பிரிப்பது எப்படி?
Desktop Backgrounds > Windows XP > Partition Magic
கணினியை Format  செய்யாமல் Partition களை  உருவாக்குவது சாத்தியமா? சில சந்தர்ப்பங்களில் கணினி வன்தட்டில் மேலதிக பிரிவுகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்படலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நீங்கள் எந்த முடிவை எடுப்பீர்கள்?  Format  செய்து பின்  hard disk கினை தேவையானpartition களாக பிரிப்பது என்ற முடிவையே பலரும் எடுக்கின்றனர். நான் அதைபற்றி பகிர வரவில்லை.
இதற்க்கு வேறான மென்பொருட்களும் அவசியமில்லை. மேலும் அத்தியவசிய கோப்பிகள், உறைகளை வேறு இயக்கிகளுக்கு (separate drives) மாற்ற அல்லது பிரதி  செய்து (copy) கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.
கீழ் வரும் படிமுறைகளை பின்பற்றி புதிய  Partition ஒன்றை  SYSTEM DRIVE இல் உருவாக்கிக் கொள்ளலாம்.
1) முதலில் My Computer இல் Right click செய்து Manage என்பதை தெரிவு செய்யுங்கள் பின் Computer Management Windowதோன்றும்.
2) அதில்  Storage  சென்று Disk management என்பதை clickசெய்யுங்கள்.
3) அதில் வன்தட்டு , எனைய  storage media க்களின் தகவல்கள் காண்பிக்கப்பட்டிருக்கும்.
இப்பொழுது உங்களுக்கு Partition செய்யவேண்டிய Disk Driveவினை தெரிவுசெய்யுங்கள்.
4) பின்னர் அதில் Right click செய்யது  Shrink Volume என்பதை click செய்யுங்கள்.    அதன் பின்னர் windows தன்னியக்கமாக  அந்த Partition  இல் உள்ள  free space ன் அளவை காட்டும்.
5) Shrink வின்டோவில் partition பிரிக்க தேவையான disk size வழங்குங்கள். இதன் போது hard disk கில் காட்டப்படும் free space இன் அளவினை பொருத்து தீர்மானிக்க.
6) பின்னர் shrink என்பதை click செய்யுங்கள் .சில வினாடிகளிலேயே புதிய  Disk கோப்புகளுக்கு எதுவித பாதிப்புகளை ஏறப்படுத்தால் தோன்றும்.

7) புதிதாக உருவாக்கப்பட்ட Disk இன்னும் accessibleசெய்யப்படவில்லை.
8) இப்பொழுது unallocated drive இல் Right click செய்து New Simple Volume என்பதை  தெரிவு செய்யுங்கள்.
9) Next பொத்தானை Click செய்க .இப்பொழுது Partition னுக்கு தேவையான size இனை வழங்குங்கள். (you can choose whole size right now).
10) Drive Letter இனை தெரிவு செய்த பின் Next பொத்தானை கிளிக் செய்யுங்கள்.
11) பின்னர் Format Settings  இல் NTFS என்பதை File System  பிரிவில் தெரிவு செய்யுங்கள்.  Allocation Unit Size பிரிவில் Default என்பதையும். Volume label இல் New Volume எனவே விட்டுவிடலாம். (தேவையானால் மாற்றிக்கொள்ளவும் முடியும்).
12) Perform a Quick Format என்பதை Check இசய்யது Nextபொத்தானை click செய்யுங்கள் .
புதிய வன்தட்டுப் பிரிவு தயாராகிவிட்டது.