ஞாயிறு, 4 மே, 2014

போட்டோஷாப் பாடம்-12(Pen Tool)


altடூல்கள் வரிசையில் 17 வதாக உள்ள டூல்தான் பென்டூல். பேனாவின் நிப் மாதிரி உங்களுக்கு இந்த டூல் தோன்றமளிக்கும்.
இதை செலக்ட் செய்துகொள்ளுங்கள்.

alt

இப்போது மேல்புறம் உள்ள OptionBar –ல் பார்த்தீரகளேயானால் முதலில் பென்டூலும் அடுத்து கட்டத்தில் முதலில் ஒரு சதுரமும் இருக்கும் .அதை விட்டுவிடுங்கள். அடுத்த சதுரம் அருகே கர்சர் கொண்டு செல்லுங்கள். அடுத்த டூல் Paths என காண்பிக்கும். alt

அதை கிளிக் செய்யுங்கள். இனி படத்தை எப்படி கட் செய்வது என பார்க்கலாம். உங்கள் கணிணியில் சேமித்துவைத்துள்ள ஒரு படத்தை திறந்து கொள்ளுங்கள் alt

நான் இந்த படத்தில் நடுவில் இருப்பவரைமட்டும் தனியே பிரித்துஎடுக்க போகின்றேன்.

அதை எப்படி என பார்க்கலாம்.

நீங்கள் பென் டூல் செலக்ட் செய்ததும் உங்கள் கர்சரை அந்த படத்தின் அருகே கொண்டு செல்லுங்கள். உங்கள் கர்சரானது பேனாவின் நிப்பாக மாறிவிடும். இப்போது பேனாவை படத்தின் கீழ் பகுதியில் கிளிக் செய்யவும். இப்போது படத்தில் ஒரு சின்ன சதுரம் உருவாகியிருப்பதை பாருங்கள்.அடுத்து கொஞ்சம் தள்ளி மற்றும் ஒரு கிளிக் செய்யுங்கள். இப்போது மற்றும் ஒரு சதுரம் உருவாகி இரண்டு சதுரங்களும் ஒரு சிறுகோட்டால் இணைவதை காணலாம் alt

மேலே உள்ள படத்தை பாருங்கள். நான் முழங்கைவரை கட் செய்துள்ளது தெரியும்.இங்கு ஒரு சின்ன ஆலோசனை. நாம் பேப்பரில் உள்ள ஒரு படத்தை கத்தரிக்கோலால் கட் செய்யும்போது என்ன செய்கின்றோம். வேகமாக கட்செய்யும் போது ஒரு அங்குலத்திற்கு படம் கட் டாகும். மெதுவாக கட் செய்யும் போது ஒவ்வொரு சென்டிமீட்டராக படம் கட்டாகும். மெதுவாக கட்செய்யும் படம் அழகாக இருக்கும். வேகமாக கட்செய்யும் படம் ஒரங்கள் தாறுமாறாக இருக்கும். அதுபொல்தான் இங்கும் நீங்கள் பென்டூலால் கட்செய்யும் போது இடைவெளி குறைவாக வைத்து புள்ளிகள் வைத்துச்செல்லவும். புள்ளிகளுக்கிடையே இடைவெளி அதிகமானால் படங்களின் ஓரத்தில் உங்களுக்கு பினிஷிங் இருக்காது. நான் நடுவில் இருக்கும் படத்தை கீழே இருந்து கட் செய்ய ஆரம்பித்து அவர் உருவத்தின் அவுட்லைன் முழுவதும் கட்செய்தபின் ஆரம்பித்த புள்ளியையும் முடித்த புள்ளியையும் இணையுங்கள். இப்போது நீங்கள் தேர்வுசெய்தபடம் அவுட்லைன் முழுவதும் தேர்வாகிவிட்டது. அடுத்து நீங்கள் கட்செய்த படத்தின்மீது கர்சரைவைத்து கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். alt

அதில் நான்காவது லைன் பாருங்கள். Make Selection இருக்கின்றதா. அதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.alt

அதில் உள்ள Feather Radius எதிரில் உள்ள கட்டத்தில் உங்களுக்கு தேவைக்கு ஏற்ப அளவினை கொடுங்கள். Feather பற்றி நான் ஏற்கனவே விளக்கங்கள் கொடுத்துள்ளேன். இங்கு நான் குறைந்த அள வே கொடுத்து்ள்ளேன். இப்போது ஓகே கொடுங்கள். இப்போது நீங்கள் தேர்வு செய்த படத்தை சுற்றி சீரியல் லைட் போட்டவாறு சிறு சிறு கோடுகள் சுற்றி வருவதை பார்க்கலாம். இதுவரை உங்களுக்கு சரியாக வந்தால் நீங்கள் பாடத்தை சரியாக பின் தொடர்ந்து வருகின்றீர்கள் என எடுத்துக்கொள்ளலாம்.

இப்போது பைல் மெனு சென்று நீயு கிளிக் செயயுங்கள்.

உங்களுக்கு அளவுகளுடன் ஒரு காலம் உண்டாகும். அதில் நீங்கள் நீளம் - அகலம் - ரெசுலேஷன் தேர்வு செய்யுங்கள். ரெசுலேஷன் ஒரே அளவாக இருந்தால்தான் படம் அழகாக இருக்கும். ஒகே கொடுங்கள். இப்போது உங்களுக்கு படங்கள் இல்லாமல் வெள்ளைநிற விண்டோ ஒப்பன் ஆகி இருக்கும். இனி நீங்கள் கட்செய்தபடத்திற்கு வாருங்கள். படத்தின் மீது கிளிக்செய்து மூவ்டூல் செலக்ட் செய்யுங்கள். இப்போது படத்தின் அருகே கர்சர் கொண்டு செல்லும்சமயம் கர்சரானது கத்திரி்க்கோலாக மாறுவதை காணலாம். இனி கர்சரை மெதுவாக நகர்த்துங்கள். நீங்கள் கட்செய்த படம்மட்டும் நகர்வதை காணலாம். alt

நீங்கள் படத்தை நகர்த்திகொண்டுவந்து நீங்கள் புதிதாக திறந்த விண்டோவில் விட்டு விடவும். இப்போது பார்ததீரு்களேயானால் நீங்கள் கட்செய்தபடம் புதிய விண்டோவிலும் இருக்கும். பழைய படத்திலும் இருக்கும்.alt

படத்தை மூன்றுமுறை நகர்த்தி வைத்துள்ளேன்.
கீழே உள்ள படத்தை பாருங்கள். alt

இதேபோல் நாம் எந்தனை முறை வேண்டுமானாலும்

வரிசையாக வைத்துக்கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக