திங்கள், 24 பிப்ரவரி, 2014

அனிமேசனுடன் கூடிய கூகுள் மேப்பை உருவாக்குவதற்கு


மேப் என்ற வார்த்தை சொன்னவுடன் உடனடியாக நமக்கு ஞாபகம் வருவது கூகிள் மேப் தான். அந்த அளவிற்கு கிராமத்தை கூட விட்டு வைக்காமல் கூகிள் மேப்-ல் காட்டுவது மேலும் சிறப்பு. கூகிள் மேப் அனிமேசனுடன் காட்டினால் எப்படி இருக்கும். ஆம் கூகிள் மேப்-ஐ அனிமேசனுடன் ஒரு தளம் உருவாக்கி கொடுக்கிறது.

வேடிக்கையாக கூகிள் மேப் பார்க்க சென்றவர்களை கூகிள் மேப் விடாமல் பிடித்துக்கொள்கிறது என்று தான் சொல்ல வேண்டும். புதிதாக ஒரு நபர் குறிப்பிட்ட ஊர் எங்கிருக்கிறது என்ற பார்க்க வேண்டும் என்று கூகிள் மேப் பக்கம் சென்றால் எங்கிருக்கிறது என்ற தகவல் மட்டுமல்ல பேருந்தில் பயணம் செய்தால் எத்தனை கி.மீ என்பது முதல் எவ்வளவு மணி நேரம் என்பது வரை துல்லியமாக கொடுக்கும் கூகிள் மேப் -ஐ அனிமேசனுடன் காட்டுவதற்காக ஒரு தளம் உள்ளது.
புதிய கோணத்தில் உங்கள் மேப்-ஐ இலவசமாக வடிவமைக்க எங்களிடம் வாருங்கள் என்று அழைக்கிறது இத்தளம். இங்கு சென்று நாம் Get Started என்ற பொத்தானை சொடுக்கி வரும் கூகிள் மேப் -ல் நம் இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும், அதன் பின் நமக்கு தேவையான படங்களை மேப்-ல் எங்கு வைக்க வேண்டும் என்பது போன்ற எல்லாத்தகவல்களையும் கொடுத்து அழகான அனிமேசன் மேப் உருவாக்கலாம்.
ஒரு அனிமேசன் மனிதன் கூகிள் மேப்-ல் நடந்து நம் இடத்திற்கு வருவது போல் கூட உருவாக்கலாம். புதிதாக இத்தளத்திற்கு வருபவர்களுக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைப்பற்றிய அறிமுக வீடியோவும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இணையதள முகவரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக