திங்கள், 24 பிப்ரவரி, 2014

SMS வழியாக பேஸ்புக்கை உபயோகிப்பதற்கு


வளர்ந்து விட்ட தொழில் நுட்பத்தில் எல்லாமே சுலபமாகி விட்டது. பிரபல சமூக தளமான பேஸ்புக் தளத்தில் பல எண்ணற்ற வசதிகள் கொடுத்துள்ளனர்.அதில் ஒரு முக்கியமான வசதியாக கணணி இல்லாமல் இணைய இணைப்பு இல்லாமல் மொபைல் SMS வழியாக பேஸ்புக்கை உபயோகிக்கலாம்.

இதற்கு முதலில் உங்கள் மொபைல் எண்ணை பேஸ்புக்கில் பதிவு செய்ய வேண்டும்.
மொபைல் எண்ணை பதிவு செய்வது எப்படி:
முதலில் உங்களின் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். அதில் Account Settings பகுதிக்கு செல்லுங்கள்.
அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ திறக்கும் அதில் Mobile என்பதை கிளிக் செய்யுங்கள்.
பிறகு வரும் விண்டோவில் Add a Phone என்ற பட்டனை கிளிக் செய்யவும். அடுத்து ஒரு விண்டோ ஓபன் ஆகும்.
முதலில் நீங்கள் வசிக்கும் நாட்டினை தேர்வு செய்து கொண்டு அடுத்து கீழே உள்ளதி உங்கள் மொபைலின் Service Provider தேர்வு செய்து கொள்ளுங்கள்.
ஒருவேளை உங்களுடைய Service Provider அந்த பட்டியலில் இல்லை என்றால் Other Carrier என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
Next பட்டனை அழுத்தவும். இன்னொரு விண்டோ திறக்கும்.
இப்பொழுது உங்கள் மொபைல் போனில் F என டைப் செய்து அங்கு கொடுத்திருக்கும் எண்ணுக்கு SMS அனுப்புங்கள். (ஒவ்வொரு நாட்டிற்கும் மொபைல் எண் வேறுபடும்)
நீங்கள் SMS அனுப்பிய உடனே உங்களுக்கு ஒரு பதில் SMS வரும் அதில் உள்ள Confirmation code குறித்து கொண்டு இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்தில் கொடுக்கும் மற்றும் உங்களுடைய மொபைல் எண் மற்றவர்களுக்கு தெரிய கூடாது என்றால் Share my mobile number with my friends என்பதில் உள்ள டிக் மார்க் நீக்கி விட்டு Next பட்டனை அழுத்தவும்.
அவ்வளவு தான் உங்களின் மொபைல் எண் பேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டு விடும். மற்றும் அதில் உள்ள settings உங்களுக்கு தேவையான படி மாற்றி வைத்து கொள்ளுங்கள்.
இனி நீங்கள் பதிவு செய்யப்பட மொபைல் SMS வழியே பேஸ்புக்கை உபயோகிக்கலாம்.
SMS வழியாக பேஸ்புக்கை உபயோகிக்கும் முறை:
மொபைல் SMS மூலம் உபயோகிக்க கீழே உள்ள முறைகளை பயன்படுத்தவும். பேஸ்புக் சுவரில் எழுத சாதரணமாக SMS டைப் பண்ணி முன்பு குறிப்பிட்ட எண்ணுக்கு அனுப்பினால் போதும் சுவரில் அப்டேட் ஆகிவிடும்.
புதிய நண்பரை சேர்க்க – add your friend name.
Subcribe செய்ய – Subscribe your friend name.

பேஸ்புக் கணக்கை ஒரு முகவரியிலிருந்து மற்றொரு முகவரிக்கு மாற்றுவதற்கு


பெரும்பாலானவர்கள் பேஸ்புக் ஆரம்பிக்கும் பொழுது அவர்களின் பெர்சனல் மின்னஞ்சல் முகவரி கொடுத்து ஓபன் செய்து விடுகின்றனர்.ஆதலால் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு பேஸ்புக் தளத்தில் இருந்து ஏராளமான அறிவிப்புகள் வருவதால் முக்கியமான மின்னஞ்சல்களை கண்டறிவது மிகவும் சிரமமாக உள்ளது அல்லது உங்களின் பெர்சனல் மின்னஞ்சல் முகவரிகள் தெரிந்து விடுவதால் அதை சுலபமாக ஹாக் செய்து உங்கள் ரகசியங்களை கண்டறியும் பிரச்சினையும் உள்ளது.

ஆதலால் பேஸ்புக் கணக்கை எப்படி இன்னொரு முகவரிக்கு மாற்றுவது என பார்க்கலாம்.
முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து Account Settings பகுதிக்கு செல்லுங்கள்.
உங்களுக்கு வரும் விண்டோவில் Email பகுதியில் உள்ள Edit என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
அடுத்து Add another Email என்பதை கிளிக் செய்யவும்.
இப்பொழுது வரும் விண்டோவில் உங்களின் புதிய மின்னஞ்சல் முகவரியை கொடுத்து பேஸ்புக்கில் இப்பொழுது உள்ள Password கொடுத்து Save Changes என்ற பட்டனை அழுத்தவும்.
Save Changes என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்களின் புதிய மின்னஞ்சல் முகவரிக்கு Activation link செய்தி அனுப்பப்பட்டதற்கான அறிவிப்பு வரும்.
உங்களின் மின்னஞ்சலை ஓபன் செய்து அதில் உள்ள Activation Link கிளிக் செய்தால் உங்களின் புதிய முகவரி பேஸ்புக்கில் சேர்ந்து விடும்.
மறுபடியும் Account Settings – Email – Edit பகுதிக்கு சென்று புதிய மின்னஞ்சலை தெரிவு செய்து பேஸ்புக் கடவுச்சொல் கொடுத்து கீழே உள்ள Save changes என்பதை கிளிக் செய்து விடவும்.
இப்பொழுது மறுபடியும் அதே Email – Edit பகுதிக்கு சென்று பழைய மின்னஞ்சல் முகவரிக்கு அடிக்கு நேராக உள்ள Remove என்ற லிங்க் அழுத்தி கீழே கடவுச்சொல் கொடுத்து Save Changes அழுத்தினால் பழைய முகவரி முழுவதுமாக பேஸ்புக் கணக்கில் இருந்து நீங்கிவிடும்.
இனி நீங்கள் புதிய மின்னஞ்சலில் பேஸ்புக் கணக்கை உபயோகிக்கலாம். உங்களின் பெர்சனல் முகவரியையும் பாதுகாக்கலாம்.

PDF Edit: PDF கோப்புகளை எடிட் செய்வதற்கு


அடோப் நிறுவனம் வரையறை செய்து வழங்கும் போர்ட்டபிள் டாகுமெண்ட் போர்மட்டில்(PDFPortable Document Format) கோப்பு ஒன்றை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அதனைப் படித்தறிந்து அதில் மாற்றங்களை ஏற்படுத்தச் செயல்படுவது அதனைக் காட்டிலும் கடினமான வேலை ஆகும். இதனை நாம் மேற்கொள்ள இணையத்தில் பல பி.டி.எப் புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. பி.டி.எப் போர்மட் பல ஆண்டுகளுக்கு முன்பு அடோப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. உலக அளவில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு பயன்படுத்தப்படுவதற்கு அதன் சிறப்பியல்புகளே காரணம்.

ஒரிஜினல் டாகுமெண்ட்டின் அனைத்து சிறப்பு இயல்புகள், போர்மட்டிங் அம்சங்கள் அனைத்தும் பி.டி.எப் போர்மட்டிலும் அப்படியே காட்டப்படுகிறது. டெக்ஸ்ட், இமேஜ், மல்டிமீடியா மற்றும் பல அம்சங்கள் பி.டி.எப் போர்மட்டிலும் உயிரோட்டத்துடன் கிடைக்கின்றன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுச்சொல் கொண்டு ஒரு பி.டி.எப் கோப்பை பாதுகாக்கலாம். எந்த ஒரு இயங்குதளத்திலும் இந்த பி.டி.எப் போர்மட்டில் உள்ள கோப்பைக் காண முடியும். இந்த கோப்பை எடிட் செய்திட ஒரு மென்பொருள் உதவி புரிகிறது.
1. பி.டி.எப் எடிட்(PDF Edit): இது ஒரு ஓப்பன் சோர்ஸ் மற்றும் மிகக் குறைவாக இடம் பிடிக்கும் புரோகிராம். டாகுமெண்ட் ஒன்றில் உள்ள விஷயங்களை மாற்றி அமைக்கவும், அப்படி அமைத்த மாற்றங்களுடன் கோப்பை சேவ் செய்திடவும் இந்த புரோகிராம் வழி தருகிறது. இந்த தொழில் நுட்பம் தெரிந்த பயனாளர்கள், இதில் கிடைக்கும் கிராபிகல் யூசர் இன்டர்பேஸ்(GUI Graphical User Interface) வசதியைப் பயன்படுத்தி, பி.டி.எப். ஆப்ஜக்ட்களையும் மாற்றி அமைக்கலாம்.
இந்த புரோகிராமினை விண்டோஸ், லினக்ஸ் மற்றும் யூனிக்ஸ் இயங்குதளத்தில் இயங்கும் கணணியில் இயக்கலாம்.
தரவிறக்க சுட்டி

20GB அளவுள்ள பெரிய வீடியோ பைல்களை Youtubeல் நேரடியாக அப்லோட் செய்ய


கூகுள் வழங்கு சிறந்த சேவைகளில் ஒன்று யூடியுப் தளம். இணையத்தில் பல ஆயிரக்கணக்கான வீடியோக்களை அனைவரும் பார்த்து ரசிக்க கூடிய தளமாகும். இந்த தளத்தில் நம்முடைய வீடியோக்களையும் அப்லோட் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி உள்ளது. சாதாரணமாக யூடியுப் தளத்தில் சுமார் 15 நிமிட வீடியோவை தான் அப்லோட் செய்யும் வசதி உள்ளது. இதனால் பெரிய வீடியோ பைல்களை அப்லோட் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. ஆனால் யூடியுப் தளத்தில் 20GB அளவுள்ள 12 மணி நேரம் ஓடக்கூடிய வீடியோ பைல்களையும் அப்லோட் செய்யும் வசதி மறைந்து உள்ளது. அதனை எப்படி ஆக்டிவேட் செய்வது என கீழே பார்ப்போம்.


இந்த முறையை ஆக்டிவேட் செய்ய நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை யூடியுப் கணக்கில் கொடுத்து இந்த வசதியை ஆக்டிவேட் செய்ய வேண்டும்.
  • முதலில் யூடியுப் தளத்திற்கு செல்லுங்கள்.
  • யூடியுப் தளத்தில் மேல் பகுதியில் Browse, Movies, Upload என்ற மூன்று லிங்க் இருக்கும். அதில் Upload என்பதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • இதில் கீழ் பகுதியில் Upload HD videos in various formats in 15 minutes என்ற செய்தி இருக்கும். அதற்க்கு அருகில் Increase your limit என்ற ஒரு லிங்க் இருக்கும். அதில் கிளிக் செய்யவும்.

உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்கள் நாட்டினை தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள கட்டத்தில் உங்கள் மொபைல் எண்ணை கொடுக்கவும்.

மொபைல் நம்பரை கொடுத்தவுடன் கீழே உள்ள Submit என்ற பட்டனை அழுத்தவும். உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும் நீங்கள் கொடுத்த மொபைல் எண்ணுக்கு ஒரு SMS வந்திருக்கும். அதில் Verification Code அனுப்பி இருப்பார்கள்.

Verify பட்டனை அழுத்தியவுடன் உங்களின் யூடியுப் கணக்கில் உங்களின் மொபைல் எண் சேர்க்கப்பட்டு விடும்.

இனி யூடியுபில் அப்லோட் பகுதிக்கு சென்றால் 15 நிமிட லிமிட் என்ற செய்தி மறைந்து இருப்பதை காணலாம். இனி நீங்கள் 20GB அளவுள்ள 12 மணி நேரம் ஓடக்கூடிய வீடியோ பைல்களை நேரடியாக யூடியுபில் அப்லோட் செய்து கொண்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
Note: சொந்த வீடியோக்களை மட்டும் பகிரவும். திரைப்படங்களை பகிர்வது குற்றமாகும். மீறினால் தண்டிக்கப்படலாம்.

கணினிகளை பாதுகாக்க மைக்ரோசாப்டின் இலவச ஆன்ட்டி வைரஸ் மென்பொருள் – Microsoft Security Essential


இன்றைய சூழலில் கணினி இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது. பத்து பேர் சேர்ந்து ஒரு மணி நேரத்தில் செய்ய வேண்டிய வேலையை ஒரே ஒரு கணினி வைத்து கொண்டு செய்து விடலாம். எந்த அளவில் கணினியில் வசதிகள் உள்ளதோ அதே அளவில் தீங்கும் உள்ளது. நம் இன்டர்நெட்டில் உலவும்போதோ, ஏதேனும் டவுன்லோட் செய்யும் போதோ, அல்லது usb டிரைவ் மூலமாகவோ நம்மை அறியாமலே வைரஸ் கணினியில் புகுந்து கணினியில் வைத்திருக்கும் முக்கியமான டேட்டாக்களை அழிப்பதுடன் நம் கணினியையே செயலியக்க வைக்கிறது.

வைரஸ்களில் இருந்து கணினிகளை பாதுகாக்க பல ஆன்ட்டிவைரஸ் மென்பொருட்கள் உள்ளது. இந்த வரிசையில் பிரபல கணினி நிறுவனமான மைக்ரோசாப்ட் புதிய இலவச மென்பொருளை வெளியிட்டுள்ளது. Microsoft Security Essential என்ற மென்பொருள் இப்பொழுது புதிய பதிப்பை வெளியிட்டு உள்ளனர்.
மென்பொருளின் சிறப்பம்சங்கள்:
  • இந்த மென்பொருள் முழுக்க முழுக்க இலவச மென்பொருளாகும்.
  • கணினியில் உள்ள வைரஸ்கள். மால்வேர்களை துல்லியமாக கண்டறிந்து அழிக்கிறது.
  • கணினியை ஸ்கேன் செய்ய மூன்று வகையான வசதிகளை (Quick Scan, Full Scan, Custom Scan) கொண்டுள்ளது.
  • இணையத்தில் உலவும் பொழுதும் நம் கணினியை எந்த வைரசும் பாதிக்காதவாறு Real Time Protecting வசதியை கொண்டுள்ளது.
மென்பொருளை உபயோகிக்க கணினியின் அடிப்படை தேவைகள்:
  • விண்டோஸ் இயங்கு தளத்தின் ஒரிஜினல் பதிப்பை உபயோகிப்பது அவசியம்.
  • Windows XP(SP3), Vista, Windows 7 போன்ற கணினிகளில் இந்த மென்பொருளை உபயோகிக்க முடியும்.
  • XP என்றால் CPU Speed 500MHz அதிகமாகவும், 256MB RAM மெமரிக்கு அதிகமாகவும் இருப்பது அவசியம்.
  • Vista மட்டும் Windows 7 ல் CPU Speed 1.0GHz அதிகமாகவும், 1GB RAM மெமரிக்கு அதிகமாகவும் இருப்பது அவசியம்.
  • கணினி VGA Display 800 X 600 க்கு அதிகமாக இருக்க வேண்டும்.
  • 200MB கணினியில் காலி இடம் இருக்க வேண்டும்.
  • மென்பொருளை இன்ஸ்டால் செய்யும் பொழுது கணினியில் இன்டர்நெட் வசதி இருப்பது அவசியம்.
மென்பொருளை டவுன்லோட் செய்யMicrosoft Security Essential Beta

இணையத்தின் வேகத்தை அதிகரிப்பதற்கு


இணையத்தின் வேகத்தை அதிரிக்க நிறைய வழிமுறைகள் நம் கணணியிலேயே இருக்கின்றது. இருந்தாலும் நாம் சில எளிய வழிமுறைகளை செய்வதன் மூலம் இணைய வேகத்தை அதிகரிக்கலாம்.
நீங்கள் பயன்படுத்தும் உலாவி பயர்பொக்ஸ் என்றால்,

1. முதலில் பயர்பொக்ஸை திறக்கவும். அதன் address bar இல் about:config என்று டைப் செய்து enter பட்டனை தட்டவும்.
2. network.http.pipelining என்றிருப்பதை double கிளிக் செய்து True என்று செட் பண்ணவும்.
3. network.http.pipelining.maxrequests என்றிருப்பதை double கிளிக் செய்து 4 என்றிருப்பதை 10 என்று மாற்றவும்.
4. இறுதியாக வலது கிளிக் செய்து create new –>integer தேர்ந்தெடுக்கவும். பின்பு “nglayout.initialpaint.delay” என்று டைப் செய்து அதன் மதிப்பு தொகுப்பு “0″ என்று செட் பண்ணவும். (இதுவே பெறும் தகவல்களை செயல்படுத்தும் முன் உலாவி காத்திருக்கும் நேர அளவு)
நீங்கள் பயன்படுத்தும் உலாவி இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் என்றால்,
1. Start –> Run கிளிக் செய்து. regedit என்று டைப் செய்யவும்.
2. HKEY_CURRENT_USER –> Software –> Microsoft –> Windows –> Current Version –> Internet Settings ஐ தேர்ந்தேடுக்கவும்.
3. Default value இல் இருந்து 10 என்று அதிகரிக்கவும்.

சனி, 15 பிப்ரவரி, 2014

திருமண அல்பம் தயாரிக்க சிறந்த மென்பொருள்

Karizma wedding album

 திருமணம் ஆயிரம் காலத்து பயிர்  என்பார்கள்  திருமணம் என்பது இரு மனங்களும், இரு உடல்களும் ஆத்மார்த்தமாக இணைந்து நீண்ட தூரம் செல்லும் இனிய பயணம்.  ஒரு நாள் திருமண நாள் என்று இல்லாமல் வாழ்வில் இது மிக  பெரிய மகிழ்சியானதும் மாற்றத்தை உண்டு பண்ண கூடியதுமான ஒரு நிகழ்ச்சி  அதனால் தான் திருமண புகைப்பட ஆல்பங்களை உயிருடன் தனிப்பட்ட நினைவுகளை வைத்து அழகாக்குவது  முக்கியம்.  
இந்த மென்பொருள் உங்கள் அழகிய தருணங்களை  வாழ்நாள் முழுவதும் இரசிக்கும்படி செய்கிறது .. மீண்டும் மீண்டும் பார்க்க செய்யும் புகைப்படங்களை இதன்முலம் வடிவமைத்து மகிழுங்கள்