ஞாயிறு, 4 மே, 2014

போட்டோஷாப் பாடம்-12(Pen Tool)


altடூல்கள் வரிசையில் 17 வதாக உள்ள டூல்தான் பென்டூல். பேனாவின் நிப் மாதிரி உங்களுக்கு இந்த டூல் தோன்றமளிக்கும்.
இதை செலக்ட் செய்துகொள்ளுங்கள்.

alt

இப்போது மேல்புறம் உள்ள OptionBar –ல் பார்த்தீரகளேயானால் முதலில் பென்டூலும் அடுத்து கட்டத்தில் முதலில் ஒரு சதுரமும் இருக்கும் .அதை விட்டுவிடுங்கள். அடுத்த சதுரம் அருகே கர்சர் கொண்டு செல்லுங்கள். அடுத்த டூல் Paths என காண்பிக்கும். alt

அதை கிளிக் செய்யுங்கள். இனி படத்தை எப்படி கட் செய்வது என பார்க்கலாம். உங்கள் கணிணியில் சேமித்துவைத்துள்ள ஒரு படத்தை திறந்து கொள்ளுங்கள் alt

நான் இந்த படத்தில் நடுவில் இருப்பவரைமட்டும் தனியே பிரித்துஎடுக்க போகின்றேன்.

அதை எப்படி என பார்க்கலாம்.

நீங்கள் பென் டூல் செலக்ட் செய்ததும் உங்கள் கர்சரை அந்த படத்தின் அருகே கொண்டு செல்லுங்கள். உங்கள் கர்சரானது பேனாவின் நிப்பாக மாறிவிடும். இப்போது பேனாவை படத்தின் கீழ் பகுதியில் கிளிக் செய்யவும். இப்போது படத்தில் ஒரு சின்ன சதுரம் உருவாகியிருப்பதை பாருங்கள்.அடுத்து கொஞ்சம் தள்ளி மற்றும் ஒரு கிளிக் செய்யுங்கள். இப்போது மற்றும் ஒரு சதுரம் உருவாகி இரண்டு சதுரங்களும் ஒரு சிறுகோட்டால் இணைவதை காணலாம் alt

மேலே உள்ள படத்தை பாருங்கள். நான் முழங்கைவரை கட் செய்துள்ளது தெரியும்.இங்கு ஒரு சின்ன ஆலோசனை. நாம் பேப்பரில் உள்ள ஒரு படத்தை கத்தரிக்கோலால் கட் செய்யும்போது என்ன செய்கின்றோம். வேகமாக கட்செய்யும் போது ஒரு அங்குலத்திற்கு படம் கட் டாகும். மெதுவாக கட் செய்யும் போது ஒவ்வொரு சென்டிமீட்டராக படம் கட்டாகும். மெதுவாக கட்செய்யும் படம் அழகாக இருக்கும். வேகமாக கட்செய்யும் படம் ஒரங்கள் தாறுமாறாக இருக்கும். அதுபொல்தான் இங்கும் நீங்கள் பென்டூலால் கட்செய்யும் போது இடைவெளி குறைவாக வைத்து புள்ளிகள் வைத்துச்செல்லவும். புள்ளிகளுக்கிடையே இடைவெளி அதிகமானால் படங்களின் ஓரத்தில் உங்களுக்கு பினிஷிங் இருக்காது. நான் நடுவில் இருக்கும் படத்தை கீழே இருந்து கட் செய்ய ஆரம்பித்து அவர் உருவத்தின் அவுட்லைன் முழுவதும் கட்செய்தபின் ஆரம்பித்த புள்ளியையும் முடித்த புள்ளியையும் இணையுங்கள். இப்போது நீங்கள் தேர்வுசெய்தபடம் அவுட்லைன் முழுவதும் தேர்வாகிவிட்டது. அடுத்து நீங்கள் கட்செய்த படத்தின்மீது கர்சரைவைத்து கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். alt

அதில் நான்காவது லைன் பாருங்கள். Make Selection இருக்கின்றதா. அதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.alt

அதில் உள்ள Feather Radius எதிரில் உள்ள கட்டத்தில் உங்களுக்கு தேவைக்கு ஏற்ப அளவினை கொடுங்கள். Feather பற்றி நான் ஏற்கனவே விளக்கங்கள் கொடுத்துள்ளேன். இங்கு நான் குறைந்த அள வே கொடுத்து்ள்ளேன். இப்போது ஓகே கொடுங்கள். இப்போது நீங்கள் தேர்வு செய்த படத்தை சுற்றி சீரியல் லைட் போட்டவாறு சிறு சிறு கோடுகள் சுற்றி வருவதை பார்க்கலாம். இதுவரை உங்களுக்கு சரியாக வந்தால் நீங்கள் பாடத்தை சரியாக பின் தொடர்ந்து வருகின்றீர்கள் என எடுத்துக்கொள்ளலாம்.

இப்போது பைல் மெனு சென்று நீயு கிளிக் செயயுங்கள்.

உங்களுக்கு அளவுகளுடன் ஒரு காலம் உண்டாகும். அதில் நீங்கள் நீளம் - அகலம் - ரெசுலேஷன் தேர்வு செய்யுங்கள். ரெசுலேஷன் ஒரே அளவாக இருந்தால்தான் படம் அழகாக இருக்கும். ஒகே கொடுங்கள். இப்போது உங்களுக்கு படங்கள் இல்லாமல் வெள்ளைநிற விண்டோ ஒப்பன் ஆகி இருக்கும். இனி நீங்கள் கட்செய்தபடத்திற்கு வாருங்கள். படத்தின் மீது கிளிக்செய்து மூவ்டூல் செலக்ட் செய்யுங்கள். இப்போது படத்தின் அருகே கர்சர் கொண்டு செல்லும்சமயம் கர்சரானது கத்திரி்க்கோலாக மாறுவதை காணலாம். இனி கர்சரை மெதுவாக நகர்த்துங்கள். நீங்கள் கட்செய்த படம்மட்டும் நகர்வதை காணலாம். alt

நீங்கள் படத்தை நகர்த்திகொண்டுவந்து நீங்கள் புதிதாக திறந்த விண்டோவில் விட்டு விடவும். இப்போது பார்ததீரு்களேயானால் நீங்கள் கட்செய்தபடம் புதிய விண்டோவிலும் இருக்கும். பழைய படத்திலும் இருக்கும்.alt

படத்தை மூன்றுமுறை நகர்த்தி வைத்துள்ளேன்.
கீழே உள்ள படத்தை பாருங்கள். alt

இதேபோல் நாம் எந்தனை முறை வேண்டுமானாலும்

வரிசையாக வைத்துக்கொள்ளலாம்.

போட்டோஷாப்-11 Duplicate,Image Size,Canvas Size,File info


altபோட்டோஷாப்பில் இன்று Duplicate,Image Size,Canvas Size,File info மற்றும் Page Setup பற்றி பார்க்கலாம். அதில் நாம் மெனுபார் சென்று அங்கு Image -ல் Duplicate,Image Size,Canvas Size உபயோகிப்பதை பற்றி பார்த்தோம். ஆனால் அங்கு செல்லாமலே நாம் சுலபமாக
மற்றும் ஓரு வழியில் மேற்கண்ட கட்டளைகளை செய்வதை இங்கு பார்க்கலாம்.
 
முதலில் ஒரு படத்தை தேர்வுசெய்து கொள்ளுங்கள்.நான் ஐஸ்வர்யா ராய் அவர்களின் படத்தை எடுத்துள்ளேன். அதில் படத்தின் மேல்புறம் உள்ள புளு பட்டையின் மேல் கர்சரை வைத்து கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.alt
அதில் உள்ள Duplicate கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.alt

ஓகே கொடுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோக்கள் இரண்டு தோன்றுவதை பாருங்கள்.alt



அடுத்துள்ளது Image Size தேர்வு செய்யுங்கள்.alt

உங்களுக்கு தேவையான அளவினை இங்கு தேர்ந்தேடுத்துக் கொள்ளுங்கள். ஓகே கொடுத்தால் நீங்கள் விரும்பிய அளவினை பெறலாம்.alt
அடுத்துள்ளது Canvas Size. கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.alt
இதனை தேர்வு செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.alt
உங்கள் படத்தின் அளவினை Current Size-ல் பார்க்கலாம்.
New Size-ல்நமக்கு வேண்டிய அளவினை கொடுத்துப்
பெறலாம்.இதில் Anchorபார்த்தால் அதில் ஓன்பது
கட்டங்கள் இருக்கும்.சுற்றிலும் அம்புக்குறியும்நடுவில்
வெண்மை நிறமும் இருக்கும்.உங்கள் கர்சரை எந்த
அம்புக்குறியில் நீ்ங்கள் கிளிக் செய்கின்றீர்களோ
அந்த இடம்வெள்ளை நிறத்தையும் அநத இடத்தை
சுற்றி அம்புக்குறிஅமைவதையும்காணலாம்.
 
இப்போது உங்களுக்கு தேவையான அளவினை நீயு
சைஸ்ஸில்நீள -அகலத்துடன் குறிப்பிடுங்கள்.
(உங்கள் படத்தினை ஓன்பது பாகங்களாக
பிரித்து அதில் எந்த இடம் உங்களுக்கு வேண்டுமோ
அந்த இடத்தைநீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள்)
நான் இந்த படத்தில் ஐஸ்வர்யாஅவர்களின் கண்களை
தேர்வு செய்வதற்காக (ஐஸ் அவர்களின் ஐஸ்)
அகலம் 5 அங்குலம் உயரம் 1.5 அங்குலமும் வைத்துள்ளேன்.
கீழேஉள்ள விண்டோவினை பாருங்கள்.
alt

ஓகே கொடுங்கள். உங்களுக்கு கீழ் கண்ட விண்டொ தோன்றும்.
Proceed கொடுங்கள். கீழே தோன்றும் படத்தை பாருங்கள்.
alt
ஓ.கே. கொடுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டொ தோன்றும்.alt

இதைப்போல் உங்களுக்கு தேவையான இடத்தை தேர்வு
செய்யுங்கள்.இந்த கட்டளையை நாம் Crop Tool மூலமும்
செய்யலாம்.அதைபின் வரும் பாடங்களில் பார்க்கலாம்.
கடைசியாக உள்ளது Page Setup. அதை தேர்வு செய்யுங்கள்
alt

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்கள்
பேப்பரின் அளவினையும் போட்டோவானது நீளவாக்கிலா அல்லது
அகலவாக்கினில் தேவையா என்பதையும் தேர்வு செய்யுங்கள்.
alt



இதில் உள்ள பிரிண்டரை தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.
altஉங்கள் பிரிண்டர் பெயரையும் அளவினை செட் செய்து ஓகே கொடுங்கள்.பிரிண்டர் இணைப்பு கொடுத்திருந்தால் உங்களுக்கு நீங்கள் தேர்வு செய்தபடம் ஆனது பிரிண்ட் ஆகும். இதே கட்டளையை நாம் மெனுபாரில் உள்ளபைல் மூலமும் நிறைவேற்றலாம். அதனையும் நாம் பின் வரும் பாடங்களில்பார்க்கலாம்.

போட்டோஷாப் பாடம்-10(Images)


altஇதுவரை நடத்தியுள்ள பாடம் வைத்து என்னவெல்லாம் செய்யலாம் என பார்க்கலாம். அதற்குள் இரண்டு -மூன்று டூல்கள் பற்றி ஒரு சின்ன முன்னோட்டம் பார்த்து கொள்ளலாம்.
( வரிசையாக பாடங்களை பார்த்துவரும் சமயம் அந்த டூல்கள் பற்றி விரிவாக பார்த்துக்கொள்ளலாம்.)

முதலில் Images பற்றி பார்க்கலாம். இதன் மூலம் போட்டோவை எப்படி டூப்ளிகேட் எடுப்பது,போட்டோ அளவு மாற்றுதல் மற்றும் போட்டோவின் ரெசுலேசன் மாற்றுதல் பற்றி பார்க்கலாம்.

முதலில் நீங்கள் போட்டோஷாப் திறந்து கொள்ளுங்கள். அடுத்து உங்கள் கணிணியில் உள்ள ஒரு புகைப்படத்தை திறந்து கொள்ளுங்கள். நான் இப்போது இந்த மயில் படத்தை திறந்து உள்ளேன்
 alt

அடுத்து நீங்கள் மெனுபார் பார்த்தீர்களே யானால் உங்களுக்கு மூன்றாவதாக image இருக்கும் . அதை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். alt



இதில் மூன்றாவது வரியில் உள்ள Dublicate கிளிக் செய்யவும்.alt

உங்களுக்கு இந்த மாதிரியான விண்டோ ஓப்பன் ஆகும். ஓகே கொடுக்கவும்alt

இப்போது நீங்கள் முதலில் திறந்த படத்தை (ஒரிஜினல்) கிளிக் செய்து மூடிவிடவும். அடுத்து இப்போது உங்களுக்கு நீங்கள் டூப்ளிகேட் காப்பி செய்த படம் மட்டும் இருக்கும். இதில் நீங்கள் என்னவேண்டும் ஆனாலும் செய்யலாம். சரி அது அப்படியே இருக்கட்டும். இப்போது இந்த போட்டாவின் அளவுகளை மாற்றுவது பற்றி பார்க்கலாம். நீங்கள் Image உள்ளImage Size அல்லதுalt


கீ போர்ட்டில் Alt+Ctrl+I-தட்டச்சு செய்யவும்.
உங்களுக்கு நீங்கள் தேர்வுசெய்த படத்தின் நீளம்-அகலம் - மற்றும் ரெசுலேஷன் கிடைக்கும்.alt


இதில் உள்ள அகலம் (Width) காலத்தில் உள்ள அகலத்தை நீங்கள் மாற்ற நீளமானது அதற்கேன உள்ள Starndard அளவில் தானே மாறிவிடும். அதுபோல் படத்தை நீங்கள் அங்குலத்தில் செட் செய்தால் படம் அங்குலத்திலும் -சென்டிமீட்டர்-செட் செய்தால் சென்டிமீட்டரிலும் வரும்.இந்த அளவுகள் நீங்கள் மாற்றிய அகலத்திற்கு அடுத்த காலத்தில் பார்க்கலாம்.,இப்போது நான் கீழ்கண்ட படத்தில் அகலத்தை 6 அங்குலம்(Inch) என மாற்ற நீளமானது தானே 4.5 அங்குலம் மாறிவிட்டதை காண்பீர்கள். alt

மாற்றிய அளவில் வந்துள்ள புகைப்படம் கீழே கொடுத்துள்ளேன்.alt

இனி Resolution பற்றி பார்க்கலாம் படத்தின் தரமானது ரெசுலேசனை அதிகமாகமாற்றினால் அழகாகவும்-குறைவாக மாற்றினால் தரம் குறைந்தும் காணப்படும். நாம் நமது புகைப்படத்தில் நார்மலாக 200-லிருந்து 300 வைத்துக்கொள்ளலாம். அதுபோல் பெரிய பேனர்கள் போடும் சமயம் 450 லிருந்து 600 ஆக மாற்றிக்கொள்ளலாம். உங்களது படங்கள் ஏதாவது பேனர் சைஸ் போடவேண்டும் என்றால் பேனர் அளவை பொருத்து 450 லிருந்து 600 பிக்ஸல் வரை அளவை மாற்றிபிரிண்ட் செய்ய கொடுக்கவும். இப்போது நான் இந்த புகைப்படத்தை 70 ரெசுலேஷனாக மாற்றி உள்ளேன். alt


இதன் நீள அகலங்களை மாற்ற வில்லை ஆனால் ரெசுலேசனை மட்டும் மாற்றியுள்ளேன்alt


அதேபோல் ரெசுலேசனை அதிகமாக மாற்றி அதாவது 400 வைத்து படத்தை மாற்றிஉள்ளேன்alt

ரெசுலேசனை மாற்றியபின் வந்த படம் கீழே கொடுத்துள்ளேன். alt

நீங்கள் இதுபோல் ஒரு படத்தை எடுத்துக்கொண்டு ரெசுலேசனை மாற்றி அருகருகே வைத்துக்கொண்டு பாருங்கள் . வித்தியாசத்தை உணர்வீர்கள். எல்லா வேலையும் முடிந்துவிட்டது. இப்போது இந்த படத்தை மூடிவிட உங்களுக்கு கீழ் கணட விண்டோ கிடைக்கும்.alt


இதில் நீங்கள் yes கிளிக் செய்தால் படமானது நீங்கள் விரும்பும் போல்டரில் சேவ் ஆகும். உங்கள் ஒரிஜினல் படம் அப்படியே இருக்கும். இதை போல் படம் எடுத்து மாற்றங்கள் நிறைய செய்து பாருங்கள். alt



மேலே உள்ள படத்தை நான் ஏற்கனவே நடத்திய மார்க்யு டூல் கொண்டு படங்களை கீழ்கண்டவாறு கட் செய்துள்ளேன். அதுபோல் நீங்களும் முயற்சி செய்து பார்க்கவும். alt

பதிவின் நீளம் கருதி பாடத்தை இத்துடன் முடிக்கின்றேன்

போட்டோஷாப் பாடம் -9 (Flip Horizontal Tool)


altமுதலில் நீங்கள் மாற்ற வேண்டிய படத்தை தேர்வுசெய்து கொள்ளுங்கள்.அதை முறையே மார்க்யு டூலால் படம் முழுவதையும் தேர்வு செய்து அதை ப்ரி டிரான்ஸ்பார்ம் டூலால் தேர்வுசெய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட சாரளம் ஓப்பன் ஆகும். அதில் உள்ள Rotate 180 ஐ தேர்வு செய்யுங்கள். சென்ற பாடத்தில் கடைசியாக Free Transform Tool பார்த்தோம். அதில் உள்ள Scale,Rotate,Skew,Distort,Perspective,Wrap வரை பார்த்துள்ளோம். இனி அதில் அடுத்துள்ள பயன்பாடு பற்றி பார்க்கலாம்.alt

இப்போது நான் கீழ்கண்ட படத்தை எடுத்து கொண்டுள்ளேன்.alt

இப்போது இதில் Rotate 180 ஐ நான் தேர்வுசெய்ததும் உங்களுக்கு படம் ஆனது கீழ்கண்டவாறு மாறியிருக்கும். alt

இந்த மாற்றத்தை நீங்கள் நிரந்தராக வைத்துக்கொள்ள விரும்பினால் நீங்கள் File மெனு சென்று Save கிளிக் செய்யுங்கள். அப்போது உங்களுக்கு கீழ் கண்ட எச்சரிக்கை செய்தி கிடைக்கும். இந்த மாற்றத்தை நீங்கள் நிரந்தராக வைத்துக்கொள்ள விரும்பினால் நீங்கள் File மெனு சென்று Save கிளிக் செய்யுங்கள். அப்போது உங்களுக்கு கீழ் கண்ட எச்சரிக்கை செய்தி கிடைக்கும். alt


அதில் உள்ள Apply கிளிக் செய்யவும்.இந்த சமயத்தில் நீங்கள் தேர்வு செய்தபடம் நிரந்தரமாக மாறிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.ஆனால் இதே படத்தை நீங்கள் Save As மூலம் தேர்வுசெய்தால் மாற்றத்திற்கு உள்ளான படம் தனிபடமாக மாறிவிடும்.இதே போல் படங்களை 90 டிகிரி கோணத்தில் கடிகாரச்சுற்றில் மாற்றலாம். alt


அதைப்போல் படத்தை மாற்றுகடிகாரச்சுற்று Rotate 90 CCW தேர்வு செய்தால் படமானது கீழ்கண்டவாறு மாறிவிடும்.alt

நீங்கள் புகைப்படங்கள் எடுக்கையில் சில புகைப்படங்களை புகைப்பட கோணத்திற்கு ஏற்ப கேமராவை திருப்பி படம் எடுப்பீர்கள். அதை நீங்கள் பார்க்கையில் அனைத்துப்படங்களும் படுக்கை வாசத்தில் இருக்க நீங்கள் கேமராவை திருப்பி எடுத்த படம் மட்டும் திரும்பி இருக்கும். அந்த மாதிரியான புகைப்படங்களை நீங்கள் இந்த டூல் கொண்டு சுலபமாக மாற்றிக்கொள்ளலாம். இதைநாம் போல்டரிலேயே சுலபமாக மாற்றிக்கொள்ளலாம் என நீங்கள் சொல்வது கேட்கின்றது. போட்டோஷாப்பிலும் இந்த வசதி உள்ளது என தெரிவிக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன். இனி அடுத்துள்ள Flip Horizontal பற்றி பார்க்கலாம். முன்பே சொன்னவாறு படத்தை தேர்வுசெய்து கொள்ளுங்கள். முறையே Free Transform Tool தேர்வு செய்து அதில் உள்ள Flip Horizontal தேர்வுசெய்யுங்கள். alt

நான் கீழே உள்ள படத்தை தேர்வுசெய்து உள்ளேன்.alt

இப்போது இதில் நாம் Flip Horizontal தேர்வு செய்ய படம்மானது உங்களுக்கு இந்த மாதிரி மாறிவிடும்
alt

இதைப்போல் நீங்கள் Flip Vertical Tool ஐ தேர்வு செய்தால் உங்களுக்கு படம் இந்தமாதிரி கிடைக்கும்alt


நீங்கள் படத்தின் தேதியை வைத்து படம் மாறி உள்ளதை அறிந்துகொள்ளலாம். இனி இதை வைத்துசெய்த ஒரு சின்ன போட்டோஷாப் மாஜிக் படத்தை பாருங்கள். நீங்கள் படத்தின் தேதியை வைத்து படம் மாறி உள்ளதை அறிந்துகொள்ளலாம். இனி இதை வைத்துசெய்த ஒரு சின்ன போட்டோஷாப் மாஜிக் படத்தை பாருங்கள். alt


இதை எப்படி செய்வது என பார்க்கலாம். முன்பு பார்த்தமாதிரி படத்தை தேர்வுசெய்யுங்கள்.alt


இதை நாம் Flip Horizontal Tool மூலம் மாற்றியபின்alt

உங்களுக்கு மேற்கண்டவாறு படம் கிடைக்கும். இனி உங்கள் கீ-போர்டில் உள்ள Enter தட்டுங்கள். இப்போது நீங்கள் போட்டோஷாப்பின் மேல் மெனுபாரில் உள்ள பைல்மெனுக்கு அடுத்துள்ள Edit கிளிக் செய்யுங்கள்.alt


இப்போது அதில் உள்ள Copy கிளிக் செய்யுங்கள். இப்போது மீண்டும் பைல் மெனு செல்லுங்கள்alt

அதில் உள்ள New கிளிக் செய்யுங்கள் . உங்களுக்கு கீழ்கண்டவாறு சாரளம் ஓப்பன் ஆகும்.alt


இப்போது இதில் உள்ள Name என்கின்ற இடத்தில் நீங்கள் விரும்பும் பெயரை கொடுத்துக்கொள்ளுங்கள். அடுத்து உள்ள Width அளவை இரண்டால் பெருக்கி பின் OK. கொடுங்கள். இப்போது உங்களுக்கு வெள்ளை பின்நிறத்துடன் ஒரு கட்டம் தோன்றும். இப்போது மீண்டும் Edit சென்று அதில் உள்ள Paste கிளிக் செய்யவும். alt

இப்போது நீங்கள் தேர்வு செய்த படம் வெள்ளை கட்டத்தில் பாதியில் வந்து இருக்கும்.இப்போது மீண்டும் முதலில் தேர்வு செய்த படத்தை கர்சர் மூலம் இழுத்துவந்து விடவும். இப்போது உங்களுக்கு இந்த மாதிரி படம் கிடைக்கும். alt

இரண்டு மூன்று முறை முயற்சி செய்து பாருங்கள்.
படம் சரியாக வரும்.