வெள்ளி, 11 அக்டோபர், 2013

இதுவரை வெளிவராத சூரியனின் புதிய படம்: நாசா


sonne
இதுவரை வெளிவராத சூரியனின் புதிய படத்தை நாசா மையம் வெளியிட்டுள்ளது.
சூரியனின் வெளிப்புற தோற்றம் கொண்ட பலவித படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது இதுவரை வெளிவராத சூரியனின் போட்டோவை அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் எடுத்துள்ளது.
இரிஸ் என்றழைக்கப்படும் ‘இன்டர் பேஷ் ரீஜியன் இமேஜிங் ஸ்பெகட்ரோ கிராப்’ மூலம் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரோ கிராப்பில் உள்ள அல்ட்ரா வயலட் டெலஸ்கோப் மூலம் சூரியனின் வெளிப்புற தோற்றம் போட்டோ எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
இப்படம் சூரியனுக்குள் 150 கி.மீட்டர் தூரம் ஊடுருவி மிக தெளிவாக எடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் சூரியனின் கடும் வெப்பம் மற்றும் வெளிப்படும் சக்தியையும் விஞ்ஞானிகள் கணிக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக