செவ்வாய், 29 அக்டோபர், 2013

கல்வி மற்றும் அனைத்து புத்தகங்களையும் தேடி கொடுக்கும் தேடுபொறி

புதிதாக ஒரு புத்தகம் வந்திருக்கிறது என்றால் இணையத்தில் சென்று தேடும் நமக்கு நேரத்தை மிச்சப்படுத்தி நாம் தேடும் புத்தகத்தை நொடியில் தேடி நமக்கு உதவுகிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
 

கூகிள் தேடிக்கொடுக்காத தகவலே இல்லை என்றாலும் அதற்காக நாம் சில மணி நேரங்கள் செலவு செய்ய வேண்டி இருக்கிறது. உதாரணமாக நமக்கு ஒரு புத்தகம் வேண்டும் என்றால் கூகிளில் சென்று புத்தகத்தின் பெயரைக் கொடுத்து தேடினால் வரும் முடிவுகளில் பலவற்றை தேடிப் பார்த்தபின் தான் ஏதாவது ஒன்றை தறவிரக்க முடியும் ஆனால் புத்தகங்களை மட்டுமே தேடி கொடுக்க பிரத்யேகமாக ஒரு  தேடுபொறி 
( search engine) உள்ளது.

இத்தளத்திற்கு சென்று  எந்த வகையான புத்தகம் தேவையோ அதன் பெயரைக் கொடுத்து Search என்ற பொத்தனை சொடுக்க வேண்டியது தான் வரும் திரையில் உள்ள முடிவுகள் அத்தனையுமே அந்த புத்தகத்திற்கு தொடர்புடைய இணைப்பாக தான் இருக்கும். சரியானதை தேர்ந்தெடுத்து சொடுக்கி எளிதாக  புத்தகத்தை தறவிரக்கலாம். Doc, Pdf, PPT,  XLS போன்ற கோப்புகளையும் தேர்ந்தெடுத்து தேடும் வசதியும் உள்ளது. இணையத்தில் நமக்கு வேண்டிய புத்தகத்தை எளிதாக தறவிரக்க உதவும் இந்தத்தளம் நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.


  • ஒரே இடத்தில் இருந்து அனைத்துவகையான ஆடியோ புத்தகம் இலவசமாக தறவிரக்கலாம்
  • இ-புத்தகத்தை அழகாக அடுக்கிவைப்பதற்கும் படிப்பதற்கும் உதவும் இலவச அப்ளிகேசன்.
  • ஒரே இடத்தில் அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் (User Manual) பயன்பாட்டு புத்தகத்தையும் தரவிரக்கலாம்
  • அறிவியல் மற்றும் கணினி துறையின் புத்தகங்களை இலவசமாக தரவிரக்கலாம்

இணையதள முகவரி

சனி, 26 அக்டோபர், 2013

இருபது வருடத்திக்கு பின் நம்ம முகத்தோற்றம் அறிய

தண்ணீர் குடிப்பதால், உடலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. அதிலும் தண்ணீரைக் குடிப்பதால், உடலில் உள்ள ஒவ்வொரு செல்களும் நன்கு ஆரோக்கியமாக செயல்படும். இத்தகைய தண்ணீரை தினமும் தவறாமல் குடித்து வந்தால், எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல், சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ளலாம்.என்ற அழகு குறிப்புடன்  இன்னும் இருபது வருடத்தில் நம்ம முகம் எப்படி இருக்கும் என்பதை எல்லோருக்கும் அறிய  ஆவல்தான்

இந்த தளத்திற்கு சென்று Gender, Age, Drug addict போன்றவற்றில் உங்களுக்குரிய Options தெரிவு செய்து விட்டு..கீழே upload your photo என்பதை கிளிக் செய்து உங்கள் புகைப்படத்தை Upload செய்தவுடன் 20 வருடத்தில் உங்கள் தோற்றம் எப்படி இருக்கும் என்பதை காட்டும்.. முயற்சி செய்து பாருங்கள்..
இணையதள முகவரி

திங்கள், 21 அக்டோபர், 2013

Facebook URL மாற்றுவது எப்படி



facebook இல் உள்ள பல பயனார்கள் தங்கள் user id ஐ வைத்தே பயன்படுத்துகின்றனர்.  பயனர் பெயராக மாற்றுவது மிக எளிது . இது சிலருக்கு தானாகவே மாறி இருக்கும் இருந்தும் சிலருக்கு இன்னும் மாறவில்லை அப்படி மாறாவிட்டால் பின்வரும்  படிகளில் நீங்கள் எளிமையாக இதனை மாற்றலாம் .


1.முதலில் பேஸ் புக் தளத்தில் லாகின் செய்து கொள்ளுங்கள் .

2.account settings என்பதை கிளிக் செய்து ஒரு பக்கத்துக்கு அழைத்து செல்லும் .

3.அதில் NAME, USER NAME ,EMAIL,PASSWORD, LANGUAGE,NETWORTS என்று
பல தெரிவுகள் இருக்கும் .

4.அதில்  USER NAME என்பதை கிளிக் செய்து பயனர் பெயரை கொடுங்கள் . பயனர் பெயர் சாத்தியமானதா என்று பார்த்துக் கொள்ளுங்கள் .

5.பேஸ் புக் PASSWORD கொடுத்து SAVE பண்ணுங்க ...

அவ்வளவு தான் ..இனி உங்கள் USER ID - USER NAME ஆக மாறிவிடும்

அல்லது சுட்டி இதில் சென்று  நேரடியாக விரும்பிய பெயரை மாற்றலாம்

HACK செய்யப்பட்ட GOOGLE ACCOUNT ஐ மீட்பது எப்படி



FIRST நீங்க உங்க COMPUTER ல VIRUS இருக்கான்னு SCAN பண்ணுங்க. நல்ல ANTI VIRUS மட்டும் பத்தாது அத அடிக்கடி UPDATE பண்ணனும். பெரும்பாலும் உங்கள் ACCOUNT இதனால் தான் (HACK)ஹாக் செய்யப்படும். அப்படி HACK பண்ணிட்ட வர பிரச்சினைகளை எப்படி சமாளித்து நமது ACCOUNT ஐ திரும்ப பெறுவது?.
முதலாவதா GOOGLE CHROME PAGEல் இருந்து உங்கள் ACCOUNTக்கு sign in ஆகுங்க இப்போ ACCOUNT SETTINGல நீங்க இருக்கணும்.
இதுல "Personal Settings " ல "Change password recovery options" இந்த பக்கத்துக்கு போங்க. இப்போ recovery email address ல உள்ள email id இப்போ நீங்க உபயோகிக்கிற உங்களோட இரண்டாவது அக்கௌன்ட் ஐ அதில் கொடுத்துடுங்க.
எப்போதும் பயன்படுத்துகிற உங்கள் மொபைல் நம்பர் மூலமாகவும் நீங்கள் உங்கள் recovery option ஐ செட் செய்ய முடியும். ஆனா முக்கியமான ஒன்று அந்த எண்ணை நீங்கள் எப்போதும் மாத்தவே கூடாது.
அடுத்தது security question , நீங்கள் ரொம்ப நாள் முன்னாடி உங்கள் அக்கௌன்ட் உருவாக்கி இருந்தால் இந்த கேள்வி அதில் இருந்திருக்காது(எனக்கும் இல்லை.)அந்த option ஐ நீங்கள் இப்போது உருவாக்கி கொள்ளுங்கள். இதில் நீங்கள் உங்களது சொந்த கேள்வியை கேட்டும் பதில் செட் செய்து கொள்ளலாம். எப்போதும் இதை மறந்து விட கூடாது.
இப்போது முடிந்து விட்டதா என்றால், இல்லை. ஏன் என்றால், இதை எல்லாம் உங்கள் அக்கௌன்ட் ஐ ஹாக் செய்பவன் மாற்றி விட வாய்ப்பு உள்ளது. இதை எல்லாம் மாற்றி விட்டால் பின்னர் எப்படி அக்கௌன்ட் ஐ திரும்ப பெறுவது ?
இதற்கு ஒரு form fill up செய்து கூகுள்க்கு அனுப்ப வேண்டும். அதில் நீங்கள் கூறியது எல்லாம் சரியாக இருந்தால் உங்கள் அக்கௌன்ட் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்??
உங்கள் account க்குள் நீங்கள் நுழைய முடியவில்லை என்றால் உங்களுக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன.
1 . revovery ஈமெயில் அட்ரஸ் மூலம் உங்கள் அக்கௌன்ட் ஐ திரும்ப பெறலாம்.
2 . security question மூலம் பெறலாம்.
3 . account recovery form fill up செய்து பெறலாம்.
இதில் முதல் இரண்டு வாய்ப்புகளில் உங்களால் முடியவில்லை என்றால் நீங்கள் மூன்றாவது வழியை பயன்படுத்த வேண்டும். அந்த form கீழே உள்ளது.





இதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நாம் சரியாக தரும் பட்சத்தில் நாம் நம் அக்கௌன்ட் ஐ திரும்ப பெற முடியும்(நான் இதன் மூலம் தான் பெற்றேன்).வந்த பின் வருந்துவதை விட வருமுன் காப்பது சிறந்தது இல்லையா. எனவே நான் கூறப் போகும் விவரங்களை நீங்கள் முதலில் தயார் செய்து பாதுகாத்துக் கொள்ளவும்.
அதற்கான லிங்க்:  account recovery form
• உங்கள் ஜிமெயில் அக்கௌன்ட் ஆரம்பித்த தேதியை நீங்கள் உங்கள் ஜிமெயில் இன் முதல் மெயிலில் சென்று குறித்து கொள்ளுங்கள்.
• இந்த gmail id மூலம் நீங்கள் பயன்படுத்திய google product களை பயன்படுத்த ஆரம்பித்த தேதி.
• இதுவரை கவனிக்க தவறினாலும் இனி குறித்து கொள்ளவும்
• உங்கள் வலைப்பூ முகவரி
• உங்கள் orkut profile முகவரி
• கடைசியாக வைத்திருந்த password .
• நீங்கள் அடிக்கடி(frequent ) தொடர்பு கொள்ளும் mail id க்கள்
• உங்கள் நான்கு label களின் name .

மென்பொருள் Serial, Keygen இலகுவாக பெறுவது எப்படி ?


இது கொஞ்சம் வித்தியாசமான பதிவு தான். எப்படி திருடுவது என்பது  விலை உயந்த மென்பொருட்களை எப்படி இலவசமாக பயன்படுத்தலாம் .சட்டரீதியாக மென்பொருட்களை எவரும் பணம் கொடுத்து வாங்குவது கிடையாது. காரணம் இணையத்தில் பரவிகிடக்கின்ற திருட்டுகள். இலகுவாக எந்த மென்பொருளுக்கும் உரிய Activation Key இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். ஆனால் இந்த செயற்பாடு சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளபடாதவை, இருந்தும் இதை தடுக்க எந்தவொரு வழியும் தற்சமயம் கிடையாது. என்ன செய்வது நானும் இந்த முறையைத்தான் பின்பற்றி ஒரு திருட்டு வழி முறையை கற்றுத்தர போகிறேன்                                 
  •     முதலாவதாக கூகிள் இணையதளத்திற்கு செல்லுங்கள் - Google.com
  •     பின்னர் கூகிள் தேடலில் “94fbr” இடைவெளிவிட்டு மென்பொருள்  பெயரை எழுதுங்கள். உதாரணமாக 94fbr windows 8
  •     அதன் பிறகு கூகிள் keygen’s உரிய பட்டியலை காட்டும்.
அவ்வளவு தான் இனி எல்லாமே இலவசம் நீங்க விரும்பியதை தரவிறக்கி  கொள்ளலாம் ...



திங்கள், 14 அக்டோபர், 2013

இணையத்தில் ஒரு இலவச நூலகம்



முகப்பு பக்கத்தில் வலைபதிவு வடிவில் வரிசையாக புத்தகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.எந்த புத்தகம் தேவையோ அதனை கிளிக் செய்து படிக்கத்துவங்கி விடலாம்.
அருகிலேயே மற்ற புத்தகங்கள் அவைகளின் வகைகளுக்கு ஏற்ப தொகுக்கப்பட்டுள்ளன. அரசியல்,இலக்கியம்,உடல் நலம்,இசை என வகைகளின் பட்டியல் நீள்கிற‌து.
அ.சிதம்பர செட்டியாரில் துவங்கி ,அ.ச.ஞா,, அண்ணாதுரை, அவ்வை தி.க. சண்முகம், ஆ. கார்மேகக் கோனார், என்.வி. கலைமணி, எஸ்.எஸ். தென்னரசு,ஔவை துரைசாமிப் பிள்ளை,க.நா.சு, கல்கி என எழுத்தாலர்களின் பட்டியலும் நீள்கிற‌து.
 நாட்டுப்புற இலக்கியம்,நாவல்கள்,பயண இலக்கியம் என பல வகையான புத்தகங்களும் இருக்கின்ற‌ன இதில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
இது முழுக்க  இலவச நூலகம் என்பது குறிப்பிட தக்கது  
 
 இணையதள முகவரி

அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்….!


உலகத்துல நமக்கு தெரியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. அப்படிப்பட்ட விஷயங்கள நமக்கு தெரியப்படுத்த/விளக்கத்தான் அறிவியல் ஆய்வு எல்லாம் நடத்த விஞ்ஞானிகள் இருக்காங்க. விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி எல்லாத்தையும் சொல்லிட்டாங்களான்னா, இன்னும் இல்லைங்கறதுதான் உண்மை! அப்படின்னா எல்லாம் வல்ல?!  அறிவியலால கூட புரிஞ்சிக்க முடியாத மர்மங்கள் நமக்கு மத்தியில இன்னும் இருந்துகிட்டுதான் இருக்கு இல்லையா? அதுவும் சும்மா இல்ல, அப்பப்போ நமக்கு “பகீர்…பகீர்” வயித்துல புளியக் கரைச்சிக்கிட்டு இருக்குங்கிறதுதான் உண்மை! உதாரணமா சொல்லனும்னா பேய்/பிசாசு, ஆவி அப்படின்னு நெறைய சொல்லிக்கிட்டே போகலாம்.
இப்போ நாம இந்த பதிவுல பார்க்க போறது, அந்த மாதிரி மனிதனால/அறிவியலால கூட விளங்கிக்க முடியாத சில அமானுஷ்ய நிகழ்வுககள்/சக்திகளை பற்றித்தான்! சரி, அப்படின்னா முதல்ல மனுஷனிலிருந்தே தொடங்குவோம் நம்ம கணக்கை….

உடல்-மூளை தொடர்பு !

mind_body_connection1நம் மூளை எப்படி நம்ம உடல பாதிக்குது அப்படிங்கிற விவரத்த, இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா மருத்துவத்துறை நமக்கு விளக்க தொடங்கி இருக்காங்க. உதாரணமா சொல்லனும்னா, சில நோய்களுக்கு  மாத்திரை என்று பிரத்தியேகமாக தயாரித்துக் கொடுக்காமல், ஒரு இனிப்பு மாத்திரையை , நோயைக் குணப்படுத்தும் என்றும் சொல்லி, நோயாளிகளுக்கு கொடுத்தால் மட்டுமே கூட சில நோய்களை குணப்படுத்த முடியும் என்பது மருத்துவத்துறையில் “ஒரு விளங்க முடியாக் கவிதை போலவே” வெகு காலமா இருந்து வருது! இதுக்கு ஆங்கிலத்துல “ப்ளாசிபோ எஃபெக்ட்”, அப்படின்னு சொல்றாங்க. ஆக, இது ஒரு நம்பிக்கை மட்டுமே (மாத்திரை அல்ல). இருந்தாலும் நோய் குணமடைகிறது. அது எப்படி? அது யாருக்கும் தெரியாது?! அதாவது, உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்வது எப்படி என்று எந்த புதுயுக மருத்துவத்தாலும் இதுவரை வரையறுத்துச் சொல்ல முடியவில்லை!

அமானுஷ்ய சக்தி/ இ.எஸ்.பி (Psychic powers and ESP)

psychic
உலகத்துல மனுஷனப் பத்தி மனுஷனாலேயே புரிஞ்சிக்க முடியாத விஷயங்கள்லேயே மிக முக்கியமானதுதான் இந்த அமானுஷ்ய சக்தி/இ.எஸ்.பி அப்படிங்கிறது! அதாவது, ஐப்புலன்களையும் தாண்டி உலகத்தை உணரக்கூடிய ஒரு சக்தி (எக்ஸ்ட்ரா சென்சரி பெர்சப்ஷன்/Extra-sensory perception (ESP)). ஆங்கிலத்தில் “இன்டியூஷன்” என்று சொல்லக்கூடிய, எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்கூட்டியே தெரிந்து (தீர்கதரிசி) சொல்வது எப்படி? என்பது இதுவரை யாருக்கும் புரியாத, ஆனால்  நம் எல்லோரையும் அதிர வைக்கும் ஒரு மர்மம்!  இதுல செஞ்ச ஆய்வுகள் இதுவரைக்கும் ஒரு தெளிவான பதிலை/கருத்தை சொல்லவே இல்லை. குழப்பமான, புரியாத ஆய்வு முடிவுகளையே கொடுத்திருக்கிறது  இ.எஸ்.பி பற்றிய ஆய்வுகள் அப்படிங்கிறாங்க விஞ்ஞானிகள்! இன்னும் சிலர், இந்த மாதிரி அமானுஷ்ய சக்தி பத்தின ஆய்வு என்னைக்குமே ஒரு தெளிவான முடிவைத் தராது, மனுஷனுக்கு அப்பாற்பட்டது அப்படின்னும் சொல்றாங்க. அப்ப்டின்னா, கடைசி வரைக்கும் இது ஒரு புரியாத புதிராவேதான் இருக்குமா? தெரியல, காலந்தான் பதில் சொல்லனும்!

இறப்பை ஒத்த அனுபவங்கள்/ இறப்புக்குப் பின் வாழ்வு (புனர்ஜென்மம்?!)

ndetunnel
படம்:கூகுள்
நம்மில் சில பேர், சமயத்துல சாகிற நிலைக்குப் போய் பிழைத்துக் கொள்வதுண்டு. இதப்பத்தி சொல்லும்போது “செத்துப் பொழச்சவண்டா” அப்படின்னு சில பேர் சொல்வதுண்டு. அதாவது சாகும் தருவாய் வரைக்கும் சென்று பின் அதிர்ஷடவசமாக பிழைத்துக்கொள்வார்கள். ஆங்கிலத்தில் “Near-Death Experiences”, அப்படின்னு சொல்லுவாங்க. இந்த மாதிரி அனுபவம் இருக்கிறவங்க, அந்த அனுவபம் பத்தி விவரிக்கும்போது, “ஏதோ பாதாளத்துக்குள்ள போன மாதிரி இருந்தது, உடனே பிரகாசமான வெளிச்சத்துல வந்து,  சொந்த பந்தங்களோட இணைஞ்ச மாதிரி ஒரு உணர்வு” அப்படின்னு எல்லாம் சொல்லக் கேட்டிருப்போம் இல்லையா? (குறைந்தபட்சம் சினிமாவுலயாவது பார்த்திருப்போம்!) . அதாவது, கல்லரையையும் தாண்டிய ஒரு உணர்வு/வாழ்வு?! இதுமாதிரி கதைகள்? பல நம்மிடையே இருந்தாலும் இதுவரையில் யாரும் தகுந்த ஆதாரங்களோடு அப்படியொரு நிகழ்வை உறுதிப்படுத்தவில்லை என்பதே உண்மை!  இது ஒருபுறமிருக்க, இந்த மாதிரி ஆய்வுகள் செய்யும் விஞ்ஞானிகளோ, இவையெல்லாம் காயப்பட்ட/பாதிக்கப்பட்ட மூளையின் ஒரு வித உணர்வே தவிர இதில் உண்மை என்று எதுவுல் இல்லை அப்படின்னு சொல்றாங்க!

யு.எஃப்.ஓ/UFOs

ufoயு.எஃப்.ஓ என்றால் “அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள்” (Unidentified Flying Objects). இத்தகைய பொருள்களை?! பலர் பார்த்திருக்கிறார்கள் என்பது உண்மை. அதாவது, அப்பப்போ வானத்துல திடீர்னு எதாவது ஒன்னு பறக்கிற மாதிரி தெரியும் (ஏரோப்ளேன் இல்லீங்க!), அது விண்கற்களா/ஏவுகனைகளா அப்படின்னு அடையாளம் சொல்ல முடியாது. அதேசமயம், இது வேற்றுகிரக மனுஷனோட வேலையா கூட இருக்கலாம் அப்படிங்கிறது இன்னொரு விஷயம்! என்னதான் கூர்மையா கவனிச்சி ஆய்வு பண்ணாலும் இது என்னன்னே தெரியாமதான் இருக்கோம் இதுவரைக்கும்?!

தேஜா வு (Deja vu)

“தேஜா வு”, அப்படின்னா ப்ரெஞ்சு மொழியில “மூன்கூட்டியே பார்த்தது” அப்படின்னு அர்த்தமாம். அதாவது,  இதுவரைக்கும் போகாத ஒரு இடத்துக்க போய்ட்டு வந்த மாதிரி ஒரு உணர்வைத்தான் இப்படி சொல்றாங்க! உதாரணத்துக்கு, ஒரு பெண்மணி புதுசா ஒரு வெளிநாட்டுக்கு முதல் முதல்ல வந்து, ஒரு கட்டிடத்துக்குள்ள அடியெடுத்து வைக்கிறாங்க. ஆனா அங்க, அவங்க வாழ்க்கையில முதல்முதல்ல பார்க்கிறதெல்லாமே முன்னாடியே அவங்க பார்த்து அனுபவிச்ச மாதிரி ஒரு உணர்வு வருது அவங்களுக்கு! இதுதான் “தேஜா வு” அப்படிங்கிறாங்க!” சில விஞ்ஞானிகள் கூற்றுப்படி, தேஜா வு-வுக்கு காரணம் முன் ஜென்ம நினைவுகள் அப்படின்னு சொன்னாலும், இதுவரைக்கும் இந்த உளவியல் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒரு மர்மமாவேதான் இருக்கு!
இதுவரைக்கும் நாம பார்த்த விஷயங்கள் சில “கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி” இருந்திருக்கும் உங்களுக்கு. எனக்கும்தாங்க! ஆனா இப்போ நாம பார்க்க போற விஷயம்,  நம்ம எல்லோருக்கும் ஏதோ ஒரு வயசில அனுபவப்பட்டதா/கேள்விப்பட்டதா இருக்கும்னு நான் நெனைக்கிறேன். என்னன்னு யூகிக்க முடியுதா உங்களால……?!

பேய்/பிசாசு/ஆவி

ghost3813xநம்ம பாரம்பரியத்துல, கலாச்சாரத்துல ஊறிப்போன ஒரு விஷயம்தான் இந்த பேய், பிசாசு, ஆவி எல்லாம். கண்டிப்பா நாம எல்லாரும் அப்பா/அம்மா, பாட்டி/தாத்தா இப்படி நம்ம குடும்பத்தச் சேர்ந்த ஒருத்தர் சொல்லக் கேட்ட ஒரு பேய் கதை கண்டிப்பா இருக்கும்.  எனக்கு நியாபகம் இருக்கிற வரைக்கும் சொல்லனும்னா, நான் அதிகமா கேட்டது/சினிமாவுல பார்த்தது “வெள்ளையா ஒரு புடவ கட்டிகிட்டு, ஜல் ஜல்னு கொலுசு சத்தம் கேட்கிற மாதிரி நடந்து வர்ர ஒரு பொம்பள பேய பத்தித்தாங்க! அதுக்காக, நான் நெசமாவே அப்படி ஒரு பேயைப் பார்த்தேன்னு எல்லாம் உங்க கிட்ட கப்சா உடறதுக்கு எனக்கு விருப்பமில்லீங்கோ!  சரி, நாம மேட்டருக்கு வருவோம். அதாவது, நான் மேல சொன்ன மாதிரி உலகத்தோட எல்லா மூலைகள்ல இருந்தும் இந்த மாதிரி கதைகள் நெறைய சொல்லப்பட்டாலும், சில புகைப்படங்கள் கூட எடுக்கப்பட்டு இருந்தாலும், இதுவரைக்கும் யாரும் “பேய்” அப்படின்னு ஒன்னு இருக்குன்னு ஆதாரப்பூர்வமா நிரூபிக்கவேயில்லீங்க சாமி! அது  ஒரு அழகிய?! மர்மமாவேதான் இருக்கு!

மர்மமாக மறையும் மனிதர்கள் (Mysterious Disappearances)

பொதுவா மனுஷங்க தொலைஞ்சு போறதும், கொஞ்ச காலம் கழிச்சு திரும்ப கிடைப்பதும்/விபத்தில் இறந்து போவதும் உலகத்துல சாதாரணமா நடக்கிற ஒன்னு!  ஆனா இப்போ நாம பார்க்க போற விஷயம் அப்படியில்ல. நெசமாவே,  நம்ம கூட இருந்துக்கிட்டிருக்கிற ஒருத்தரு திடீர்னு மறைஞ்சு போறது எப்படி சாத்தியம்? அது எப்படின்னு தெரியாது, ஆனா இது மாதிரி நெறைய நடக்குது (குறைந்தது அமெரிக்காவுலயாவது!). தொலைஞ்சு போனவங்க கெடைச்சிட்டா பரவாயில்ல, ஆதாரம் எதுவுமே இல்லாம, தொலைஞ்சு போறவங்கள பத்தி விசாரனை பண்ணாலும் அவங்க கிடைக்கிறதில்ல அப்படிங்கிறப்ப, அது ஒரு மர்மம்தானே?

ஆறாவது அறிவு/இன்டியூஷன் (Intuition)

top10_phenomena_intuitionநம்ம எல்லாருக்குமே “உள்ளுணர்வு” அப்படின்னு ஒன்னு இருக்குங்கறத நீங்க யாரும் மறுக்க மாட்டீங்கன்னு நெனக்கிறேன்.  அது ஆறாவது அறிவோ இல்ல வெறும் உள்ளுணர்வோ, எதாவது ஒரு தருணத்துல நாம எல்லாரும் அத உணர்ந்திருப்போம்தானே? அந்த மாதிரி உள்ளுணர்வுகள் சில நேரங்களில் பொய்த்துப் போனாலும், பெரும்பாலான நேரங்களில் உண்மையாவதை உணர்ந்து/கேள்விப்பட்டிருப்போம். உதாரணத்துக்கு, ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போவுது அப்படின்னு நாம  நெனச்சி முடிக்கிறதுக்குள்ள நம்ம குழந்தை கீழே விழுந்து அடிபட்டுடும்/ஒரு  விபத்து நடந்திடும் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். இது எல்லாத்துக்கும் காரணம், நம்ம ஆழ்மனசுல  நம்ம சுத்தி நடக்கிற விஷயங்கள் பதிஞ்சுபோய், அதுல இருந்து நமக்கே தெரியாம நாம, இப்படி நடக்கப்போவுது அப்படின்னு உணர்கிறோம். அது நமக்கு “எப்படி”, தெரியுது, “ஏன்” உணர்றோம் அப்படிங்கிற கேள்விகெல்லாம் இன்னும் பதில் தெரியல!

மனிதன் போன்ற மிருகம்/Bigfoot

bigfoot3பல வருஷ காலமா அமெரிக்காவுல, பெரிய, அடர்த்தியான முடியோட, மனுஷன்மாதிரியே இருக்கிற “பிக்ஃபூட்”, அப்படிங்கிற மிருகத்தப் பார்த்ததா  நெறைய பேர் சொல்லியிருக்காங்க!  அப்படி அந்த மாதிரி மிருகங்கள் இருந்து, இனப்பெருக்கம் செஞ்சுகிட்டிருந்தா குறைந்தது ஒன்னையாவது, இல்லன்னா அதோட ஒரு பிணத்தையாவது கண்டுபிடிச்சிருக்கனுமில்ல இதுவரைக்கும்?!  ஆனா அப்படி ஒன்னையும்  இதுவரைக்கும் கண்டும் புடிக்கல, வேட்டையாடவும் இல்லங்கறதுதான் உண்மை!  வெறும், கண்ணால் கண்ட சாட்சி, புரியாத போட்டோ மட்டும் வச்சுகிட்டு அந்த மாதிரி ஒரு மிருகம் இருக்குன்னு சொல்றதுல எந்த யதார்த்தமும் இல்ல அப்படின்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்! இதே மாதிரி, நம்மூர்ல ஒரு குறங்கு மனிதன்?! கோயம்பத்தூரைச் சுற்றியுள்ள காடுகள்ல?! இருக்கிறதா, ஆனந்த விகடன்ல ஒரு கட்டுரை படிச்சதா எனக்கு ஒரு நியாயபகம்?! உங்களுக்கு யாருக்காவது நினைவிருக்கிறதா? இருந்தா கொஞ்சம் சொல்லுங்க!

டாவோஸின் முனுமுனுக்கும் பாடல் (The Taos Hum)

அமெரிக்காவுல, நியூ மெக்சிகோவுல இருக்கிற ஒரு சின்ன நகரத்துக்கு பேருதான் டாவோஸ் (Taos). இந்த நகரத்தச் சேர்ந்த சில மக்கள் பல வருஷமா, யாரோ ஒருத்தர் ஏதோ ஒரு பாடலை முனுமுனுக்கிற மாதிரியே தூரத்துல ஒரு சத்தம் கேட்டுகிட்டு இருக்கிறதா சொல்லிக்கிட்டு இருக்காங்க! ஆனா வெறும் 2 விழுக்காடு மக்கள்தான் இதச் சொல்றாங்களே தவிர, மத்தவங்கள்லாம் இது ஏதோ ஒலி அலைகள்னால ஏற்படற ஒரு சத்தம்தானே தவிர, வித்தியாசமான முனுமுனுப்பு எல்லாம் இல்லங்கிறாங்களாம். எது எப்படியோ, அது என்ன சத்தம்னு இதுவரைக்கும் யாராலயும் உறுதியாச் சொல்லமுடியலயாம்!
எழுதின எனக்கே ஒரு மர்மதேசம் போய்ட்டு வந்த மாதிரி இருக்குதுன்னா…..அதாங்க, வின்னர் வடிவேலு மாதிரி, “அடிச்ச கைப்புள்ளைக்கே இந்த கதின்னா….அடிவாங்குனவன் கதி என்னவோ”?!, இப்படி பதிவப் படிச்ச உங்களுக்கு எப்படி இருக்குன்னு கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க!