ஞாயிறு, 4 மே, 2014

போட்டோஷாப் பாடம் -9 (Flip Horizontal Tool)


altமுதலில் நீங்கள் மாற்ற வேண்டிய படத்தை தேர்வுசெய்து கொள்ளுங்கள்.அதை முறையே மார்க்யு டூலால் படம் முழுவதையும் தேர்வு செய்து அதை ப்ரி டிரான்ஸ்பார்ம் டூலால் தேர்வுசெய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட சாரளம் ஓப்பன் ஆகும். அதில் உள்ள Rotate 180 ஐ தேர்வு செய்யுங்கள். சென்ற பாடத்தில் கடைசியாக Free Transform Tool பார்த்தோம். அதில் உள்ள Scale,Rotate,Skew,Distort,Perspective,Wrap வரை பார்த்துள்ளோம். இனி அதில் அடுத்துள்ள பயன்பாடு பற்றி பார்க்கலாம்.alt

இப்போது நான் கீழ்கண்ட படத்தை எடுத்து கொண்டுள்ளேன்.alt

இப்போது இதில் Rotate 180 ஐ நான் தேர்வுசெய்ததும் உங்களுக்கு படம் ஆனது கீழ்கண்டவாறு மாறியிருக்கும். alt

இந்த மாற்றத்தை நீங்கள் நிரந்தராக வைத்துக்கொள்ள விரும்பினால் நீங்கள் File மெனு சென்று Save கிளிக் செய்யுங்கள். அப்போது உங்களுக்கு கீழ் கண்ட எச்சரிக்கை செய்தி கிடைக்கும். இந்த மாற்றத்தை நீங்கள் நிரந்தராக வைத்துக்கொள்ள விரும்பினால் நீங்கள் File மெனு சென்று Save கிளிக் செய்யுங்கள். அப்போது உங்களுக்கு கீழ் கண்ட எச்சரிக்கை செய்தி கிடைக்கும். alt


அதில் உள்ள Apply கிளிக் செய்யவும்.இந்த சமயத்தில் நீங்கள் தேர்வு செய்தபடம் நிரந்தரமாக மாறிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.ஆனால் இதே படத்தை நீங்கள் Save As மூலம் தேர்வுசெய்தால் மாற்றத்திற்கு உள்ளான படம் தனிபடமாக மாறிவிடும்.இதே போல் படங்களை 90 டிகிரி கோணத்தில் கடிகாரச்சுற்றில் மாற்றலாம். alt


அதைப்போல் படத்தை மாற்றுகடிகாரச்சுற்று Rotate 90 CCW தேர்வு செய்தால் படமானது கீழ்கண்டவாறு மாறிவிடும்.alt

நீங்கள் புகைப்படங்கள் எடுக்கையில் சில புகைப்படங்களை புகைப்பட கோணத்திற்கு ஏற்ப கேமராவை திருப்பி படம் எடுப்பீர்கள். அதை நீங்கள் பார்க்கையில் அனைத்துப்படங்களும் படுக்கை வாசத்தில் இருக்க நீங்கள் கேமராவை திருப்பி எடுத்த படம் மட்டும் திரும்பி இருக்கும். அந்த மாதிரியான புகைப்படங்களை நீங்கள் இந்த டூல் கொண்டு சுலபமாக மாற்றிக்கொள்ளலாம். இதைநாம் போல்டரிலேயே சுலபமாக மாற்றிக்கொள்ளலாம் என நீங்கள் சொல்வது கேட்கின்றது. போட்டோஷாப்பிலும் இந்த வசதி உள்ளது என தெரிவிக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன். இனி அடுத்துள்ள Flip Horizontal பற்றி பார்க்கலாம். முன்பே சொன்னவாறு படத்தை தேர்வுசெய்து கொள்ளுங்கள். முறையே Free Transform Tool தேர்வு செய்து அதில் உள்ள Flip Horizontal தேர்வுசெய்யுங்கள். alt

நான் கீழே உள்ள படத்தை தேர்வுசெய்து உள்ளேன்.alt

இப்போது இதில் நாம் Flip Horizontal தேர்வு செய்ய படம்மானது உங்களுக்கு இந்த மாதிரி மாறிவிடும்
alt

இதைப்போல் நீங்கள் Flip Vertical Tool ஐ தேர்வு செய்தால் உங்களுக்கு படம் இந்தமாதிரி கிடைக்கும்alt


நீங்கள் படத்தின் தேதியை வைத்து படம் மாறி உள்ளதை அறிந்துகொள்ளலாம். இனி இதை வைத்துசெய்த ஒரு சின்ன போட்டோஷாப் மாஜிக் படத்தை பாருங்கள். நீங்கள் படத்தின் தேதியை வைத்து படம் மாறி உள்ளதை அறிந்துகொள்ளலாம். இனி இதை வைத்துசெய்த ஒரு சின்ன போட்டோஷாப் மாஜிக் படத்தை பாருங்கள். alt


இதை எப்படி செய்வது என பார்க்கலாம். முன்பு பார்த்தமாதிரி படத்தை தேர்வுசெய்யுங்கள்.alt


இதை நாம் Flip Horizontal Tool மூலம் மாற்றியபின்alt

உங்களுக்கு மேற்கண்டவாறு படம் கிடைக்கும். இனி உங்கள் கீ-போர்டில் உள்ள Enter தட்டுங்கள். இப்போது நீங்கள் போட்டோஷாப்பின் மேல் மெனுபாரில் உள்ள பைல்மெனுக்கு அடுத்துள்ள Edit கிளிக் செய்யுங்கள்.alt


இப்போது அதில் உள்ள Copy கிளிக் செய்யுங்கள். இப்போது மீண்டும் பைல் மெனு செல்லுங்கள்alt

அதில் உள்ள New கிளிக் செய்யுங்கள் . உங்களுக்கு கீழ்கண்டவாறு சாரளம் ஓப்பன் ஆகும்.alt


இப்போது இதில் உள்ள Name என்கின்ற இடத்தில் நீங்கள் விரும்பும் பெயரை கொடுத்துக்கொள்ளுங்கள். அடுத்து உள்ள Width அளவை இரண்டால் பெருக்கி பின் OK. கொடுங்கள். இப்போது உங்களுக்கு வெள்ளை பின்நிறத்துடன் ஒரு கட்டம் தோன்றும். இப்போது மீண்டும் Edit சென்று அதில் உள்ள Paste கிளிக் செய்யவும். alt

இப்போது நீங்கள் தேர்வு செய்த படம் வெள்ளை கட்டத்தில் பாதியில் வந்து இருக்கும்.இப்போது மீண்டும் முதலில் தேர்வு செய்த படத்தை கர்சர் மூலம் இழுத்துவந்து விடவும். இப்போது உங்களுக்கு இந்த மாதிரி படம் கிடைக்கும். alt

இரண்டு மூன்று முறை முயற்சி செய்து பாருங்கள்.
படம் சரியாக வரும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக