வியாழன், 7 ஆகஸ்ட், 2014

Screen Shot எடுக்க...

இணையங்களில் மற்றும் கணணி தொடர்பான பாடக்குறிப்புக்களில் கணணியின் திரை படமாக்கப் பட்டிருக்கும். இதனை எவ்வாறு செய்வது என பார்ப்போம்.

ஸ்க்ரீன் ஷொட் எடுக்க வேண்டிய நிலையில் வைத்து தட்டச்சுப் பலகையில் வலது பக்கம் பாருங்கள் Print Screen என்றொரு கீ இருக்கும் அதை இப்போது தட்டுங்கள். 
Print Screen கீயைத் தட்டியதும் உங்கள் கணனியின் திரையில் தெரியும் விடயங்கள் இப்போது கிளிப் போட்டில் சேமிக்கப் பட்டிருக்கும்.
உதாரணமாக இப்போது கீயை தட்டிவிட்டு மைக்ரொசாப்ட் வேர்ட் சென்று Edit ---> Paste என்று சொடுக்குங்கள் உடனடியாக உங்கள் கணனித் திரையில் தெரிந்த காட்சிகள் உங்கள் வேர்ட் டொகுமென்டில் வரும்.
அடுத்து ஸ்க்ரீன் ஷொட்டை எவ்வாறு படமாகச் சேமிப்பது என்று பார்ப்போம். அதாவது முதலில் சொன்னவாறு Print Screen விசையை அமத்திய பின்னர் போடோசொப் அல்லது பெயின்ட் போன்ற படங்களை சேமிக்கக் கூடிய ஏதாவது புரோகிராமுக்குச் சென்று Edit ---> Paste (Ctrl + V) என்று சொடுக்குங்கள். இப்போது திரையின் படம் உங்கள் பெயின்டில் ஒரு படமாக அமர்ந்து இருக்கும். பின்னர் வழமைபோல சேமித்துக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக