செவ்வாய், 22 ஏப்ரல், 2014

ஒன்றுக்கு மேல் Gmail Account வைத்துள்ளீர்களா?



பல நாட்களாக அனைவராலும் எதிர்பார்க்கப் பட்ட ஒரு வசதி இன்று Googleலால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட Gmail கணக்குகள் வைத்து இருந்தால், நீங்கள் ஒவ்வொருமுறையும் Signout செய்து பின்னர் அடுத்த Accountஇல் Signin செய்ய வேண்டும். இது பெரும்பாலும் எரிச்சலைத் தரும் செய்கை ஆகும். இனிமேல் நீங்கள் மிக எளிதாக ஒன்றுக்கு மேற்பட்ட Gmail கணக்குகளை signin/signout செய்யாமலேயே பயன்படுத்த முடியும்.
அதற்கு., தங்களின் முதன்மையான Gmail Accountஇல் உள் நுழைந்து பின்னர்

Settings – > Accounts and Import -> Grant Access to your account -> Add an another account

என்பதை க்லிக் செய்து, தங்களின் மற்ற @gmail.com என முடியும் ஈமேல் முகவரிகளை கொடுக்கவும்.

அந்த முகவரிக்கு ஒரு ஒப்புதல் தொடுப்பு Googleலால் அனுப்பப்படும். ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன் ,

நீங்கள் ஒவ்வொருமுறை signin செய்யும் போதும் உங்களின் இரண்டு Gmail கணக்குகளும் இரு வேறு Browser Tab அல்லது விண்டோகளில் திறக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக