புதன், 26 பிப்ரவரி, 2014

தடை செய்யப்பட்டாலும் தொடர்ந்து பேஸ்புக்கை பாவிக்க

தடை செய்யப்பட்டாலும்
தொடர்ந்து பேஸ்புக்கை பாவிக்க கீழ் உள்ள லிங்கில்
உள்ள anchorfree எனும் சொப்ட்வேரை உங்கள்
கனனியில் இன்ஸ்ரோல் செய்து கொள்ளுங்கள்.
பின்னர் அதனை செயற்படுத்தி அதனுடாக
தடைசெய்யப்பட்ட பேஸ்புக் தளத்ததை பாவிக்க
முடியும்.

இப்பவே இந்த சொப்ட்வேரை டவுன்லோட்
பன்னிவச்சிக்கங்க..

http://download.cnet.com/android/anchorfree/3260-20_4-6287710.html

யூடியூப் வீடியோக்களை GIF கோப்பாக மாற்றுவதற்கு



உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாகக் காணப்படும் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள வீடியோ கோப்புக்களை GIF கோப்புக்களாக மாற்றுவதற்கு Gifff.fr (http://gifff.fr/) எனும் தளம் உதவி புரிகின்றது.இத்தளத்திற்கு சென்று நீங்கள் GIF கோப்பாக மாற்றவேண்டிய வீடியோவின் யூடியூப் URL இனை உட்புகுத்தி Enter கீயினை அழுத்த வேண்டும்.
அதன் பின்னர் தோன்றும் விண்டோவில் தேவையான பகுதிகளை தேர்ந்தெடுக்கும் வசதி காணப்படுகின்றது.
அதேபோல செட்டிங்ஸ் செய்யும் வசதியும் காணப்படுகின்றது.
இவற்றினை தெரிவு செய்ததன் பின்னர் Make it So என்பதனை அழுத்தி செயன்முறை முடிந்த பின்னர் Download Now என்பதனை அழுத்தி தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
Giffffr Is A Really Simple Tool to Turn YouTube Videos into GIFs
YouTube is home to dramatic chipmunks, weird Mary Kate and Ashley Olsen remixes and almost every single Simpsons scene you can imagine.
In other words, it’s a treasure trove of GIF-able material. With the new website Giffffr, you can transform your favorite YouTube clips into animated clips, edit them and then share them with the rest of the Internet in a few quick steps.
It’s one of the simplest methods for creating GIFs on the Internet that we’ve come across, and it’s totally free.

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

உங்களது போட்டோக்களை அழகாக்கும் வெப்சைட்ஸ்



நண்பர்களுடனோ அல்லது வேறு யாருடனோ நாம் வெளியே எங்காவது சென்று வந்தால் நாம் வீட்டிற்கு வந்ததுமே அந்த போட்டோக்களை எடுத்து பேஸ்புக்கில் போட்டு மகிழ்வோம்.

உண்மையில் அந்த போட்டோக்கள் நமக்கு அழகாக தெரிந்தாலும் பார்க்கும் மற்றவர்கள் கண்களுக்கு ஒவ்வொரு மாதிரியாத தான் தெரியும். இதே உங்களது போட்டோவை அழகாக மாற்ற வேண்டுமா அப்படியென்றால் இணையத்தில் அதற்கென்றே பல வெப்சைட்டுகள் இருக்கின்றன நண்பரே.

இந்த வெப்சைட் மூலம் உங்களது அழகிய போட்டோக்களை நீங்கள் மேலும் அழகாக்கிடலாம் இதோ அந்த வெப்சைட்டுகளை என்னென்ன என்பதை கீழே பாருங்கள்...

http://www.splashup.com/
http://www.picmonkey.com/
http://fotoflexer.com/
http://www.befunky.com/
http://pixlr.com/
www.facebook.com/tamilcomputertrick

முதலீடே இல்லாமல் இணையத்தில் பணம் சம்பாதிக்க இந்த தளம் ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி

உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு பணம் சம்பாதிக்கும் வாய்ப்பினை இணையம் அளிக்கின்றது. நீங்களும் ஆன்லைனில் பல வழிகளில் விரைவாக பணம் சம்பாதிக்க முடியும்.அதற்கு எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன.

ஒவ்வொரு நாளும் இணைய பயனாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.இதன் காரணமாக, இணைய தொழில் நிறுவனங்கள் தங்களின் விற்பனையை அதிகரிக்கவும் மேலும் தங்களின் வலைதளத்தில் அதிகமான வாடிக்கையாளர்களை கவர புதிய வழிகளை கையாள்கின்றனர்.


இதை போன்ற நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அதிகமான மக்களை சென்றடைய ptc இணையதளங்களில் தங்களின் விளம்பரங்களை வெளியிடுகிறார்கள்.இதன் மூலம் அவர்களின் விற்பனையை அதிகரிக்க முடிகின்றது.

PTC தளத்திற்கு நீங்கள் முற்றிலும் புதியவரா? முதலில் இதைப் படித்துவிட்டு தொடருங்கள்..


இந்த நிறுவனங்கள் மக்கள் சில பேர் தங்களின் விளம்பரங்களை சில வினாடிகள் பார்ப்பதற்காக மட்டுமே பணம் கொடுக்கின்றன.இதுவே இணையத்தில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளில் மிக சிறந்ததாக கருதப்படுகிறது.


இணையத்தில் பணம் சம்பாதிக்க எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன. அவற்றுடன் ஒப்பிடும்போது ptc இணையதளங்கள் மூலம் பணம் சம்பாதிப்பது முற்றிலும் வேறுபட்டது ஏனென்றால்,


  • ஒரு பைசா கூட முதலீடு தேவையில்லை...
  • எந்த வித அடிப்படை திறமையும் தேவையில்லை...
  • தினமும் செலவிடும் நேரம் மிக மிக குறைவு 15 நிமிடங்கள் போதுமானது...
  • உங்களுக்கு ஆங்கிலம் சரளமாக தெரிந்தாலே போதும் ஒரே நாளிலேயே 1000 ரூபாய் வெகு சுலபமாக சம்பாதிக்கலாம் ...


நியோபக்ஸ் சிறப்பம்சங்கள்:




  • உலகின் மிகசிறந்த ptc இணையதளம் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இணையத்தில் செயல்பட்டுவருகிறது.

  • உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ள இரண்டு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் நியோபக்ஸ் மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள்.

  • கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் நியோபக்ஸ் தனது உறுப்பினர்களுக்கு பணமாக கொடுத்துள்ள தொகையின் மதிப்பு 100 மில்லியன் டாலருக்கும் மேல்                                                                                            
  • நியோபக்ஸ் இணையதளத்தின் குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகையான 2 டாலராக இருக்கட்டும் அல்லது 20000 ஆயிரம் டாலராக கூட இருந்தாலும் தனது உறுப்பினர்களுக்கு உடனடியாக பணம் வழங்குவது தான் நியோபக்ஸ் தளத்தின் தனி சிறப்பு.Instant payment within seconds


முதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க :

                                           
வழிமுறை 1. மேலே உள்ள பட்டனை கிளிக் செய்யவும் .

வழிமுறை 2.வலது மேற்புறம் உள்ள "Register" என்பதை கிளிக் செய்யவும்.

வழிமுறை 
3. உறுப்பினராக பதிவு செய்யும்போது கவனிக்க
வேண்டியவை
உங்களின் பெயர், கடவுச்சொல், ஈமெயில் முகவரியை உள்ளீடு செய்யவும்

Enter Verification code & Tick "I have read and agree"
Click "Create Account"  
வழிமுறை 4. உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு verification code அனுப்பப்படும் அதை copy செய்யவும்.

வழிமுறை 5. லாகின் செய்யவும் பிறகு விளம்பரங்களை கிளிக் செய்து எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்பதை கிழே உள்ள வீடியோவில்  பாருங்கள் 
                                         

              இந்திய வங்கிகளுக்கு பணம் பெறுவது எப்படி? (வீடியோ)

 

                                         
நியோபக்ஸ் ஆன்லைனில் ஒரு சில வினாடிகள் விளம்பரங்களை கிளிக் செய்து பார்க்கவும் உங்களின் நண்பர்களை பணம் சம்பாதிக்க பரிந்துரைக்கவும் சின்ன சின்ன இணைய பணிகளை செய்து முடிக்கவும் உலகில் உள்ள அனைத்து நாட்டு மக்களுக்கும் இலவசமாக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்கும் PTC இணையதளம். நியோதேவ் (Neodev) என்ற பெயரில் போர்ச்சுகல் நாட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம். 25 மார்ச் 2008 ஆம் ஆண்டு முதல் இணையத்தில் செயல்படுகிறது.


நியோபக்ஸ் PTC இணையதளத்தை பற்றி சுருக்கமாக சொல்வதென்றால் உங்களின் ஓய்வு நேரத்தில் இணையத்தில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்கும் உலகின் முதன்மையான PTC இணையதளம். கடந்த 3 ஆண்டுகளில் எத்தனையோ PTC இணையதளங்கள் நியோபக்சின் தொழில் முறையை பின்பற்ற முயற்சி செய்து விட்டன.ஆனால் உண்மையில் எந்த ஒரு PTC இணையதளதாலும் அவர்களின் வெற்றியை கூட நெருங்க முடியவில்லை என்பதே உண்மை.

 தற்போது நியோபக்ஸ் PTC இணையதளம் விளம்பரங்களை கிளிக் செய்து பார்பதற்காக மட்டுமல்லாமல் தனது உறுப்பினர்களுக்கு ஆறு வழிகளில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.அதே நேரத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான டாலர்களை தனது உறுப்பினர்களுக்கு பணமாக வழங்குகிறார்கள்.இது நமது இந்திய ரூபாயின் மதிப்பில் எவ்வளவு தெரியுமா? ஐம்பது லட்ச ரூபாய்க்கும் மேல்.




உங்களின் உறுப்பினர் கணக்கில் லாகின் செய்த பிறகு கிளிக் View advertisements அங்கே ரோஸ்,பச்சை ஆரஞ்சு ஆகிய மூன்று நிறங்களில் நிறைய விளம்பரங்களை காணலாம்.
எப்போதுமே முதலில் ஆரஞ்சு நிற விளம்பரங்களையே கிளிக் செய்ய துவங்குங்கள். ஏதேனும் ஒரு விளம்பரத்தை கிளிக் செய்யுங்கள் சிகப்பு நிற புள்ளி ஒன்று தோன்றும்
அதை கிளிக் செய்தால் உங்களின் பிரௌசரில் புதிய டேப் ஒன்று திறக்கும்
கிழே படத்தில் உள்ளபடி மஞ்சள் கோடு முழுமையாக சுற்றும் வரை காத்திருக்கவும் .

உங்களின் விளம்பரம் முடிந்துவிட்டது. அதைப்போலவே மற்ற விளம்பரங்களையும் கிளிக் செய்யவேண்டும்.

நியோபக்ஸ் தள விதிமுறை (TOS 3.7) – உறுப்பினர்கள் தினசரி ரெபரல் கமிசன் பெறவேண்டும் என்றால் 4 ஆரஞ்சு நிற விளம்பரங்களை கட்டாயம் கிளிக் செய்து பார்க்கவேண்டும்.
குறிப்பு :உங்களின் விளம்பரங்கள் லோட் ஆவதில் பிரச்சனை ஏற்பட்டால் கூகிள் குரோம் அல்லது பயர்பாக்ஸ் உலாவியின் மிக சமீபத்திய பதிப்பை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.

நீங்கள் நியோபக்ஸ் உறுப்பினராக பதிவு செய்து 72 மணி நேரத்திற்குள் எந்த ஒரு விளம்பரத்தையும் பார்க்கவில்லை எனில் உங்களின் உறுப்பினர் கணக்கு நீக்கப்பட்டு விடும். எனவே உறுப்பினராக பதிவு செய்தவுடன் குறைந்தபட்சம் ஆரஞ்சு நிறத்தில் உள்ள நான்கு விளம்பரங்களை கட்டாயம் கிளிக் செய்து பார்த்துவிடுங்கள்
நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் போனசாக பின்வரும் மூன்று வாய்ப்புகளை பெறுவீர்கள். உங்களின் மவுஸ் கர்சரை ஒவ்வொரு விளம்பரத்தின் அருகே கொண்டு சென்றால் நீங்களே பார்க்கலாம்
                                 
மூன்று adprize வாய்ப்புகள்
ஒவ்வொரு மணி நேரத்திற்கும் $ 0.50 பணம் வெல்ல வாய்ப்பு
ஒரு நியோபாயிண்ட்
நியோபக்ஸ் adprize

நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் மூன்று adprize வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன அதிலே நீங்கள் $ 0.25 டாலர் முதல் $ 50 டாலர் வரை உடனடியாக வெல்லலாம்.
ஒவ்வொரு மணி நேரத்திற்கும் $0.50 டாலர் வெல்ல வாய்ப்பு

நியோபக்ஸ் இணையதளம் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 120 உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து $ 0.50 டாலர் இலவசமாகவே வழங்குகின்றது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது கடந்த ஒரு மணி நேரத்தில் ஏதாவது ஒரு விளம்பரத்தை பார்த்திருந்தாலே போதும் நீங்களும் $ 0.50 டாலர் பணம் சம்பாதிக்க தகுதியுடையவர் ஆவீர்கள்.
நியோபாயிண்ட் என்றால் என்ன ( what is neopoint)

தனி நபர் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள்

தினமும் குறைந்தது கண்டிப்பாக நான்கு $ 0.001 விளம்பரங்கள் 

+
நாள் முழுவதும் அதிகமான விளம்பரங்கள் 

விளம்பரத்தின் வகைகள்செலவிடும் நேரம்ஒவ்வொரு விளம்பரத்திற்கும் கொடுக்கப்படும் பண மதிப்பு
நீட்டிக்கப்பட்ட விளம்பரங்கள்60 நொடிகள்$0.015
ஸ்டாண்டர்ட் விளம்பரங்கள்30 நொடிகள்$0.01
மினி விளம்பரங்கள்15 நொடிகள்$0.005
மைக்ரோ விளம்பரங்கள்
5 நொடிகள்
$0.001
நிலையான விளம்பரங்கள்
5 நொடிகள்
$0.001
நிர்ணயிக்கப்பட்ட விளம்பரங்கள்
(Self-sponsored)

5 நொடிகள்
$0.001

+

சின்ன சின்ன இணைய பணிகள் & சலுகைகள் Mini Jobs (Tasks) & Offers

+

சின்ன சின்ன இணைய பணிகள் போனஸ்
நியோபக்ஸ் மினி ஜாப் மூலம் நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு $ 1 டாலருக்கும் போனசாக $ 0.12 டாலர் பணம் கொடுக்கின்றது.$0.12
 நேரடிரெபரல் கமிசன்
விளம்பரத்தின் வகைகள்
ஒவ்வொரு விளம்பரத்திற்கும் உண்டான கமிசன்
நீட்டிக்கப்பட்ட விளம்பரங்கள்$0.005
ஸ்டாண்டர்ட் விளம்பரங்கள்$0.005
நிர்ணயிக்கப்பட்ட விளம்பரங்கள்
(Self-sponsored)
$0.0005

+

வகைகள்
கமிசன்
நியோபக்ஸ் மினி ஜாப்
 Mini Jobs (Tasks)
12%
நியோகாயின் சலுகைகள்20%
Purchases (விளம்பரங்கள் பார்ப்பதை தவிர்த்து )1% 
 ரெபரல் எண்ணிக்கையின் அளவு

30 + (ஒவ்வொரு 4 நாட்களுக்கு + 1 ரெபரல் வீதம் )

நியோபக்ஸ் TOS 3.10 – உறுப்பினர்கள் குறைந்தபட்சம் 15 நாட்கள் காத்திருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 100 விளம்பரங்களை பார்திருக்க வேண்டும். இதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் தான் முடியும்.
குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகை

$2

முதன் முறை பணம் எடுக்கும் போது $ 2 டாலர். பின்னர் இந்த தொகை ஒவ்வொரு தடவை பணம் எடுக்கும் போதும் $ 1 டாலர் வீதம் அதிகரித்து கடைசியில் நிலையாக $ 10 டாலரில் நிற்கிறது.ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் நீங்கள் பயன்படுத்தும் பண பரிமாற்ற தளத்தை பொருத்து மிக குறைந்த தொகை கட்டணமாக வசூலிக்கபடுகிறது.
 பணம் பெரும் வழிமுறைகள்


பணத்திற்காக காத்திருக்கும் நேரம்

ஒரு சில விநாடிகளில் பணம் வழங்கபடுகின்றது. Instant (within seconds)

 பணம் சம்பாதிக்க ஏற்றுகொள்ளப்படும் நாடுகள்

உலகில் உள்ள அனைத்து நாடுகளும்




$10,000 (Rs.5.5 இலட்சம் ) நியோபக்ஸ் உறுப்பினர் பணம் பெற்றதற்கான ஆதாரம் 



                                                                      







உங்களுடைய நண்பர்களுக்கும் தெரியப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கும் உதவலாமே...! தயவு செய்து கீழுள்ள சமூகதளங்களில் இதைப் பகிருங்கள்..! If you are not interested, please share this page with others. It might help them.

திங்கள், 24 பிப்ரவரி, 2014

கணணியில் தட்டச்சு வேகத்தை அதிகப்படுத்துவதற்கு


கணணியில் தட்டச்சு செய்யும் வேகத்தை அதிகப்படுத்தி நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது. கணணி பயன்படுத்தும் அனைவருக்குமே இருக்கும் ஒரு ஆசை என்னவென்றால் அதிகவேகமாக தட்டச்சு செய்ய வேண்டும் என்பது தான்.

இதற்காக நாம் தட்டச்சு வகுப்பிற்கு செல்ல நேரம் இல்லை என்று சொல்ல வேண்டாம், அனைவருக்கும் தட்டச்சு வேகத்தை அதிகப்படுத்த நமக்கு ஒரு இலவச மென்பொருள் உதவுகிறது.
இத்தளத்திற்கு சென்று மென்பொருளை இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம். மென்பொருளை இயக்கி நாம் தட்டச்சு செய்ய தொடங்க வேண்டியது தான், ஆரம்பத்தில் வேகம் அதிகம் இல்லாமல் இருந்தாலும் தினமும் நமக்கு நேரம் கிடைக்கும் போது பயன்படுத்தினால் போதும்.
விசைப்பலகையில் இருக்கும் எல்லாவகையான பொத்தான்களையும் அழுத்தும் வண்ணம் பயிற்சி அமையப் பெற்றிருக்கிறது.
Click here to download the software

யூடியுப் வீடியோக்களை HD வடிவில் தரவிறக்கம் செய்வதற்கு


இணையத்தில் வீடியோக்களை பகிரும் தளமான யூடியுப்பில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்ய நிறைய மென்பொருட்களும், இணைய தளங்களும், நீட்சிகளும் உள்ளன.
ஆனால் இந்த மென்பொருள் சற்றே வித்தியாசமானதும், பயனுள்ளதும் கூட. இந்த மென்பொருள் மூலம் ஒரு குறிப்பீட வீடியோவை பல அளவுகளில் பல போர்மட்டுகளில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றும் இந்த மென்பொருளில் கூடுதல் வசதியாக தொடர்பு வீடியோக்களை யூடியுப் தளத்திற்கு செல்லாமலே இங்கிருந்தே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மென்பொருளின் பயன்கள்:
1. ஒரே நேரத்தில் பல வீடியோக்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
2. முற்றிலும் இலவசமான மென்பொருள்.
3. தொடர்பு வீடியோக்களை தரவிறக்கம் செய்ய வேண்டுமென்றால் மீண்டும் யூடியுப் தளத்திற்கு செல்ல தேவையில்லை.
4. வீடியோக்களை வேகமாக தரவிறக்கம் செய்கிறது.
5. வீடியோக்களை FLV, MP4 போர்மட்களில் பல்வேறு அளவுகளில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
6. வீடியோக்களை Preview பார்க்கும் வசதி இருப்பதால் வீடியோ நன்றாக இருந்தால் மட்டுமே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
7. யூடியுப் வீடியோக்களில் இருந்து ஓடியோவை மட்டும் தனியே பிரிக்க Extract FLV audio வசதி.
8. மேலும் History, Batch போன்ற கூடுதல் வசதிகளும் இந்த மென்பொருளில் உள்ளது.
முதலில் இந்த மென்பொருளை கீழே உள்ள லிங்கில் சென்று உங்கள் கணணியில் தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். அடுத்து மென்பொருளை திறந்து கொள்ளுங்கள்.
மென்பொருளில் Youtube URL இடத்தில் வீடியோவின் URL கொடுக்கவும். அதன் பின் வீடியோ தரவிறக்கம் செய்ய வேண்டிய தரத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
குறிப்பிட்ட வீடியோ HD வடிவில் இருந்தால் மட்டுமே HD வடிவில் தரவிறக்கம் செய்ய முடியும் இல்லையேல் சாதரணமாக தான் தரவிறக்கம் ஆகும். அடுத்து Preview பார்க்க வேண்டுமென்றால் பார்த்து கொண்டு கடைசியில் தரவிறக்க பட்டனை அழுத்துங்கள். அவ்வளவு தான் அந்த வீடியோ உங்கள் கணணியில் தரவிறக்கம் ஆகிவிடும்.
வலது புறத்தில் பார்த்தல் இந்த வீடியோவின் Related videos காணப்படும். அதில் ஏதேனும் ஒன்றை தரவிறக்கம் செய்ய நினைத்தால் அதன் மீது கிளிக் செய்தாலே போதும். அந்த வீடியோவை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒரே நேரத்தில் பல வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் பொழுது தரவிறக்கத்தின் வேகம் இணைய வேகத்திற்கு ஏற்ப குறையும்.
Click here to download the software

உங்கள் எதிரியை பழிவாங்க உதவும் இணையத்தளம்!


உங்களுக்கு யாராச்சும் எதிரிகள் இருக்கிறார்களா? அவர்களை நேருக்கு நேர் பழிவாங்க முடியாமல் உள்ளதா? பரவாயில்லை விடுங்கள் பழிவாங்கும் எண்ணம் கூடாதுதான். இருந்தாலும் உங்கள் மனதிருப்திக்காக அவர்களை பழிவாங்க ஒரு வழி இருக்கிறது கேளுங்கள்.
இதற்கு அவர்களின் புகைப்படம் இருந்தால் போதுமானது உங்கள் எதிரியை நீங்கள் ஒரு பேயை விட கேவலமாக அசிங்கப்படுத்தி சந்தோசப்பட்டுக்கொள்ளுங்கள். முதலில் நாம் தந்துள்ள தளத்திற்கு சென்று உங்கள் தெரிவான புகைப்படத்தை தேர்ந்தெடுத்து விளையாட ஆரம்பியுங்கள். உங்கள் எதிரியின் அழகான புகைப்படம் கேவலமானதை இட்டு சந்தோசப்படுங்கள். முடிந்தால் அவருக்கே அனுப்பி விடுங்கள். இடிவாங்காமல் இருந்தால் சரிதான்.
பழிவாங்க http://dsc.discovery.com/sharks/shark-yourself/

கணினியில் தமிழ் தெரிவது எப்படி?


கணினியில் ஆங்கிலம் மட்டுமே இயங்கும் அல்லது கணினி ஆங்கிலத்தை மட்டுமே புரிந்து கொள்ளும். சும்மா உடான்ஸ் விடாதேய்யா என நினைக்கிறீர்களா? பொறுங்கள். நீங்கள் நினைப்பது சரிதான்.
அப்படியானால், கணினி தமிழைப் புரிந்து கொள்ளுமா, சற்றுப் பொறுங்கள். கணினி தமிழ் மட்டுமல்ல எந்த மனித மொழியையும் புரிந்து கொள்ளாது.

அதற்குப் புரியக் கூடிய ஒரே மொழி இலக்க மொழி (Machine Language) தான். இந்த மொழியில் இரண்டே இரண்டு குறியீடுகள் தான். அவை ஒன்று மற்றும் சுழி (பூஜ்யம்).
ஆனால் நாங்கள் ஆங்கிலத்தில் தானே கணினித் திரையில் பார்க்கிறோம். கட்டளைகள் எல்லாம் ஆங்கிலத்தில் தானே இருக்கின்றன என்று தோன்றுகிறதா? அவை உங்களுக்கு ஆங்கிலத்தில் இருக்கின்றன ஆனால் கணினி அந்த ஒவ்வொரு கட்டளையையும் அது புரிந்துகொள்ளக் கூடிய இலக்க மொழியில் மாற்றப்பட்டு கணினியின் மூளையான செயலகம் (Processor) நிறைவேற்றுகிறது.
கணினி எவ்வாறு செயல்படுகிறது எவ்வாறு இயங்குதளம் தரவுதளம் இயங்குகின்றன என்கிற நுணுக்கங்களுக்குச் செல்லாமல் திரையில் ஒரு குறிப்பிட்ட மொழியில் எழுத்துருவில் தெரிவது எப்படி என்று மட்டும் பார்ப்போம்.
கணினியை நாம் அச்சுத்துறைக்குப் பயன்படுத்தும் பொழுது நாம் விரும்பும்படி தான் ஆங்கில மொழியின் எழுத்துக்களைக் கூட பயன்படுத்திச் சேமிக்க வேண்டும். அதனால் ஒரு கணினி புரிந்து கொள்ளும் படி நாம் ஒவ்வொரு எழுத்தையும் ஒவ்வொரு எண்ணாக மாற்றித்தான் சேமிக்கவேண்டும்.
சரி ஆங்கிலம் தெரிவதே இப்படி இடியாப்பச் சிக்கல் என்றால் வேறு சில மொழிகள் இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் தமிழ் தெரிவது எப்படி?
ஒரு மொழியை நாம் கணிப்பொறியில் பயன்படுத்த வேண்டுமென்றால் அந்த மொழியின் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு எண்ணை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு நிர்ணயிக்கும் முறையை நாம் குறியீட்டு முறை (Character Encoding) என்று அழைக்கிறோம். இதற்காகத் தான் இவ்வளவு மெனக்கிட வேண்டி இருக்கிறது.
நாம் இந்த குறியீட்டு முறையை பயன்படுத்தி ஒரு புத்தகத்தின் பக்கங்களை கணிணிக்குள் சேமித்துவிடுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். பிறகு அதை நாம் கணினி திரையில் பார்க்க விரும்பும் பொழுது, சேமித்த எண்களையெல்லம் கூட்டி, கழித்து எழுத்துக்களாக மாற்றும் வேலையை யாராவது செய்ய வேண்டுமில்லையா? கவலையை விடுங்கள், கணிப்பொறி எழுத்துரு (Fontஎன்ற கோப்புச்செயலியைப் பயன்படுத்தி, ஒவ்வொரு எண்ணுக்கும் என்ன எழுத்து வடிவம் என்பதை தேர்ந்தெடுத்து பிரதியிட்டுவிடும்.
ஆங்கில மொழிக்கு, தகவல் பரிமாற்றத்துக்கான அமெரிக்க நியமக் குறியீட்டு முறை சுருக்கமாக ஆஸ்கி – ASCII (American Standard Code For Information Interchange) அல்லது அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட விண்டோஸ் அமெரிக்க தேசியத் தரநிர்ணயக் கழக முறை சுருக்கமாக ஆன்ஸி – Windows ANSI (American National Standards Institute) என்ற குறியீட்டு முறையை பயன்படுத்துகிறார்கள்.
தமிழில் ஒவ்வொரு மென்பொருள் எழுத்துருவும் பற்பல தன்னார்வலர்களின் படைப்புகளாகும். ஆளாளுக்கு ஒவ்வொரு குறியீட்டு முறையைப் பயன்படுத்தி எழுதி வந்தார்கள்.
இதனால் இவர் எழுதுவது அவருக்கும் அவர் எழுதுவது இவருக்கும் புரியாத நிலை ஏற்பட்டது. விளைவு? தமிழில் ஒருவர் எழுதியது இன்னொருவருக்கு கிரேக்கம் இலத்தீன் போலத் தெரிந்தன.
இதனைச் சீர்செய்யும் முயற்சியில், புனேயில் உள்ள சி-டாக் – C-DAC (Centre for Development of Advanced Computing) என்ற இந்திய அரசு நிறுவனம் பல்வேறு கணினி நிபுணர்கள், விற்பன்னர்களின் துணையுடன் இந்திய மொழிகள் அனைத்திற்கும் பொதுவாக இந்திய நியமக் குறியீட்டு முறை சுருக்கமாக ‘இஸ்கி’ – ISCII (Indian Standard Code for Information Interchange) என்ற குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தியது.
இக்குறியீடு இந்திய மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் மாவட்ட ஆட்சி மையங்களில் புகழ்பெற்ற அளவுக்கு பொதுமக்களிடம் போதுமான வரவேற்பைப் பெறாததால் தோல்வியடைந்தது.
பெரும்பாலான இந்திய மொழிகளைத் தன்னுள் அடக்க வல்ல எளிதான ஒரு குறியீட்டு முறையை உருவாக்குவதில் ‘இஸ்கி’ ஓரளவுக்கு வெற்றி கண்டாலும் மக்கள் ‘அஸ்கு புஸ்கு’ என்று அதனை ஒதுக்கிவிட்டார்கள்.
பிறகு, ஆங்கிலம் போல் தமிழிலும் எல்லோரும் ஒரே குறியீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், சென்னையில் 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-8 தேதிகளில் நடைபெற்ற உலகத்தமிழ் இணைய மாநாட்டில் தமிழக அரசு இதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு சர்வதேச அங்கீகாரம் பெற்ற பொதுவான தமிழ் நியமக் குறியீட்டு முறை அல்லது ‘திஸ்கி’ (TSCII – Tamil Standard Code for Information Interchange) குறியீட்டு முறையை அறிவித்தது.
நல்லவேளை, நாம் பிழைத்தோம். தற்போது ஒருங்குறி (Unicode) சக்தி வாய்ந்த சர்வதேச குறியீட்டு முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்திய மொழிகள் மட்டுமல்லாமல், உலக மொழிகள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டு உலா வருகிறது!
(நம்ப முடியவில்லையா? இந்தக் கட்டுரையை எந்த தமிழ் எழுத்துருவும் (Tamil Font) நிறுவப்படாத, ஒருங்குறி வசதியுள்ள கணிணியில் போட்டுப் படித்துப்பாருங்கள்!!) ஒருங்குறி தமிழ்க்கணிமையின் வளர்ச்சிக்குப் பணியாற்றிய பல்வேறு ஆர்வலர்களின் பங்களிப்பையும் நினைவு கூரவேண்டியது நம் கடமை.

கம்ப்யூட்டர் கிராஷ்


பல வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும். சில வேளைகளில் திரையில் :
Fatal error: the system has become unstable or is busy,” it says. “Enter to return to Windows or press Control Alt Delete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications.” என்ற செய்தி கிடைக்கும். இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.

1. ஹார்ட்வேர் பிரச்னை: கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்னை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு கம்ப்யூட்டரில் இத்தகைய வழிகள் 16 குறைந்த பட்சம் இருக்கும். இதில் ஒரே வழியை இரு சாதனங்கள் (பிரிண்டர், கீ போர்டு / மவுஸ்) எடுத்துக் கொள்ளும்போது இயக்கம் நின்று போகும். இவ்வாறு ஏற்படுகையில் Start Settings Control Panel System Device Manager எனச் சென்று பார்த்தால், பிரச்னை ஏற்பட்ட சாதனத்தின் பெயர் முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக் குறி தோன்றும். டிவைஸ் மேனேஜரில், கம்ப்யூட்டர் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், இந்த சேனல் வழிகளுக்கான ஐ.ஆர்.க்யூ எண் காட்டப்படும். ஒரே எண் இருமுறை இருப்பின் பிரச்னை அங்குதான் உள்ளது என்று பொருள். இதற்குத் தீர்வு என்ன? பிரச்னைக்குரிய சாதனத்தை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் போதும்.
2. ராம் மெமரி சிப்ஸ்: ராம் மெமரியை உயர்த்துவதற்காகப் புதிய ராம் சிப் ஒன்றை இணைத்திருப்போம். ஆனால் ஒன்றுக் கொன்று வேறுபாடான வேகம் உள்ளவையாக அவை இருக்கலாம். அவற்றிற்கிடையே இணைந்து செல்லும் நிலை ஏற்படாத போது Fatal Exception Error ஏற்படலாம். இதனை கம்ப்யூட்டர் பாகங்களின் இயக்கம் தெரிந்தவர்கள் மூலம், பயாஸ் செட்டிங்ஸ் திறந்து, ராம் wait state நிலையைச் சற்று உயர்த்தலாம். அல்லது ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் சிப்களை அமைக்கலாம்.
3. ஹார்ட் டிஸ்க் டிரைவ்: பயன்படுத்தத் தொடங்கிய சில வாரங்களில் ஹார்ட் டிஸ்க்கின் ஒழுங்கு நிலை கலையத் தொடங்கும். தேவையற்ற தற்காலிக பைல்கள் தேங்கும். பைல்கள் சிதறியபடி சேமிக்கப்படும். இதனால் இயக்க வேகத்திற்கு ஹார்ட் டிஸ்க் இணையாக இயங்க முடியாமல் போகும். அப்போது கிராஷ் ஆக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு டிபிராக் செய்திட வேண்டும். சி டிரைவில் தங்கும் தேவையற்ற பைல்களை அதற்கான புரோகிராம்கள் கொண்டு நீக்கலாம்.
4. வீடியோ கார்ட்: சில வேளைகளில் கிராஷ் ஆகும் போது Fatal OE exceptions and VXD errors என்ற செய்தி கிடைக்கும். இது வீடியோ கார்டினால் ஏற்படுவது. இதனைத் தவிர்க்க வீடியோ டிஸ்பிளே யின் ரெசல்யூசனைக் குறைக்கவும். Start Settings Control Panel Display Settings எனச் சென்று ஸ்கிரீன் ஏரியா பாரினை இடது மூலையில் நிறுத்தவும். அதே போல கலர் செட்டிங்ஸ் சென்று 16 பிட் என்ற அளவில் அமைக்கவும்.
5. வைரஸ்: பெரும்பாலான கம்ப்யூட்டர் கிராஷ்களுக்கு வைரஸ்களே காரணம். சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி, அவ்வப்போது அதனை அப்டேட் செய்வது மட்டுமே இதனைத் தடுக்கும். பல வைரஸ்கள் பூட் செக்டாரைக் கெடுத்து வைக்கும். இதனால் கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. எனவே இது போன்ற நிலையில் கை கொடுக்க விண்டோஸ் ஸ்டார்ட் அப் டிஸ்க் ஒன்றை உருவாக்கி கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.
6. பிரிண்டர்: பல வேளைகளில் கம்ப்யூட்டர்கள் பிரிண்ட் எடுக்கையில் கிராஷ் ஆவதை நீங்கள் கவனித்திருக் கலாம். இதற்குக் காரணம் பிரிண்டர்களில் மிகவும் குறைந்த அளவில் பபர் மெமரி இருப்பதே ஆகும். மேலும் கம்ப்யூட்டரின் சிபியு சக்தியை பிரிண்டர்கள் சற்று அதிகமாகவே பயன்படுத்தும். எனவே பல வேலைகளுடன் பிரிண்டிங் வேலையை மேற்கொள்கையில், அல்லது அதிகமான அளவில் பிரிண்டருக்கு டேட்டாவினை அனுப்புகையில் கிராஷ் ஏற்படும். நாம் சாதாரணமாகக் காணாத கேரக்டர்களை பிரிண்டர் அச்சிட்டால் இந்த பிரச்னை தலை தூக்குகிறது என்று பொருள். உடனே பிரிண்டருக்குச் செல்லும் மின்சாரத்தை 10 விநாடிகளுக்கு நிறுத்திப் பின் மீண்டும் இயக்கவும்.
7. சாப்ட்வேர்: முழுமையாக இல்லாமல் அல்லது மோசமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகளால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகலாம். இவற்றைச் சரியாக அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இல்லையேல் இவை தொடர் பான வரிகள், ரெஜிஸ்ட்ரியில் இருந்து கொண்டு, இந்த சாப்ட்வேரினை இயக்குகையில் கம்ப்யூட்டரை கிராஷ் ஆகும் நிலைக்குக் கொண்டுவரலாம். ரெஜிஸ்ட்ரி யைச் சுத்தம் செய்திடவென வடிவமைக்கப் பட்ட புரோகிராம்களைக் கொண்டு அதனைச் சரி செய்திட வேண்டும். இல்லையேல் மீண்டும் விண்டோஸ் இயக்கத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.
8. அதிக வெப்பம்: இப்போது வருகின்ற சிபியுக்கள் மீது சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டு சிபியு இயக்கத்தின் போது உருவாகும் வெப்பம் வெளிக்கடத்தப் படுகிறது. சிபியு அதிக சூடானாலும், அதிக குளிர்ச்சியினால் பாதிக்கப் பட்டாலும், கெர்னல் எர்ரர் (Kernel Error) என்று ஒரு பிரச்னை ஏற்படும். பொதுவாக எந்த வேகத்தில் ஒரு சிபியு இயங்க வேண்டுமோ அதனைக் காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கு வகையில், சிபியு செட் செய்யப் பட்டிருந்தாலும் அதிக வெப்ப பிரச்னை ஏற்படும். எனவே சிபியு வின் வேகத்தினை பயாஸ் செட்டிங்ஸ் சென்று குறைக்க வேண்டும்.
9. மின் ஓட்டம்: கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் ஓட்டத்தினைச் சீராகத் தரும் சாதனங்களைக் கொண்டு தராவிட்டால், கிராஷ் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே சரியான யு.பி.எஸ். மற்றும் சர்ஜ் புரடக்டர் கொண்டு இதனைத் தவிர்க்கலாம்.

Screenshot மென்பொருளை Licence Key-யுடன் தறவிறக்க


boxshot-300x378.gifநாம் இணையத்தில் நிறைய படங்களை பார்த்திருப்போம்.அதுவும் அவர்கள் தளத்தில் இருந்து எடுக்கப்ப்ட்ட படமாக இருக்கும்.இதையெல்லாம் பார்க்கும் போது அவர்கள் ஒரு கையால் கேமராவை பிடித்துக்கொண்டு மறு கையாள Photo எடுப்பாங்கன்னு நினைப்போம்.நானும் நிணைத்திருக்கிறேன்.ஆனால் அது இல்லை.அதற்கென்று தனி மென்பொருள்கள் இருக்கின்றன.Screen-ஐ Photo எடுக்க பல மென்பொருள்கள் இருக்கின்றன.

அவற்றுள் பிடித்த ஒன்றை இங்கு பகிர்கிறோம். அதுவும் Licence Key-யுடன்.
Screenshot Studio:
  • இதை Install செய்தவுடன் உங்கள் திரையில் S என்று ஒரு படம் வந்து விடும்.
  • அதை கிளிக் செய்து Capture Region–>இல் தேவையானதை தேர்ந்தெடுக்கவும்.
  • பின் Screen-ல் உங்களுக்கு தேவையானதை தேர்ந்தெடுத்து Capture கொடுக்கவும்.
  • பின்னர் தோன்றும் திரையில் உள்ள SAVE என்பதை கிளிக் செய்து சேமிக்கவும்.
  • தறவிறக்க சுட்டி
Licence Key-ஐ தறவிறக்க சுட்டி
குறிப்பு:உங்கள் திரை அனைத்தையும் Capture செய்யலாம்

அனிமேசனுடன் கூடிய கூகுள் மேப்பை உருவாக்குவதற்கு


மேப் என்ற வார்த்தை சொன்னவுடன் உடனடியாக நமக்கு ஞாபகம் வருவது கூகிள் மேப் தான். அந்த அளவிற்கு கிராமத்தை கூட விட்டு வைக்காமல் கூகிள் மேப்-ல் காட்டுவது மேலும் சிறப்பு. கூகிள் மேப் அனிமேசனுடன் காட்டினால் எப்படி இருக்கும். ஆம் கூகிள் மேப்-ஐ அனிமேசனுடன் ஒரு தளம் உருவாக்கி கொடுக்கிறது.

வேடிக்கையாக கூகிள் மேப் பார்க்க சென்றவர்களை கூகிள் மேப் விடாமல் பிடித்துக்கொள்கிறது என்று தான் சொல்ல வேண்டும். புதிதாக ஒரு நபர் குறிப்பிட்ட ஊர் எங்கிருக்கிறது என்ற பார்க்க வேண்டும் என்று கூகிள் மேப் பக்கம் சென்றால் எங்கிருக்கிறது என்ற தகவல் மட்டுமல்ல பேருந்தில் பயணம் செய்தால் எத்தனை கி.மீ என்பது முதல் எவ்வளவு மணி நேரம் என்பது வரை துல்லியமாக கொடுக்கும் கூகிள் மேப் -ஐ அனிமேசனுடன் காட்டுவதற்காக ஒரு தளம் உள்ளது.
புதிய கோணத்தில் உங்கள் மேப்-ஐ இலவசமாக வடிவமைக்க எங்களிடம் வாருங்கள் என்று அழைக்கிறது இத்தளம். இங்கு சென்று நாம் Get Started என்ற பொத்தானை சொடுக்கி வரும் கூகிள் மேப் -ல் நம் இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும், அதன் பின் நமக்கு தேவையான படங்களை மேப்-ல் எங்கு வைக்க வேண்டும் என்பது போன்ற எல்லாத்தகவல்களையும் கொடுத்து அழகான அனிமேசன் மேப் உருவாக்கலாம்.
ஒரு அனிமேசன் மனிதன் கூகிள் மேப்-ல் நடந்து நம் இடத்திற்கு வருவது போல் கூட உருவாக்கலாம். புதிதாக இத்தளத்திற்கு வருபவர்களுக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைப்பற்றிய அறிமுக வீடியோவும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இணையதள முகவரி

விண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு


நம்மில் பலரும் விண்டோஸ் இயங்குதளம் தான் அதிகமாக பயன்படுத்துகிறோம். ஆனால் நம்மில் பலருக்கும் ஆப்பிள் கணணி மீது அதிக ஆர்வம் இருக்கும்அதை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். அதில் உள்ள கிராபிக்ஸ் மற்றும் அதன் அனிமேஷன் இதற்கு முக்கியமான காரணமாக இருக்கலாம்.

நாம் விண்டோசின் இயல்பான தோற்றத்தை மிகவும் எளிதாக ஆப்பிளை போல மாற்றலாம். இதற்கு நாம் ஒரு மென்பொருளை நிறுவவேண்டும்.பின்னர் கணணியை மறுத்தொடக்கம் செய்ய வேண்டும் அவ்வளவு தான். இந்த மென்பொருள் நம் கணணியை அப்படியே ஆப்பிள் கணணி போல தோற்றத்தில் மாற்றுகிறது மற்றும் MAC இல் உள்ள அனிமேஷனோடு வருகிறது.
குறிப்பிட்ட சுட்டியில் உள்ள மென்பொருளை பதிவிறக்கி கொள்ளுங்கள். இதனை நாம் சாதரணமாக மற்ற மென்பொருள்கள் நிறுவுவது போல நிறுவுங்கள்.பின்னர் உங்கள் கணணியை பாருங்கள். இதில் 4 வகையான தீம் இருக்கிறது. அதில் நீங்கள் உங்கள் விருப்பதை போல் தேர்வு செய்யுங்கள்.
இதனை பெறுவதற்கு உங்கள் டெஸ்க்டொப்பில் வலது கிளிக் செய்து அதில் PERSONALIZE என்பதை தேர்வு செய்யுங்கள். அதில் INSTALLED THEMES என்ற பிரிவில் உங்களுக்கு பிடித்த தீம்சை தேர்வு செய்யுங்கள்.
தரவிறக்க சுட்டி

ஒரே நேரத்தில் பல்வேறு புகைப்படங்களை பதிவிறக்கம் செய்வதற்கு


பல்வேறு இணைய பக்கங்களில் நாம் விதவிதமான வெவ்வேறு போர்மட்டுக்களில் புகைப்படங்களை பார்க்கின்றோம்.
சில இணைய பக்கங்களில் உள்ள அனைத்து புகைப்படங்களும் மிக அருமையாக இருக்கும். அதை ஒவ்வொன்றாக நாம் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

அதை விட அந்த பக்கங்களில் உள்ள அனைத்து புகைப்படங்களையும் நாம் மொத்தமாக பதிவிறக்கம் செய்ய இந்த சின்ன மென்பொருள் பயன்படுகின்றது. 1.25 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த மென்பொருளினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
இதனை நிறுவியதும் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உள்ள URL முகவரியில் உங்களுக்கு விருப்பமான இணைய முகவரியை தட்டச்சு செய்யவும்.
நீங்கள் தட்டச்சு செய்த முகவரி சரியானதுதான என பார்க்க இதில் உள்ள Open URL in Browser கிளிக் செய்தும் இணைய முகவரி நேரடியாக செல்லலாம்.
பின்னர் இதில் உள்ள அம்புகுறியை கிளிக் செய்ய நீங்கள் புகைப்படங்களை சேமிக்க விரும்பும் இடத்தை குறிப்பிடவும். இப்போழுது நீங்கள் இதில் உள்ள View Images கிளிக் செய்ய உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வலதுபுறம் உள்ள அம்புகுறி புகைப்படத்தின் ஒரிஜினல் போர்மட்டுக்கு பதிவிறக்கம் ஆகும். இடது புறம் உள்ள மூன்று அம்புகுறியை தேர்வு செய்வது மூலம் புகைப்படத்தை வேண்டிய போர்மட்டுக்கு மாற்றிக்கொள்ளலாம். அனைத்து புகைப்படங்களும் பதிவிறக்கம் ஆனதும் உங்களுக்கு Done என தகவல் வரும்.
தரவிறக்க சுட்டி

புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்றுவதற்கு


புகைப்படங்களை கார்ட்டுன் ஆக மாற்றிப் பார்ப்பதில் தனி இன்பம். இந்த மென்பொருளில் நாம் புகைப்படத்தை கொடுத்தால் 19 வகையான கார்ட்டுன் மாடல்களை நமக்கு அளிக்கும்.
தேவையான மாடலை தேர்வு செய்து அதில் மாற்றங்கள் தேவையானால் செய்துகொண்டு அதனை தனியே சேமித்து வைத்துக் கொள்ளலாம். 5 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும் உங்களின் வலதுபுறம் அந்த புகைப்படத்தை அட்ஜஸ்ட் செய்வதற்கான டூல்கள் -பிரஷ்கள் இருக்கும். அதில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி தேவையான அளவினை வைத்துக் கொள்ளலாம்.
தரவிறக்க சுட்டி

கோப்புகளை படங்களாக மாற்றம் செய்வதற்கு



நம்மிடம் இருக்கும் டாக்குமெண்ட் கோப்புகளான வேர்டு(Word) , எக்சல்(Excel )மற்றும் பவர்பாயிண்ட்(Power Point ) போன்ற கோப்புகளை Jpg படங்களாக மாற்றி கொடுக்க ஒரு தளம் உள்ளது. நம்மிடம் உள்ள டாக்குமெண்ட் கோப்புகளை சில சமயங்களின் ஓன்லைன் மூலம் பகிர்ந்து கொள்ளும் போது பல பேர் அதை அப்படியே கொப்பி எடுத்து எந்த அனுமதியும் பெறாமல் தங்களின் தளங்களில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

முக்கியமான கோப்புகளை படங்களாக இனி எளிதாக மாற்றலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று Browse என்ற பொத்தானை சொடுக்கி நம்மிடம் இருக்கும் கோப்புகளை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அடுத்து வரும் திரையில் View என்று இருப்பதை சொடுக்கி, நாம் பதிவேற்றம் செய்த கோப்புகளை படங்களாக பார்க்கலாம். இந்த படத்தின் மேல் Right Click செய்து Save image as என்பதை சொடுக்கி நம் கணணியில் JPG படங்களாக சேமிக்கலாம்.
வேர்டு, எக்சல் மற்றும் பவர்பாயிண்ட் கோப்புகளை நாம் இந்த முறையில் எளிதாக படங்களாக மாற்றலாம்.
இணையதள முகவரி

டெஸ்க்டொப்பில் தேவையான ஐகான்களை மட்டும் வைத்துக் கொள்வதற்கு


நாம் நமது டெக்ஸ்டொப்பினை குப்பையாக வைத்துக் கொள்ளாமல் தேவையான ஐகான்களை மட்டும் வைத்துக் கொள்ளலாம். அந்த ஐகான்களையும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் தோன்றுமாறு அமைத்துக் கொள்ளலாம்.இவ்வாறு செய்வதன் மூலம் நமது டெக்ஸ்டாப்பில் எந்த ஒரு ஐ-கானும் இருக்காது.

இதனை நிறுவியதும் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். அதில் எவ்வளவு நேரத்திற்கு பின்னர் உங்களுக்கு டெக்ஸ்டொப்பில் உள்ள ஐகான்கள் மறைய வேண்டுமோ அந்த நேரத்தை செட் செய்திடவும்.
ஒரு நிமிடத்திலிருந்து 20 நிமிடம் வரை நாம் நேரம் செட் செய்திடலாம். அந்த நேரம் ஆனதும் உங்களுக்கு கீழ்கண்ட ஸ்லைடில் நேரம் நகர ஆரம்பிக்கும். குறிப்பிடட நேரம் ஆனதும் உங்களுக்கு டெக்ஸ்டொப்பில் உள்ள ஐ-கான்கள் மறைந்துவிடும்.
தரவிறக்க சுட்டி

பிறந்தநாள் வாழ்த்துகளை ஞாபகப்படுத்தும் பயனுள்ள இணையம்


நம் பெற்றோர்கள் முதல் சகோதரர்கள், நண்பர்கள் என அனைவரின் பிறந்தநாளையும் ஞாபகம் வைத்து வாழ்த்துச் சொல்வது சற்று சிரமமான விசயம் தான்.இதற்காக பல தளங்கள் இருந்தாலும் ஒரு தளம் பிறந்தநாள் மற்றும் திருமணநாட்களை நமக்கு ஞாபகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
நேற்றே உனக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் மறந்து விட்டது என்று சொல்லும் நம்மவர்களுக்கு நண்பர்களின் பிறந்தநாள் மற்றும் முக்கிய தினங்களை நினைவுபடுத்த ஒரு தளம் உள்ளது.

இத்தளத்திற்கு சென்று Signup என்ற பொத்தானை சொடுக்கி புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொள்ள வேண்டும். அடுத்து நம் நண்பர்கள், உறவினர்களின் பிறந்தநாள், திருமணநாள் மற்றும் முக்கிய தினங்களை நாம் இத்தளத்தில் பதிந்து வைத்துக் கொள்ளலாம்.
ஒவ்வொருவருக்கும் செல்லப்பெயர் அல்லது அவர்களின் பெயர் மற்றும் பிறந்த தினம் என அனைத்தையும் சேமித்து வைப்பதன் மூலம் குறிப்பிட்ட தினத்திற்கு முந்தைய தினம் நமக்கு மின்னஞ்சல் மூலம் ஞாபகப்படுத்தும் நாளை உங்கள் நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லுங்கள் என்று நம் மின்னஞ்சலில் செய்தி வரும்.
அதன் பின் அலைபேசியிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ நாம் வாழ்த்து சொல்லலாம். அவருக்கும் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும், நம் பிறந்தநாளை மறக்காமல் வைத்து வாழ்த்து சொன்னதால் அவர்களின் மனதிலும் நீங்கள் இடம் பிடிக்கலாம்.
இணையதள முகவரி

வியப்பூட்டும் வெந்நீர் ஊற்றுகள்: அறிவியல் தகவல்!

பூமியில் சில இடங்களில் தரைப் பரப்பின் அடியில் உள்ள நீர் மிகவும் சூடாகி கொதிநிலையை அடைகிறது. நீரின் கொதிநிலை 212 டிகிரி பாரன்ஹீட். ஆனால் மிகுந்த அழுத்தத்தினால் கொதிநிலையை அடையும்முன்பே மிகச் சூடடைந்து விடுகிறது. பிறகு கொதிநிலையை அடைந்த உடனே நீராவியாகி விரிவடையத் தொடங்குகிறது. அவ்வாறு விரிவடையும்போது நீரை மேலே தூக்குகிறது. இதனால் நீர்ப் பரப்பில் அழுத்தம் குறைய, அப்பரப்பில் உள்ள தண்ணீர் கொதிநிலையை அடைந்து மேலும் நீராவி உண்டாகிறது.

இம்மாதிரி சேரும் நீராவியின் விசையால் தண்ணீர் மேலே தூக்கப்பட்டு தரைப் பரப்பில் இருந்து 15 முதல் 20 மீட்டர் உயரம் வரை பீய்ச்சி அடிக்கப்படுகிறது. பிறகு நீரூற்றுப் பாதையில் மேலும் குளிர்ந்த நீர் வந்து சேர, அது கொதிநிலை அடைந்து, நீராவி மேலும் நீரை வெளியே தள்ளுகிறது. இந்தச் சுழற்சி தொடர்கிறது.
அமெரிக்காவின் வயோமிங்கில் உள்ள யெல்லோஸ்டோன் நேஷனல் பார்க்கில் உள்ள கொதிநீரூற்று, 65 நிமிடங்களுக்கு ஒருமுறை 5 நிமிட நேரத்துக்குக் கொதிநீரை வெளிப்படுத்துகிறது. இந்த ஊற்று நீரில் தாதுப் பொருட்கள் கரைந்திருக்கின்றன.
எரிமலைகள் உள்ள பகுதிகளில் வெந்நீர் ஊற்றுகளும், கொதிநீரூற்றுகளும் அதிகமாகக் காணப்படுகின்றன. குறிப்பாக தென் அமெரிக்கா, ஜப்பான், மலாய் ஆர்ச் பிலாகோ, இத்தாலி போன்ற நாடுகளில் வெந்நீரூற்றுகள் உள்ளன. ஐஸ்லாந்து, நிïசிலாந்து, யெல்லாஸ்டோன் பார்க் ஆகிய இடங்களில் இவை அதிகமாக உள்ளன.
`கெய்ஸர்’ என்று அழைக்கப்படும் கொதிநீரூற்று தரையில் இருந்து 15 மீட்டர் முதல் 80 மீட்டர் வரை பீறிட்டு அடிக்கும். நீரையும், நீராவியையும் பல மீட்டர் உயரத்துக்குப் பீய்ச்சி அடிக்கும். வெந்நீர் ஊற்றானது கொதிநீரூற்றைப் போல சீறி அடிக்காது. இதன் வெப்பநிலை ஏறத்தாழ ஒரே மாதிரி இருக்கும். இதன் நீர் எவ்வளவு சீக்கிரம் சூடு அடைகிறதோ, அவ்வளவு சீக்கிரம் குளிர்ந்து விடும்.

இனி உங்களுடைய பிறந்த நாளுக்கும் கூகுள் லோகவை மாற்றும்


உலகின் பிரபலமான நாட்களிலும், அறிஞர்களின் விசேஷ நாட்களிலும் கூகுள் தனது லோகோவை மாற்றி அமைத்து அவர்களுக்கு சமர்பிக்கும். இது Doodles என்று அழைக்கப்படுகிறது. இன்று கூட நீங்கள் கூகுளின் லோகோவை பார்த்தால் மேரி கியூரியின் 144 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் மாற்றி அமைத்து உள்ளது. இந்த வரிசையில் தற்பொழுது இனி உங்களுடைய பிறந்த நாளுக்கும் கூகுள் தனது லோகோவை மாற்றி அமைத்து உங்களுக்கு வாழ்த்து சொல்லும்.

இனி உங்களின் பிறந்த நாளுக்கு கூகுளை ஓபன் செய்தால் கூகுளின் லோகோ மாறி இருக்கும் அதன் மீது உங்கள் கர்சரை நகர்த்தினால் Happy Birthday …. என்ற வாழ்த்தும் வரும்.

இது போன்ற லோகோ மாற்றத்திற்கு நீங்கள் இரு விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும்.
1. உங்களின் கூகுள் புரொபைலில் பிறந்த நாள் விவரங்களை கொடுத்து இருக்கவேண்டும். கொடுக்காதவர்கள் இங்கு சென்று கொடுக்கவும்.
2. பிறந்த நாளின் போது நீங்கள் கூகுள் லோகோவை பார்க்கும் முன் கூகுள் அக்கௌண்டில் லாகின் ஆகி இருப்பது அவசியம்.
கூகுளின் இந்த அறிவிப்பை காண – googleblog
வாசகர்களுக்கு இந்த அளவு முக்கியத்துவம் தருவதால் தான் கூகுள் எப்பொழுதும் நம்பர் 1 நிலையிலேயே உள்ளது.

புகைப்படங்களை அழகான ஆல்பமாக உருவாக்குவதற்கு


புகைப்படங்களை நாம் ஆல்பமாக உருவாக்க போட்டோஷாப்பில் எண்ணற்ற PSD டிசைன் கோப்புகள் உள்ளன.
ஆனால் நமது விருப்பதற்கேற்ப திருமணம், பிறந்தநாள், காலண்டர், அன்னையர் தினம், குழந்தைகள் தினம், காதலர்தினம் என விருப்பத்திற்கேற்ப ஆலபம் தயாரிக்கலாம். 15 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும்.

பின் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இதில் கொடுக்கப்பட்டிருக்கும் Scropbook, Greeting Card, Calendor என்பதில் எது உங்களுக்கு தேவையோ அதனை தேர்வு செய்துகொள்ளளலாம்.
Scrapbook ல் உப தலைப்புகளாக Holiday, Birthday, Family, baby, Kids, Wedding என இருக்கும். இதில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம்.
தேர்வு செய்யப்பட்ட விண்டோவில் நமக்கு அதிக அளவு டிசைன்கள் இருக்கும். உங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு டிசைனை தேர்வு செய்து அதனை டவுண்லோடு செய்துகொள்ளலாம்.
டிசைனை தேர்வு செய்தபின்னர் நாம் நமது விருப்பபடி நாம் புகைப்படங்களை தேர்வு செய்துகொள்ளலாம்.
புகைப்படங்களை Autofill முறையிலும் தேர்வு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு புத்தகத்திலும் ஐந்து டிசைன்கள் இருக்கும். தேவைப்பட்டால் நாம் டிசைன்களை அதிகப்படியாக சேர்த்துக் கொள்ளலாம்.
தரவிறக்க சுட்டி

உலக சனத்தொகையில் நீங்கள் எத்தினையாவது இடம்? அறிந்து கொள்ள இங்கே அழுத்துங்கள்!!



உலக மக்கள் தொகையானது ஏழு பில்லியனை தாண்டிவிட்டது. இந்நிலையில் 7 பில்லியனில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதை அறிவதற்காக பிபிசி இணையத்தளம் இணைப்பொன்றை உருவாக்கியுள்ளது. பிறந்த திகதி, மாதம் மற்றும் வருடத்தை கொடுத்ததும் உங்களுக்கான நம்பரை தருகிறது இந்த இணைப்பு.

ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தின் தரவுகளை வைத்து இவற்றை கணிப்பதாக சொல்கிறார்கள். மேலும் Global Footprint Network, International Telecommunications Union போன்றவற்றின் தரவுகளும் இதில் பயன்படுத்தப்பட்டதாம்.
உங்களின் இடத்தை தெரிந்து கொள்ள ஆசையா, இங்கே அழுத்துங்கள்