ஞாயிறு, 4 மே, 2014

போட்டோஷாப்-15 Magnetic Lasso Tool


altபோட்டாஷாப்பில் சென்ற பாடங்களில் Lasso Tool பற்றி பார்த்தோம். இன்று அதே Lasso Tool-ல் மூன்றாவதாக உள்ள Magnetic Lasso Tool பற்றி பார்க்கலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.alt

இதுவும் படத்தை தேர்வு செய்ய பயன்படுகின்றது.ஒரு படத்தில் உள்ள பல வளைவுகளை தேர்வு செய்வது சற்று சிரமம். அதற்கு நீங்கள் இந்த டூலை பயன்படுத்தலாம். பெயருக்கு ஏற்றார்போல் இந்த டூலை நீங்கள் படத்தின் அருகில் கொண்டு செல்லும் சமயம் படத்தின் ஓரத்தை இந்த டூலே தேர்வு செய்துகொண்டுவிடும். கீழே உள்ள இந்த பூவின் படத்தை பாருங்கள்.alt

இப்போது பூவின் ஓரம் கர்சரை கொண்டு செல்லும் சமயம் படத்தின் ஓரத்தில் அதுவே தேர்வு செய்வதை காணலாம்alt

இப்போது படத்தின் ஓரங்கள் முழுவதும் கர்சரை கிளிக் கொண்டு செல்ல படம் முழுவதும் தேர்வு செய்யலாம்alt

இப்போது கட் செய்தபின் வந்துள்ள படம் கீ்ழே:-alt

இதனை சுற்றி உள்ள் இடத்தை வண்ணம் கொண்டு நிரப்ப வந்துள்ள படம் கீழே:-alt

இந்த Magnetic Lasso Tool-ல் மற்றும் ஓரு வசதியும் உள்ளது.கீழே உள்ள Option Bar கவனியுங்கள்alt


இதில் உள்ள Feather-ல் வேண்டிய பிக்ஸல்கள் தரலாம்.
இதில் உள்ள Width என்பது காந்த தன்மையின் அளவை குறிக்கும்.
இதை 10 என்று வைத்தால் Mouse-ன் கர்சர் உள்ள இடத்தில் இருந்து
10 pixel கள் இடைவெளி வரை உள்ள் படத்தின்
Border-ஐ இந்த டூல் புரிந்து கொள்ளும்.படத்தில் பல
வளைவுகள் இருந்தால் இந்த மதிப்பை குறைவாக
வைத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக தலையின் முடியை
தேர்வு செய்யும்சமயமும், விலங்குகளின் வாலை தேர்வு
செய்யும் சமயமும் இது மிகவும் பயன்படும்.
இதில் கடைசியாக உள்ள Frequency என்பது நாம்
இந்த டூல் கொண்டு வரையும்சமயம் தோன்றும்
புள்ளிகளின் நெருக்கத்தைக் குறிக்கும்.இந்த
புள்ளிகளை Fasteing Point என்று கூறலாம்.
இதில் உள்ள Edge Control என்பது உருவத்தில்
உள்ள Contrast நிறத்தை இந்த டூல் அறியும். அதிக
Contrast உள்ள இடங்களை அறிந்து கொள்ள இந்த
எண்ணை அதிகமாக கொடுக்கவும். இந்த டூல்
கொண்டு படத்தை வரைந்து முடித்துவிட்டபின்
கர்சரின் டபுள் கிளிக் செய்தோ அல்லது என்டர்கீ
யை அழுத்தி யோ முடிக்கலாம்.Magnetic Lasso Tool
கொண்டு படத்தை தேர்வு செய்யும் சமயம் நாம்
Lasso Tool க்கு மாற Alt Key அழுத்தி பின் கிளிக்
செய்யலாம். மீண்டும் பழையபடி நமக்கு Magnetic
Lasso Tool தேவைபட்டால் நாம் Alt Ket-ஐ
விட்டு விட Magnetic Lasso Tool வந்துவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக