சனி, 12 அக்டோபர், 2013

தமிழ் எழுதமேலும் ஒரு மென்பொருள்.

இந்த மென்பொருள் தமிழ் உட்பட அசாமிய மொழி, வங்காளம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு ஆகிய இந்திய மொழிகளை உள்ளீடு செய்ய உருவாக்கப்பட்ட மென்பொருள் ஆகும். 


 


என் எச் எம் ரைட்டரை நிறுவும்போதே தமிழ் மொழியை உள்ளீட்டு மொழியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். பதிவிறக்க இணைப்பில்முதலாவதாக உள்ள அதிகாரப் பூர்வத் தளத்தில் இருந்து கிடைப்பதைத் தவிர ஏனையவற்றில் தமிழையே உள்ளீட்டு

மொழியாக கொள்ளும். பதிவிறக்க இணைப்பில் இறுதியாக உள்ளதைத் தவிர ஏனையவை விண்டோஸ் ஆரம்பிக்கும் போதே ஆரம்பித்துவிடுவதால் தமிழில் தட்டசுச் செய்வதும் எளிதானாகும்.

குறிப்பு: கடைசியாக் கொடுக்கப்பட்ட இணைப்பில், விண்டோஸ் விஸ்டா/7 இயங்குதளங்களில் சரிவர வேலைசெய்யும். இதன் சிறப்பம்சமே, இது விண்டோஸ் எக்ஸ்பி கணினிகளில் கிழக்கு ஆசிய மொழிகள் தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும் சரிவர வேலை செய்யும் தன்மையுடையது.

ஆதரிக்கும் தமிழ் விசைப்பலகைகள்:

Alt+0 விசைபலகை இல்லை அல்லது கணினியின் விசைப்பலகை (உங்கள் விண்டோஸ் ஆங்கிலப் பதிப்பாயின் ஆங்கிலம்)

சிறப்பம்சங்கள்:

என் எச் எம் ரைட்டர் மென்பொருள் அசாமிய மொழி, வங்காளம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி,  தமிழ்&தெலுங்கு என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது.

கூகிள் குரோம், பயர்பாக்ஸ், சபாரி, இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், ஓப்ரா,என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.

எம்எஸ் ஆபீஸ் (விண்டோஸ் லைவ்ரைட்டர், அவுட்லுக், நோட்பேட், எம்எஸ் வேர்ட், எம்எஸ் எக்செல், எம்எஸ் பவர்பாயிண்ட்) மென்பொருள்களுடன் சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.

வின்டோஸ் XP / 2003 மற்றும் விஸ்டா ஆப்ரேடிங் சிஸ்டமில் இந்த மென்பொருளை நிறுவ முடியும்.

தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட என் எச் எம் ரைட்டர் மென்பொருள் மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும். ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி. ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை பயன்படுத்த முடியும்.

இந்த மென்பொருளை நிறுவ வின்டோஸ் XP/2003 மற்றும் விஸ்டா ஆப்ரேடிங் சிஸ்டம் CD தேவையில்லை.

தரவிறக்க  சுட்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக