செவ்வாய், 29 அக்டோபர், 2013

கல்வி மற்றும் அனைத்து புத்தகங்களையும் தேடி கொடுக்கும் தேடுபொறி

புதிதாக ஒரு புத்தகம் வந்திருக்கிறது என்றால் இணையத்தில் சென்று தேடும் நமக்கு நேரத்தை மிச்சப்படுத்தி நாம் தேடும் புத்தகத்தை நொடியில் தேடி நமக்கு உதவுகிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
 

கூகிள் தேடிக்கொடுக்காத தகவலே இல்லை என்றாலும் அதற்காக நாம் சில மணி நேரங்கள் செலவு செய்ய வேண்டி இருக்கிறது. உதாரணமாக நமக்கு ஒரு புத்தகம் வேண்டும் என்றால் கூகிளில் சென்று புத்தகத்தின் பெயரைக் கொடுத்து தேடினால் வரும் முடிவுகளில் பலவற்றை தேடிப் பார்த்தபின் தான் ஏதாவது ஒன்றை தறவிரக்க முடியும் ஆனால் புத்தகங்களை மட்டுமே தேடி கொடுக்க பிரத்யேகமாக ஒரு  தேடுபொறி 
( search engine) உள்ளது.

இத்தளத்திற்கு சென்று  எந்த வகையான புத்தகம் தேவையோ அதன் பெயரைக் கொடுத்து Search என்ற பொத்தனை சொடுக்க வேண்டியது தான் வரும் திரையில் உள்ள முடிவுகள் அத்தனையுமே அந்த புத்தகத்திற்கு தொடர்புடைய இணைப்பாக தான் இருக்கும். சரியானதை தேர்ந்தெடுத்து சொடுக்கி எளிதாக  புத்தகத்தை தறவிரக்கலாம். Doc, Pdf, PPT,  XLS போன்ற கோப்புகளையும் தேர்ந்தெடுத்து தேடும் வசதியும் உள்ளது. இணையத்தில் நமக்கு வேண்டிய புத்தகத்தை எளிதாக தறவிரக்க உதவும் இந்தத்தளம் நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.


  • ஒரே இடத்தில் இருந்து அனைத்துவகையான ஆடியோ புத்தகம் இலவசமாக தறவிரக்கலாம்
  • இ-புத்தகத்தை அழகாக அடுக்கிவைப்பதற்கும் படிப்பதற்கும் உதவும் இலவச அப்ளிகேசன்.
  • ஒரே இடத்தில் அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் (User Manual) பயன்பாட்டு புத்தகத்தையும் தரவிரக்கலாம்
  • அறிவியல் மற்றும் கணினி துறையின் புத்தகங்களை இலவசமாக தரவிரக்கலாம்

இணையதள முகவரி

சனி, 26 அக்டோபர், 2013

இருபது வருடத்திக்கு பின் நம்ம முகத்தோற்றம் அறிய

தண்ணீர் குடிப்பதால், உடலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. அதிலும் தண்ணீரைக் குடிப்பதால், உடலில் உள்ள ஒவ்வொரு செல்களும் நன்கு ஆரோக்கியமாக செயல்படும். இத்தகைய தண்ணீரை தினமும் தவறாமல் குடித்து வந்தால், எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல், சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ளலாம்.என்ற அழகு குறிப்புடன்  இன்னும் இருபது வருடத்தில் நம்ம முகம் எப்படி இருக்கும் என்பதை எல்லோருக்கும் அறிய  ஆவல்தான்

இந்த தளத்திற்கு சென்று Gender, Age, Drug addict போன்றவற்றில் உங்களுக்குரிய Options தெரிவு செய்து விட்டு..கீழே upload your photo என்பதை கிளிக் செய்து உங்கள் புகைப்படத்தை Upload செய்தவுடன் 20 வருடத்தில் உங்கள் தோற்றம் எப்படி இருக்கும் என்பதை காட்டும்.. முயற்சி செய்து பாருங்கள்..
இணையதள முகவரி

திங்கள், 21 அக்டோபர், 2013

Facebook URL மாற்றுவது எப்படி



facebook இல் உள்ள பல பயனார்கள் தங்கள் user id ஐ வைத்தே பயன்படுத்துகின்றனர்.  பயனர் பெயராக மாற்றுவது மிக எளிது . இது சிலருக்கு தானாகவே மாறி இருக்கும் இருந்தும் சிலருக்கு இன்னும் மாறவில்லை அப்படி மாறாவிட்டால் பின்வரும்  படிகளில் நீங்கள் எளிமையாக இதனை மாற்றலாம் .


1.முதலில் பேஸ் புக் தளத்தில் லாகின் செய்து கொள்ளுங்கள் .

2.account settings என்பதை கிளிக் செய்து ஒரு பக்கத்துக்கு அழைத்து செல்லும் .

3.அதில் NAME, USER NAME ,EMAIL,PASSWORD, LANGUAGE,NETWORTS என்று
பல தெரிவுகள் இருக்கும் .

4.அதில்  USER NAME என்பதை கிளிக் செய்து பயனர் பெயரை கொடுங்கள் . பயனர் பெயர் சாத்தியமானதா என்று பார்த்துக் கொள்ளுங்கள் .

5.பேஸ் புக் PASSWORD கொடுத்து SAVE பண்ணுங்க ...

அவ்வளவு தான் ..இனி உங்கள் USER ID - USER NAME ஆக மாறிவிடும்

அல்லது சுட்டி இதில் சென்று  நேரடியாக விரும்பிய பெயரை மாற்றலாம்

HACK செய்யப்பட்ட GOOGLE ACCOUNT ஐ மீட்பது எப்படி



FIRST நீங்க உங்க COMPUTER ல VIRUS இருக்கான்னு SCAN பண்ணுங்க. நல்ல ANTI VIRUS மட்டும் பத்தாது அத அடிக்கடி UPDATE பண்ணனும். பெரும்பாலும் உங்கள் ACCOUNT இதனால் தான் (HACK)ஹாக் செய்யப்படும். அப்படி HACK பண்ணிட்ட வர பிரச்சினைகளை எப்படி சமாளித்து நமது ACCOUNT ஐ திரும்ப பெறுவது?.
முதலாவதா GOOGLE CHROME PAGEல் இருந்து உங்கள் ACCOUNTக்கு sign in ஆகுங்க இப்போ ACCOUNT SETTINGல நீங்க இருக்கணும்.
இதுல "Personal Settings " ல "Change password recovery options" இந்த பக்கத்துக்கு போங்க. இப்போ recovery email address ல உள்ள email id இப்போ நீங்க உபயோகிக்கிற உங்களோட இரண்டாவது அக்கௌன்ட் ஐ அதில் கொடுத்துடுங்க.
எப்போதும் பயன்படுத்துகிற உங்கள் மொபைல் நம்பர் மூலமாகவும் நீங்கள் உங்கள் recovery option ஐ செட் செய்ய முடியும். ஆனா முக்கியமான ஒன்று அந்த எண்ணை நீங்கள் எப்போதும் மாத்தவே கூடாது.
அடுத்தது security question , நீங்கள் ரொம்ப நாள் முன்னாடி உங்கள் அக்கௌன்ட் உருவாக்கி இருந்தால் இந்த கேள்வி அதில் இருந்திருக்காது(எனக்கும் இல்லை.)அந்த option ஐ நீங்கள் இப்போது உருவாக்கி கொள்ளுங்கள். இதில் நீங்கள் உங்களது சொந்த கேள்வியை கேட்டும் பதில் செட் செய்து கொள்ளலாம். எப்போதும் இதை மறந்து விட கூடாது.
இப்போது முடிந்து விட்டதா என்றால், இல்லை. ஏன் என்றால், இதை எல்லாம் உங்கள் அக்கௌன்ட் ஐ ஹாக் செய்பவன் மாற்றி விட வாய்ப்பு உள்ளது. இதை எல்லாம் மாற்றி விட்டால் பின்னர் எப்படி அக்கௌன்ட் ஐ திரும்ப பெறுவது ?
இதற்கு ஒரு form fill up செய்து கூகுள்க்கு அனுப்ப வேண்டும். அதில் நீங்கள் கூறியது எல்லாம் சரியாக இருந்தால் உங்கள் அக்கௌன்ட் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்??
உங்கள் account க்குள் நீங்கள் நுழைய முடியவில்லை என்றால் உங்களுக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன.
1 . revovery ஈமெயில் அட்ரஸ் மூலம் உங்கள் அக்கௌன்ட் ஐ திரும்ப பெறலாம்.
2 . security question மூலம் பெறலாம்.
3 . account recovery form fill up செய்து பெறலாம்.
இதில் முதல் இரண்டு வாய்ப்புகளில் உங்களால் முடியவில்லை என்றால் நீங்கள் மூன்றாவது வழியை பயன்படுத்த வேண்டும். அந்த form கீழே உள்ளது.





இதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நாம் சரியாக தரும் பட்சத்தில் நாம் நம் அக்கௌன்ட் ஐ திரும்ப பெற முடியும்(நான் இதன் மூலம் தான் பெற்றேன்).வந்த பின் வருந்துவதை விட வருமுன் காப்பது சிறந்தது இல்லையா. எனவே நான் கூறப் போகும் விவரங்களை நீங்கள் முதலில் தயார் செய்து பாதுகாத்துக் கொள்ளவும்.
அதற்கான லிங்க்:  account recovery form
• உங்கள் ஜிமெயில் அக்கௌன்ட் ஆரம்பித்த தேதியை நீங்கள் உங்கள் ஜிமெயில் இன் முதல் மெயிலில் சென்று குறித்து கொள்ளுங்கள்.
• இந்த gmail id மூலம் நீங்கள் பயன்படுத்திய google product களை பயன்படுத்த ஆரம்பித்த தேதி.
• இதுவரை கவனிக்க தவறினாலும் இனி குறித்து கொள்ளவும்
• உங்கள் வலைப்பூ முகவரி
• உங்கள் orkut profile முகவரி
• கடைசியாக வைத்திருந்த password .
• நீங்கள் அடிக்கடி(frequent ) தொடர்பு கொள்ளும் mail id க்கள்
• உங்கள் நான்கு label களின் name .

மென்பொருள் Serial, Keygen இலகுவாக பெறுவது எப்படி ?


இது கொஞ்சம் வித்தியாசமான பதிவு தான். எப்படி திருடுவது என்பது  விலை உயந்த மென்பொருட்களை எப்படி இலவசமாக பயன்படுத்தலாம் .சட்டரீதியாக மென்பொருட்களை எவரும் பணம் கொடுத்து வாங்குவது கிடையாது. காரணம் இணையத்தில் பரவிகிடக்கின்ற திருட்டுகள். இலகுவாக எந்த மென்பொருளுக்கும் உரிய Activation Key இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். ஆனால் இந்த செயற்பாடு சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளபடாதவை, இருந்தும் இதை தடுக்க எந்தவொரு வழியும் தற்சமயம் கிடையாது. என்ன செய்வது நானும் இந்த முறையைத்தான் பின்பற்றி ஒரு திருட்டு வழி முறையை கற்றுத்தர போகிறேன்                                 
  •     முதலாவதாக கூகிள் இணையதளத்திற்கு செல்லுங்கள் - Google.com
  •     பின்னர் கூகிள் தேடலில் “94fbr” இடைவெளிவிட்டு மென்பொருள்  பெயரை எழுதுங்கள். உதாரணமாக 94fbr windows 8
  •     அதன் பிறகு கூகிள் keygen’s உரிய பட்டியலை காட்டும்.
அவ்வளவு தான் இனி எல்லாமே இலவசம் நீங்க விரும்பியதை தரவிறக்கி  கொள்ளலாம் ...



திங்கள், 14 அக்டோபர், 2013

இணையத்தில் ஒரு இலவச நூலகம்



முகப்பு பக்கத்தில் வலைபதிவு வடிவில் வரிசையாக புத்தகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.எந்த புத்தகம் தேவையோ அதனை கிளிக் செய்து படிக்கத்துவங்கி விடலாம்.
அருகிலேயே மற்ற புத்தகங்கள் அவைகளின் வகைகளுக்கு ஏற்ப தொகுக்கப்பட்டுள்ளன. அரசியல்,இலக்கியம்,உடல் நலம்,இசை என வகைகளின் பட்டியல் நீள்கிற‌து.
அ.சிதம்பர செட்டியாரில் துவங்கி ,அ.ச.ஞா,, அண்ணாதுரை, அவ்வை தி.க. சண்முகம், ஆ. கார்மேகக் கோனார், என்.வி. கலைமணி, எஸ்.எஸ். தென்னரசு,ஔவை துரைசாமிப் பிள்ளை,க.நா.சு, கல்கி என எழுத்தாலர்களின் பட்டியலும் நீள்கிற‌து.
 நாட்டுப்புற இலக்கியம்,நாவல்கள்,பயண இலக்கியம் என பல வகையான புத்தகங்களும் இருக்கின்ற‌ன இதில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
இது முழுக்க  இலவச நூலகம் என்பது குறிப்பிட தக்கது  
 
 இணையதள முகவரி

அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்….!


உலகத்துல நமக்கு தெரியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. அப்படிப்பட்ட விஷயங்கள நமக்கு தெரியப்படுத்த/விளக்கத்தான் அறிவியல் ஆய்வு எல்லாம் நடத்த விஞ்ஞானிகள் இருக்காங்க. விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி எல்லாத்தையும் சொல்லிட்டாங்களான்னா, இன்னும் இல்லைங்கறதுதான் உண்மை! அப்படின்னா எல்லாம் வல்ல?!  அறிவியலால கூட புரிஞ்சிக்க முடியாத மர்மங்கள் நமக்கு மத்தியில இன்னும் இருந்துகிட்டுதான் இருக்கு இல்லையா? அதுவும் சும்மா இல்ல, அப்பப்போ நமக்கு “பகீர்…பகீர்” வயித்துல புளியக் கரைச்சிக்கிட்டு இருக்குங்கிறதுதான் உண்மை! உதாரணமா சொல்லனும்னா பேய்/பிசாசு, ஆவி அப்படின்னு நெறைய சொல்லிக்கிட்டே போகலாம்.
இப்போ நாம இந்த பதிவுல பார்க்க போறது, அந்த மாதிரி மனிதனால/அறிவியலால கூட விளங்கிக்க முடியாத சில அமானுஷ்ய நிகழ்வுககள்/சக்திகளை பற்றித்தான்! சரி, அப்படின்னா முதல்ல மனுஷனிலிருந்தே தொடங்குவோம் நம்ம கணக்கை….

உடல்-மூளை தொடர்பு !

mind_body_connection1நம் மூளை எப்படி நம்ம உடல பாதிக்குது அப்படிங்கிற விவரத்த, இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா மருத்துவத்துறை நமக்கு விளக்க தொடங்கி இருக்காங்க. உதாரணமா சொல்லனும்னா, சில நோய்களுக்கு  மாத்திரை என்று பிரத்தியேகமாக தயாரித்துக் கொடுக்காமல், ஒரு இனிப்பு மாத்திரையை , நோயைக் குணப்படுத்தும் என்றும் சொல்லி, நோயாளிகளுக்கு கொடுத்தால் மட்டுமே கூட சில நோய்களை குணப்படுத்த முடியும் என்பது மருத்துவத்துறையில் “ஒரு விளங்க முடியாக் கவிதை போலவே” வெகு காலமா இருந்து வருது! இதுக்கு ஆங்கிலத்துல “ப்ளாசிபோ எஃபெக்ட்”, அப்படின்னு சொல்றாங்க. ஆக, இது ஒரு நம்பிக்கை மட்டுமே (மாத்திரை அல்ல). இருந்தாலும் நோய் குணமடைகிறது. அது எப்படி? அது யாருக்கும் தெரியாது?! அதாவது, உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்வது எப்படி என்று எந்த புதுயுக மருத்துவத்தாலும் இதுவரை வரையறுத்துச் சொல்ல முடியவில்லை!

அமானுஷ்ய சக்தி/ இ.எஸ்.பி (Psychic powers and ESP)

psychic
உலகத்துல மனுஷனப் பத்தி மனுஷனாலேயே புரிஞ்சிக்க முடியாத விஷயங்கள்லேயே மிக முக்கியமானதுதான் இந்த அமானுஷ்ய சக்தி/இ.எஸ்.பி அப்படிங்கிறது! அதாவது, ஐப்புலன்களையும் தாண்டி உலகத்தை உணரக்கூடிய ஒரு சக்தி (எக்ஸ்ட்ரா சென்சரி பெர்சப்ஷன்/Extra-sensory perception (ESP)). ஆங்கிலத்தில் “இன்டியூஷன்” என்று சொல்லக்கூடிய, எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்கூட்டியே தெரிந்து (தீர்கதரிசி) சொல்வது எப்படி? என்பது இதுவரை யாருக்கும் புரியாத, ஆனால்  நம் எல்லோரையும் அதிர வைக்கும் ஒரு மர்மம்!  இதுல செஞ்ச ஆய்வுகள் இதுவரைக்கும் ஒரு தெளிவான பதிலை/கருத்தை சொல்லவே இல்லை. குழப்பமான, புரியாத ஆய்வு முடிவுகளையே கொடுத்திருக்கிறது  இ.எஸ்.பி பற்றிய ஆய்வுகள் அப்படிங்கிறாங்க விஞ்ஞானிகள்! இன்னும் சிலர், இந்த மாதிரி அமானுஷ்ய சக்தி பத்தின ஆய்வு என்னைக்குமே ஒரு தெளிவான முடிவைத் தராது, மனுஷனுக்கு அப்பாற்பட்டது அப்படின்னும் சொல்றாங்க. அப்ப்டின்னா, கடைசி வரைக்கும் இது ஒரு புரியாத புதிராவேதான் இருக்குமா? தெரியல, காலந்தான் பதில் சொல்லனும்!

இறப்பை ஒத்த அனுபவங்கள்/ இறப்புக்குப் பின் வாழ்வு (புனர்ஜென்மம்?!)

ndetunnel
படம்:கூகுள்
நம்மில் சில பேர், சமயத்துல சாகிற நிலைக்குப் போய் பிழைத்துக் கொள்வதுண்டு. இதப்பத்தி சொல்லும்போது “செத்துப் பொழச்சவண்டா” அப்படின்னு சில பேர் சொல்வதுண்டு. அதாவது சாகும் தருவாய் வரைக்கும் சென்று பின் அதிர்ஷடவசமாக பிழைத்துக்கொள்வார்கள். ஆங்கிலத்தில் “Near-Death Experiences”, அப்படின்னு சொல்லுவாங்க. இந்த மாதிரி அனுபவம் இருக்கிறவங்க, அந்த அனுவபம் பத்தி விவரிக்கும்போது, “ஏதோ பாதாளத்துக்குள்ள போன மாதிரி இருந்தது, உடனே பிரகாசமான வெளிச்சத்துல வந்து,  சொந்த பந்தங்களோட இணைஞ்ச மாதிரி ஒரு உணர்வு” அப்படின்னு எல்லாம் சொல்லக் கேட்டிருப்போம் இல்லையா? (குறைந்தபட்சம் சினிமாவுலயாவது பார்த்திருப்போம்!) . அதாவது, கல்லரையையும் தாண்டிய ஒரு உணர்வு/வாழ்வு?! இதுமாதிரி கதைகள்? பல நம்மிடையே இருந்தாலும் இதுவரையில் யாரும் தகுந்த ஆதாரங்களோடு அப்படியொரு நிகழ்வை உறுதிப்படுத்தவில்லை என்பதே உண்மை!  இது ஒருபுறமிருக்க, இந்த மாதிரி ஆய்வுகள் செய்யும் விஞ்ஞானிகளோ, இவையெல்லாம் காயப்பட்ட/பாதிக்கப்பட்ட மூளையின் ஒரு வித உணர்வே தவிர இதில் உண்மை என்று எதுவுல் இல்லை அப்படின்னு சொல்றாங்க!

யு.எஃப்.ஓ/UFOs

ufoயு.எஃப்.ஓ என்றால் “அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள்” (Unidentified Flying Objects). இத்தகைய பொருள்களை?! பலர் பார்த்திருக்கிறார்கள் என்பது உண்மை. அதாவது, அப்பப்போ வானத்துல திடீர்னு எதாவது ஒன்னு பறக்கிற மாதிரி தெரியும் (ஏரோப்ளேன் இல்லீங்க!), அது விண்கற்களா/ஏவுகனைகளா அப்படின்னு அடையாளம் சொல்ல முடியாது. அதேசமயம், இது வேற்றுகிரக மனுஷனோட வேலையா கூட இருக்கலாம் அப்படிங்கிறது இன்னொரு விஷயம்! என்னதான் கூர்மையா கவனிச்சி ஆய்வு பண்ணாலும் இது என்னன்னே தெரியாமதான் இருக்கோம் இதுவரைக்கும்?!

தேஜா வு (Deja vu)

“தேஜா வு”, அப்படின்னா ப்ரெஞ்சு மொழியில “மூன்கூட்டியே பார்த்தது” அப்படின்னு அர்த்தமாம். அதாவது,  இதுவரைக்கும் போகாத ஒரு இடத்துக்க போய்ட்டு வந்த மாதிரி ஒரு உணர்வைத்தான் இப்படி சொல்றாங்க! உதாரணத்துக்கு, ஒரு பெண்மணி புதுசா ஒரு வெளிநாட்டுக்கு முதல் முதல்ல வந்து, ஒரு கட்டிடத்துக்குள்ள அடியெடுத்து வைக்கிறாங்க. ஆனா அங்க, அவங்க வாழ்க்கையில முதல்முதல்ல பார்க்கிறதெல்லாமே முன்னாடியே அவங்க பார்த்து அனுபவிச்ச மாதிரி ஒரு உணர்வு வருது அவங்களுக்கு! இதுதான் “தேஜா வு” அப்படிங்கிறாங்க!” சில விஞ்ஞானிகள் கூற்றுப்படி, தேஜா வு-வுக்கு காரணம் முன் ஜென்ம நினைவுகள் அப்படின்னு சொன்னாலும், இதுவரைக்கும் இந்த உளவியல் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒரு மர்மமாவேதான் இருக்கு!
இதுவரைக்கும் நாம பார்த்த விஷயங்கள் சில “கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி” இருந்திருக்கும் உங்களுக்கு. எனக்கும்தாங்க! ஆனா இப்போ நாம பார்க்க போற விஷயம்,  நம்ம எல்லோருக்கும் ஏதோ ஒரு வயசில அனுபவப்பட்டதா/கேள்விப்பட்டதா இருக்கும்னு நான் நெனைக்கிறேன். என்னன்னு யூகிக்க முடியுதா உங்களால……?!

பேய்/பிசாசு/ஆவி

ghost3813xநம்ம பாரம்பரியத்துல, கலாச்சாரத்துல ஊறிப்போன ஒரு விஷயம்தான் இந்த பேய், பிசாசு, ஆவி எல்லாம். கண்டிப்பா நாம எல்லாரும் அப்பா/அம்மா, பாட்டி/தாத்தா இப்படி நம்ம குடும்பத்தச் சேர்ந்த ஒருத்தர் சொல்லக் கேட்ட ஒரு பேய் கதை கண்டிப்பா இருக்கும்.  எனக்கு நியாபகம் இருக்கிற வரைக்கும் சொல்லனும்னா, நான் அதிகமா கேட்டது/சினிமாவுல பார்த்தது “வெள்ளையா ஒரு புடவ கட்டிகிட்டு, ஜல் ஜல்னு கொலுசு சத்தம் கேட்கிற மாதிரி நடந்து வர்ர ஒரு பொம்பள பேய பத்தித்தாங்க! அதுக்காக, நான் நெசமாவே அப்படி ஒரு பேயைப் பார்த்தேன்னு எல்லாம் உங்க கிட்ட கப்சா உடறதுக்கு எனக்கு விருப்பமில்லீங்கோ!  சரி, நாம மேட்டருக்கு வருவோம். அதாவது, நான் மேல சொன்ன மாதிரி உலகத்தோட எல்லா மூலைகள்ல இருந்தும் இந்த மாதிரி கதைகள் நெறைய சொல்லப்பட்டாலும், சில புகைப்படங்கள் கூட எடுக்கப்பட்டு இருந்தாலும், இதுவரைக்கும் யாரும் “பேய்” அப்படின்னு ஒன்னு இருக்குன்னு ஆதாரப்பூர்வமா நிரூபிக்கவேயில்லீங்க சாமி! அது  ஒரு அழகிய?! மர்மமாவேதான் இருக்கு!

மர்மமாக மறையும் மனிதர்கள் (Mysterious Disappearances)

பொதுவா மனுஷங்க தொலைஞ்சு போறதும், கொஞ்ச காலம் கழிச்சு திரும்ப கிடைப்பதும்/விபத்தில் இறந்து போவதும் உலகத்துல சாதாரணமா நடக்கிற ஒன்னு!  ஆனா இப்போ நாம பார்க்க போற விஷயம் அப்படியில்ல. நெசமாவே,  நம்ம கூட இருந்துக்கிட்டிருக்கிற ஒருத்தரு திடீர்னு மறைஞ்சு போறது எப்படி சாத்தியம்? அது எப்படின்னு தெரியாது, ஆனா இது மாதிரி நெறைய நடக்குது (குறைந்தது அமெரிக்காவுலயாவது!). தொலைஞ்சு போனவங்க கெடைச்சிட்டா பரவாயில்ல, ஆதாரம் எதுவுமே இல்லாம, தொலைஞ்சு போறவங்கள பத்தி விசாரனை பண்ணாலும் அவங்க கிடைக்கிறதில்ல அப்படிங்கிறப்ப, அது ஒரு மர்மம்தானே?

ஆறாவது அறிவு/இன்டியூஷன் (Intuition)

top10_phenomena_intuitionநம்ம எல்லாருக்குமே “உள்ளுணர்வு” அப்படின்னு ஒன்னு இருக்குங்கறத நீங்க யாரும் மறுக்க மாட்டீங்கன்னு நெனக்கிறேன்.  அது ஆறாவது அறிவோ இல்ல வெறும் உள்ளுணர்வோ, எதாவது ஒரு தருணத்துல நாம எல்லாரும் அத உணர்ந்திருப்போம்தானே? அந்த மாதிரி உள்ளுணர்வுகள் சில நேரங்களில் பொய்த்துப் போனாலும், பெரும்பாலான நேரங்களில் உண்மையாவதை உணர்ந்து/கேள்விப்பட்டிருப்போம். உதாரணத்துக்கு, ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போவுது அப்படின்னு நாம  நெனச்சி முடிக்கிறதுக்குள்ள நம்ம குழந்தை கீழே விழுந்து அடிபட்டுடும்/ஒரு  விபத்து நடந்திடும் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். இது எல்லாத்துக்கும் காரணம், நம்ம ஆழ்மனசுல  நம்ம சுத்தி நடக்கிற விஷயங்கள் பதிஞ்சுபோய், அதுல இருந்து நமக்கே தெரியாம நாம, இப்படி நடக்கப்போவுது அப்படின்னு உணர்கிறோம். அது நமக்கு “எப்படி”, தெரியுது, “ஏன்” உணர்றோம் அப்படிங்கிற கேள்விகெல்லாம் இன்னும் பதில் தெரியல!

மனிதன் போன்ற மிருகம்/Bigfoot

bigfoot3பல வருஷ காலமா அமெரிக்காவுல, பெரிய, அடர்த்தியான முடியோட, மனுஷன்மாதிரியே இருக்கிற “பிக்ஃபூட்”, அப்படிங்கிற மிருகத்தப் பார்த்ததா  நெறைய பேர் சொல்லியிருக்காங்க!  அப்படி அந்த மாதிரி மிருகங்கள் இருந்து, இனப்பெருக்கம் செஞ்சுகிட்டிருந்தா குறைந்தது ஒன்னையாவது, இல்லன்னா அதோட ஒரு பிணத்தையாவது கண்டுபிடிச்சிருக்கனுமில்ல இதுவரைக்கும்?!  ஆனா அப்படி ஒன்னையும்  இதுவரைக்கும் கண்டும் புடிக்கல, வேட்டையாடவும் இல்லங்கறதுதான் உண்மை!  வெறும், கண்ணால் கண்ட சாட்சி, புரியாத போட்டோ மட்டும் வச்சுகிட்டு அந்த மாதிரி ஒரு மிருகம் இருக்குன்னு சொல்றதுல எந்த யதார்த்தமும் இல்ல அப்படின்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்! இதே மாதிரி, நம்மூர்ல ஒரு குறங்கு மனிதன்?! கோயம்பத்தூரைச் சுற்றியுள்ள காடுகள்ல?! இருக்கிறதா, ஆனந்த விகடன்ல ஒரு கட்டுரை படிச்சதா எனக்கு ஒரு நியாயபகம்?! உங்களுக்கு யாருக்காவது நினைவிருக்கிறதா? இருந்தா கொஞ்சம் சொல்லுங்க!

டாவோஸின் முனுமுனுக்கும் பாடல் (The Taos Hum)

அமெரிக்காவுல, நியூ மெக்சிகோவுல இருக்கிற ஒரு சின்ன நகரத்துக்கு பேருதான் டாவோஸ் (Taos). இந்த நகரத்தச் சேர்ந்த சில மக்கள் பல வருஷமா, யாரோ ஒருத்தர் ஏதோ ஒரு பாடலை முனுமுனுக்கிற மாதிரியே தூரத்துல ஒரு சத்தம் கேட்டுகிட்டு இருக்கிறதா சொல்லிக்கிட்டு இருக்காங்க! ஆனா வெறும் 2 விழுக்காடு மக்கள்தான் இதச் சொல்றாங்களே தவிர, மத்தவங்கள்லாம் இது ஏதோ ஒலி அலைகள்னால ஏற்படற ஒரு சத்தம்தானே தவிர, வித்தியாசமான முனுமுனுப்பு எல்லாம் இல்லங்கிறாங்களாம். எது எப்படியோ, அது என்ன சத்தம்னு இதுவரைக்கும் யாராலயும் உறுதியாச் சொல்லமுடியலயாம்!
எழுதின எனக்கே ஒரு மர்மதேசம் போய்ட்டு வந்த மாதிரி இருக்குதுன்னா…..அதாங்க, வின்னர் வடிவேலு மாதிரி, “அடிச்ச கைப்புள்ளைக்கே இந்த கதின்னா….அடிவாங்குனவன் கதி என்னவோ”?!, இப்படி பதிவப் படிச்ச உங்களுக்கு எப்படி இருக்குன்னு கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க!

இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?



இங்கிலாந்தின் ’சில்பரி’ என்னுமிடத்தில் 37 மீட்டர் உயரமும், 167 மீட்டர் அகலமும் கொண்ட மலை ஒன்று உள்ளது. மலைகள் என்றாலே இயற்கையால் உருவாக்கப்பட்டவையாகத்தான் இருக்கும். இந்த மலையும் இயற்கையாக உருவாகிய மலை என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தார்கள். ஆனால், ஏதோ ஒரு சீரான வடிவம் அந்த மலையில் இருந்தது. கீழே வட்டவடிவமான அடித்தளமும், கூம்பு போன்ற அமைப்பும், ‘இது இயற்கையாய் அமைந்தது இல்லை’ என்று ஆராய்ச்சியாளர்களை உறுதியாய் முடிவெடுக்க வைத்தது. அப்புறம் அதை ஆராய்ந்தபோது, இது முழுக்க முழுக்க மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று புரிந்தது. இன்றிலிருந்து 4500 ஆண்டுகளுக்கு முன்னரே, மனிதன் மலை போன்ற பிரமிட் அமைப்பைக் கட்டியிருக்கிறான். எகிப்தில் இருக்கும் பிரமிட்டுகள் மன்னனின் இறந்த உடலை வைத்துக் கட்டப்பட்ட கல்லறையாக, நமக்கு ஒரு காரணத்தைச் சொல்கிறது. ஆனால் இந்த ’சில்பரி பிரமிட்’ கட்டப்பட்டதற்குக் காரணமே தெரியவில்லை. ஆனால், இதைக் கட்டிய விதமும், கட்டியவர்களின் உழைப்பையும் நாம் அறியும் போது, அதிர்ந்து போகும் அளவுக்கு இருக்கிறது. அவ்வளவு மனித உழைப்பைக் கொட்டி இந்தப் பிரமிட் எதற்காகக் கட்டப்பட்டது என்றே தெரியவில்லை.
முழுக்க முழுக்க வெண்கட்டிக் கற்களால் (Chalk) கட்டப்பட்டது சில்பரி பிரமிட். இரண்டரை இலட்சம் சதுர மீட்டர் அளவுள்ள அந்தப் பிரமிட்டைக் கட்டி முடிக்க ஆறு மில்லியன் மனித மணித்தியாலங்கள் செலவு செய்யப்பட்டிருக்கின்றன என்று கணித்திருக்கிறார்கள். ஆயிரம் பேர் சேர்ந்து ஒன்றாகக் கட்டியிருந்தாலும் 200 வருடங்கள் கட்டுவதற்கு எடுத்திருக்கும். ஆனால் வெறும் 50 வருடங்களில் அது கட்டி முடிக்கப்பட்டிருப்பதாக சமீபத்துக் கார்பன் திகதிப் பரிசோதனையில் (Carbon Dating) தெரிய வந்திருக்கிறது. இப்போது பச்சைப் புற்களால் முற்றாக மூடப்பட்டிருக்கும் அந்தப் பிரமிட், கை தேர்ந்த கட்டட வல்லுனர்கள் கட்டடங்களை எழுப்புவதற்கு சுண்ணாம்புக் கற்களை எப்படிப் பயன்படுத்துவார்களோ அப்படிக் கட்டப்பட்டிருக்கிறது. மூன்று அடுக்குகளாக அதைக் கட்டியிருக்கிறார்கள். ஆனாலும் நமது பிரச்சினையே, இந்த அளவுக்கு மனித உழைப்பை வீணாக்கி இப்படி ஒரு பிரமிட் ஏன் கட்டப்பட்டது என்பதுதான். யாருக்குமே இன்று வரை சரியான பதில் தெரியவில்லை. அதுபற்றி தற்சமயம் சிலரால் சொல்லப்படும் ஒரு கருத்துத்தான் கொஞ்சம் அதிர வைக்கிறது. அதாவது இது ஒரு பறக்கும் தட்டு வடிவில் கட்டப்பட்ட கட்டடம் என்று சிலர் சொல்கிறார்கள். இந்தக் கட்டடத்துக்குள் என்ன இருக்கிறது என்று சரியாகத் தெரியவில்லை. சிறிய சுரங்கம் போலத் தோண்டிப் பார்த்தபோது, அது உடைந்து விழுந்து விடும் சாத்தியம் இருந்ததால், அதையும் நிறுத்தி விட்டார்கள். இப்போது அதனுள் என்ன இருக்கிறது என்று தெரியாமலே அமைதியாக நிற்கிறது அந்தப் பிரமிட். இதில் இன்னுமொரு ஆச்சரியமும் உண்டு.  இந்த சில்பரி பிரமிட்டுக்கு அருகில்தான் அதிகப்படியான பயிர் வட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அப்படி உருவாக்கப்பட்ட பயிர்வட்டங்கள் எவை? அவை எவற்றைக் குறிப்பிடுகின்றன என்பதை நாம் பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.
இங்கிலாந்தில் இருக்கும் வட்ட வடிவ அமைப்புகளின் ஆச்சரியங்கள் இத்துடன் முடிந்து போகவில்லை. இந்தப் பிரமிட்டிலிருந்து 20 நிமிட நடைப் பயணத்தில், இன்னுமொரு ஆச்சரியமும் நம்மைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறது. வைல்ட்ஷையரில் இருக்கும் கிராமமான ஆவ்பரியில் (Avebury) 100 தொன்களுக்கும் அதிக எடையுள்ள, நூற்றுக்கணக்கான கற்களைக் கொண்டு வட்ட வடிவ அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. 500 மீட்டர் அகலமுள்ள மிகப் பெரிய வட்டத்தின் உள்ளே, இரண்டு சிறிய வட்டங்களாக அது அமைந்திருக்கிறது. இதுவும் 5000 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதையும் யார் அமைத்தார்கள்? ஏன் அமைத்தார்கள் என்ற விவரங்கள் இதுவரை தெரியவில்லை.
“தற்செயலாக எகிப்தில் இருக்கும் பிரமிட்டைப் போல, சில்பரியிலும் ஒரு பிரமிட் இருந்திருக்கிறது. இதை மட்டும் வைத்துக் கொண்டு நாம் எப்படி மர்மங்கள் பற்றி ஒரு முடிவுக்கு வருவது?” என்று மீண்டும் மீண்டும் உங்களுக்கு சந்தேகங்கள் தோன்றிக் கொண்டேயிருக்கும். எவ்வளவு சாட்சிகள் இருந்தாலும் சந்தேகம் கொள்ளும் மனசுதானே நமக்கு உள்ளது. ஒரு வகையில் இந்தச் சந்தேகங்களும் சரியான பாதைக்கே நம்மை இட்டுச் செல்லும். சந்தேகங்கள் அடிக்கடி தோன்றினால்தான், விளக்கங்களும், விடைகளும் அதிகம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. அதற்காக கணவன், மனைவி அடிக்கடி சந்தேகப்பட்டு,விளக்கங்களும் விடைகளும் தேடிக் கொண்டிருக்க வேண்டும் என்றல்ல அதன் அர்த்தம். வாழ்க்கை என்பது மிஸ்டரிகளாலான பிரமிடுகள் அல்ல. ஆனால், அறிவியல் நமக்குச் சொல்லும் முக்கிய பாடமே சந்தேகப்படு என்பதுதான். மேலே உங்களது கேள்விக்குப் பதிலாக, நான் இன்னுமொரு அதிசயம் பற்றியும் சொல்கிறேன்………..
இங்கிலாந்தில் ’யோர்க் ஷையர்’ (Yorkshire) என்னுமிடத்தில் உள்ள கிராமமான தோர்ன்ப்ரோவில் (Thornbrough) 5500 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு மிக நீண்ட வட்ட வடிவ அமைப்பு உருவாக்கப் பட்டிருக்கிறது.அதைப் பார்த்தீர்களானால் இப்போது வரையப்படும் பயிர் வட்டங்களைப் போலவே இருக்கும். இதைக் கூட மேலே இருந்துதான் முழுமையாகப் பார்க்க முடியும். அவ்வளவு பெரியது அது. மொத்தமாக மூன்று வட்டங்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு அது அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை சொன்னது போல பயிர்களாலோ, கற்களாலோ அமைந்த வட்டங்கள் அல்ல இவை. வட்டவடிவமாக திட்டுகளால் உருவாக்கப்பட்டிக்கிறது. ஒரு கிலோ மீட்டருக்கு அதிகமான நீளம் கொண்ட இந்த மூன்று வட்டங்களையும் இணைக்கும் அமைப்பு, நேர்கோடான அகலமான பாதை போன்ற ஒன்றால் இணைக்கப்பட்டிருக்கின்றன. இதில் ஆச்சரியம் என்னவென்றால், 5500 ஆண்டுகளில் ஏற்பட்ட எத்தனையோ காலநிலை மாற்றங்களினாலும் இது அழியாமல் அப்படியே இருக்கின்றன என்பதுதான். வழமை போல ஏன், எதற்கு இவை அமைக்கப்பட்டன என்னும் கேள்விக்குப் பதில் இல்லை. ஆனால் நமக்கு இவை பற்றி வேறு ஒரு வித்தியாசமானதும், ஆச்சரியமானதுமான  தகவல் கிடைக்கிறது. அந்தத் தகவல் எகிப்தின் பிரமிட்டுகளையும், தோர்ன்ப்ரோ வட்டங்களையும், வேறொன்றுடன் இணைக்கும் அதிசயம்.
எகிப்தில் மொத்தமாக 138 பிரமிட்டுகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் புராதனமான கீஸா பிரமிட்டுகளான மூன்று பிரமிட்டுகளும் மிக முக்கியமானவை. கூஃபு பிரமிட், காஃப்ரே பிரமிட், மென்கௌரே பிரமிட் (Khufu, Khafre, Menkaure) என்பனதான் அந்த மூன்று பிரமிட்டுகளும். இந்த மூன்றையும் கவனித்தால் மூன்றும் ஒரு நேர்கோட்டில் அமைக்கப்பட்டிருப்பவை போலத் தோன்றும். ஆனால் உண்மையாக அதில் ஒன்று மட்டும் சற்றே விலகியிருக்கும். ஏன் இப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்ற காரணத்தைப் பின்னர் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். வானில் தெரியும் நட்சத்திரக் கூட்டங்களில் ஓரியன் (Orion) நட்சத்திரங்களும் ஒன்று. ஓரியன் நட்சத்திரங்களில் முக்கிய மூன்று நட்சத்திரங்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பது போல இருக்கும். ஆனால் அதிலும் ஒரு நட்சத்திரம் மட்டும் சற்றே விலகியிருக்கும். அந்த ஓரியன் நட்சத்திரங்கள் மூன்றும் எப்படி அமைந்திருக்கின்றனவோ அதே போல, மிகச் சரியாக கீஸா பிரமிட்டுகள் மூன்றும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இங்கிலாந்து தோர்ன்ப்ரோவில் அமைந்த மூன்று வட்டங்களின் அமைப்பும் எந்த மாற்றமுமில்லாமல் அதே வரிசையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதே திசை. அதே வரிசை.
எகிப்தில் பிரமிட்டுகள், இங்கிலாந்தில் வட்ட அமைப்புகள், வானத்தில் நட்சத்திரங்கள் என மூன்றுமே ஒன்றுடன் ஒன்று எப்படித் தொடர்பாகின? தொலைத் தொடர்பு என்னும் பேச்சுக்கே இடமில்லாத, 4500ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள காலத்தில், இவை எப்படிச் சாத்தியமாகின? மனிதர்களால் இவை நிச்சயம் சாத்தியமாகி இருக்க முடியாது என்றே பலர் சந்தேகப்படுகிறார்கள். அப்படிச் சாத்தியமாகி இருக்கும் பட்சத்தில், மனிதர்களுக்கு அதிபுத்திசாலிகளான அயல் கிரகவாசிகள் யாராவது உதவியிருக்கலாம். அப்படி உதவி செய்த அந்த அயல் கிரகவாசிகளுக்கும் ஓரியன் நட்சத்திரங்களுக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்றும் சந்தேகப்படுகின்றனர். இவை எல்லாமே வெறும் ஊகங்கள்தான். ஆனால் அர்த்தங்கள் இல்லாதவை என ஒதுக்கித் தள்ளக் கூடிய ஊகங்கள் அல்ல. இவை ஊகங்களாக இருந்தாலும், அவை சுட்டிக் காட்டும் திசை, நாம் நம்பியே தீர வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்துபவை.    ஊகங்களுக்கும், கேள்விகளுக்கும் பதில் சொல்ல யாருமே இல்லை. ஒரு வேளை ஊகங்களே உண்மையாக இருக்கும் பட்சத்தில், அந்த உண்மைகள் ஏன் நம்மிடமிருந்து மறைக்கப்படுகின்றன? இல்லாவிட்டால் நாம் நினைப்பது போல எதுவுமே இல்லையா? இவையெல்லாமே மனிதனால் தற்செயலாகவும், திட்டமிட்டும் உருவாக்கப்பட்ட அமைப்புகள்தானா? இவையெல்லாவற்றையும் மிகச் சரியாகப் புரிந்துகொள்ள நாம் இதுவரை விட்டு விலகியிருந்த பயிர் வட்டங்களை நோக்கிச் செல்ல வேண்டும். எங்கு நாம் ஆரம்பித்தோமோ அங்கேயே நமது விடையையும் தேடிக் கொள்ள வேண்டும். எனவே க்ராப் சர்க்கிள் என்று சொல்லப்படும் பயிர் வட்டங்களை நோக்கி நாம் நகரலாம்.
அதற்கு அடுத்த வாரம் வரை காத்திருப்பீர்களா?

எரிமலை பாறைகளில் இருந்து உயிரினங்கள் உருவாகியிருக்கலாம் – ஆய்வறிக்கை



பூமியில் உயிரினங்களின் தோற்றம் மற்றும் அவற்றின் பரிணாம வளர்ச்சி குறித்து விஞ்ஞானிகளிடையே பல விதமானக் கருத்துக்கள் நிலவுகின்றன. லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் மார்ட்டின் பிராசியர் தலைமையிலான குழுவினர் உயிரினங்கள் தோற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் ஆய்வின் முடிவில் மிதக்கும் எரிமலை பாறைகளில் இருந்து ஆதிகால உயிரினங்கள் தோன்றியிருக்கக்கூடும் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளன.

சுமார் கடந்த 3,500 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீரில் மிதக்கும் தன்மையுள்ள எரிமலை பாறைகள் உருவாக்கியிருக்கலாம். அவற்றின் மீது மின்னல் தாக்கியதால் அவை நொறுங்கி பலவித ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம். அதில் இருந்து எண்ணை வடிவிலான ஹைட்ரோ கார்பன்கள் மற்றும் உலோகங்கள் உருவாகி அதன் மூலம் உயிரினங்கள் தோன்றி இருக்கக்கூடும் என பேராசிரியர் மார்ட்டின் பிராசியர் தெரிவித்துள்ளார்.

பிரமிட்டில் உள்ள மர்மங்கள்


உலகின் தொன்மையான ஏழு அதிசயங்களில் ஒன்று பிரமிடு. சீனப் பெருஞ்சுவரைப்
போலவே நிலவிலிருந்து பார்த்தால் தெரியக் கூடியது. கிட்டத்தட்ட 5000
ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு இயற்கைச் சீற்றங்களை எதிர்கொண்டும், அதனால்
எந்தவித பாதிப்புகளும் அடையாமல், தொன்மை உலகின் மர்மமான ஒரு சரித்திரத்தின்
அடையாளமாக இன்றளவும் நிமிர்ந்து நிற்கிறது பிரமிடு. இந்தப் பிரமிடுகளை
உருவாக்கியது யார், என்ன காரணத்திற்காக இவற்றை உருவாக்கினார்கள், இந்தப்
புதிரான கட்டிட அமைப்பில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன என்பது பற்றி
விஞ்ஞானிகளிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. வரலாற்று
ஆய்வாளர்கள் ஒன்றைக் கூற, விஞ்ஞானிகள் அதற்கு எதிராக ஒன்றைக் கூற என்று
காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.


’பிரமிடு’ என்றால்
பலரும் சொல்வது, ”அது எகிப்தில் இருக்கும் ஒரு கட்டிடம். அதில்
அக்காலத்தில் இறந்த மன்னர் போன்றவவர்களின் சடலத்தைப் பாதுகாப்பாக
வைத்திருக்கிறார்கள். ‘மம்மி’ என்றழைக்கப்படும் அவற்றின் உடல்கள் இன்னமும்
கெடாமல் இருக்கின்றன. அது தவிர பல்வேறு புதையல்களும் அங்கே இருக்கக்கூடும்”
என்பதுதான்.

ஆனால் இவை மட்டும் தான் பிரமிடா? வெறும் உடலைப்
பாதுகாக்கும் சமாதியாகத் தானா அவ்வளவு பெரிய கட்டிடங்களைக்
கட்டியிருப்பார்கள்? – என்ற கேள்விகள் சிந்தனைக்குரியன.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தப் பிரமிடுகளைச் சுற்றி
எந்தவிதமான மலைகளோ, பாறைகளோ, கற்குன்றுகளோ கிடையாது. நகரத்தின் அருகில்
மட்டுமல்ல, தொலைவிலும் கூட இல்லை. ஒரு புறம் பாலைவனமும், மறுபுறம் கடலும்
தான் இந்நகரைச் சுற்றி உள்ளது. அப்படியானால் இந்தப் பிரமிடை எப்படி
உருவாக்கியிருப்பார்கள், இத்தனை லட்சம் கற்களை எங்கிருந்து கொண்டு
வந்திருப்பார்கள், இவ்வளவு பெரிய உயரத்திற்கு அவற்றை எப்படி
எழுப்பியிருப்பார்கள் என்றுதான் வரலாற்றாய்வாளர்களும், விஞ்ஞானிகளும்
ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த அளவுக்கு அருகில் பூமியில்
எங்காவது கற்களைத் தோண்டி எடுத்து இவற்றைக் கட்டியிருப்பார்கள் என்று
வைத்துக் கொண்டால் கூட, அவ்வாறு தோண்டி எடுத்த இடங்களில் மிகப் பெரிய
பள்ளங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் பலமைல் சுற்றளவிற்கு அப்படி எந்த
ஒரு பெரிய பள்ளமும் இல்லை. ஆகவே எப்படி இவற்றை உருவாக்கியிருப்பார்கள்
என்று இன்னமும் விஞ்ஞானிகள் மண்டையை உடைத்துக் கொண்டுதான் உள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் மாவீரராக இருந்த நெப்போலியன் இந்தப் பிரமிடுகளில்
என்னதான் இருக்கிறது என்று பார்க்க ஆர்வம் கொண்டார். தனி ஆளாக ஓரிரவு
முழுக்க இந்தப் பிரமிடில் தங்கினார். மறுநாள் காலை வெளிவந்த அவர்,
பிரமிப்பின் உச்சியில் இருந்தார். பிரமிடின் பல்வேறு ரகசியங்களைத் தெரிந்து
கொண்டிருந்த அவர், அவற்றை முழுமையாக வெளியிடவில்லை. ”நான் சொல்வதை யாரும்
நம்ப மாட்டார்கள்” என்ற கருத்தை மட்டும் தெரிவித்தார்.
ஒரு சிலர்
இந்தவகைப் பிரமிடுகள் மனிதர்களால் கட்டப்படவில்லை; மனிதர்களை விடப் பல்வேறு
அதிசய ஆற்றல்கள் கைவரப் பெற்ற வேற்றுக் கிரக மனிதர்களால் கட்டப்பட்டவை
என்றும் கூறுகின்றனர். இந்தக் கூற்றில் உண்மை இருக்கலாம் என்று கூறும் ரஷ்ய
விஞ்ஞானிகள், ஸ்பிங்க்ஸ் பிரமிடைப் போன்ற ஓர் பிரமிடு உருவச்சிலை
செவ்வாய்க் கிரக பிரமிடுகளுக்கு அருகே காணப்படுவதாகக் கூறியிருக்கின்றனர்.
அவர்கள், செவ்வாய்க் கிரகத்தில் சைடோனிக் எனக் குறிக்கப்படும் ஒரு
பகுதியில் காணப்படும் பிரமிடு போன்ற அமைப்புகளுக்கும், எகிப்தின்
பிரமிடுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கக் கூடும் என்றும்
கருதுகின்றனர்.

ஆவிகள் ஏன் எப்படி பூமிக்கு வருகின்றன அறிய ஆவலா..?

வானத்தில் இடி இடிக்கும் போது, பூமியில் நமக்கு பெரிதாகச் சத்தம் கேட்கிறது. ஏன் தெரியுமா?



Wow! சிக்னல் பூமியை வந்தடைந்தது பற்றிப் பார்ப்பதற்கு முன்னர், சிறிது பௌதிகம் (Phisics) படிக்கலாமா? “பௌதிகம் என்றால் பல்கலைக் கழகத்திலேயே சிதறி ஓடுவோம். அது இங்கேயுமா? இப்போ எதுக்குப் பௌதிகம்” என்கிறீர்களா? பல்லைக் கடித்துக் கொண்டு படியுங்கள். பௌதிகம் ஏனென்று புரியும்.பிரபஞ்சம் என்பது மிகவும் அமைதியானது. அமைதி என்றால், அவ்வளவு அமைதி. நமது பூமியைப் பாருங்கள். அமைதியே இல்லாமல், இயற்கையானாலும், செயற்கையானாலும் எப்போதும் சத்தத்துடனேயே சுற்றிக் கொண்டு இருக்கிறது. பூமியுடன் ஒப்பிடும் போது, பிரபஞ்சம் ரொம்பச் சாதுவான பிள்ளை. வானத்தில் இடி இடிக்கும் போது, பூமியில் நமக்கு பெரிதாகச் சத்தம் கேட்கிறது.பிரபஞ்சத்திலும் எத்தனையோ வெடிப்புகள் கணத்துக்குக் கணம் ஏற்படுகின்றன. சமயங்களில் நட்சத்திரங்களே வெடித்துச், சிதறுகின்றன. தினமும் ஒன்றுடன் ஒன்று நட்சத்திரங்களோ, கோள்களோ மோதித் தூளாகின்றன. அதனால் ஏற்படும் சத்தங்கள் நமக்கு கேட்கும் பட்சத்தில் நாம் இறந்தே விடுவோம். அவ்வளவு பாரிய சத்தம் உருவாகும். ஆனால் நமக்கு எதுவும் கேட்பதே இல்லை. அதிகம் ஏன்? நமது சூரியனில் கூட, கோடான கோடி ஐதரசன் குண்டுகள் வெடிப்பது போல, தினமும் வெடிப்புகள் ஏற்படுகின்றன. ஆனால் எங்கும் அமைதியே காணப்படுகிறது. “இவையெல்லாம் ரொம்பத் தூரத்தில் நடக்கின்றன,அதனால்தான் அந்தச் சத்தங்கள் நமக்குக் கேட்பதில்லை” என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது அல்லக் காரணம். அங்கு ஏற்படும் வெடிப்பின் அளவுக்கு அந்தத் தூரங்கள் ஒன்றுமே இல்லை. நிச்சயம் கேட்டே தீரும். ஆனால் கேட்பதில்லை. சொல்லப் போனால், அவற்றுக்கு அருகில் நின்றாலும், அந்தச் சத்தங்கள் நமக்குக் கேட்பதற்கு சாத்தியம் இல்லை. ஏன் தெரியுமா? இது பற்றி எப்போதாவது யோசனை செய்திருக்கிறீர்களா?  ஒலி (சத்தம்) என்பது வேறு. ஒலியைக் கேட்பது என்பது வேறு. ஒலி எங்கும் உண்டு. அதைக் கேட்பது என்பதில்தான் நமக்குப் பிரச்சனை. ஒலியை நாம் எப்படிக் கேட்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும்.ஒரு இடத்தில் உருவாகும் ஒலி, நமது காதை வந்தடைவதற்கு ஊடகம் ஒன்று தேவை. பூமியில் அந்த ஊடகமாக இருப்பது காற்று. அதாவது அட்மாஸ்பியர். காற்று, சத்தத்தைக் கடத்திக் கொண்டு எமது காதை வந்தடைகிறது. பூமியில் மட்டுமல்ல, பிரபஞ்சம் எங்கும் ஒலி உண்டு. ஆனால் நமக்குக் கேட்பதில்லை. காரணம் பூமியைத் தாண்டி எங்குமே காற்று இல்லை. பிரபஞ்சம் எங்கும் காற்றில்லா வெறுமைதான் உண்டு. சூரியனில் இருந்தோ, நட்சத்திரங்களிலிருந்தோ சத்தத்தைக் கொண்டு வருவதற்குக் காற்றுப் போன்ற ஊடகம் நிச்சயம் தேவை. நமது விஞ்ஞானம் அறிந்தவரை பூமியைப் போன்ற இவ்வளவு நேர்த்தியான அட்மாஸ்பியர் உள்ள கோள் பிரபஞ்சத்தில் வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி ஏதாவது கிரகங்களுக்குப் பூமி போன்ற அட்மாஸ்பியர் இருந்தாலும், அது அங்குள்ள சத்தத்தை உள் வாங்குமேயொழிய வெளிவிடாது. மொத்தத்தில் பிரபஞ்சத்தின் பாரிய வெடிப்புகளின் சத்தங்களை நாம் கேட்காமல் இருப்பதற்குக் காரணம், பிரபஞ்சம் காற்றில்லாப் பெருவெளியென்பதுதான்.
ஒலியும், ஒளியும் அலைகளாகத்தான் இருக்கின்றன. அலைகளாகச் செல்லும் அனைத்துக்கும் அலை நீளம் என்ற ஒன்று உண்டு. அலை நீளத்தை அளப்பதற்கு ’ஹேர்ட்ஸ்’ (Hertz – Hz) என்னும் அலகை நாம் பயன்படுத்துகிறோம். மனிதனது காதுக்கும், கண்ணுக்கும் ஒரு குறித்த அலை நீளங்களை மட்டுமே கிரகித்துக் கொள்ளும் சக்தி உண்டு. சூரியனில் இருந்து வரும் ஒளியில் மிகமிகச் சிறிய பகுதியான, ஏழு நிறங்கள் மட்டுமே நமது கண்களுக்குத் தெரிகிறது. அந்த ஏழு நிறங்கள் தாண்டிய, புற ஊதாக் கதிர்களும், இன்ஃப்ரா சிவப்புக் கதிர்களும் நம் கண்களுக்குத் தெரிவதே இல்லை. இதே போலத்தான் ஒலியும். 20 Hzஇலிருந்து 20 KHz வரை உள்ள ஒலி மட்டும்தான் மனிதனால் கேட்க முடியும். அவை தாண்டிய ஒலிகள் ’கேளா ஒலிகள்’ எனப்படும். கேளா ஒலிகளில் முக்கியமானவை ரேடியோ அலைவரிசைகள் Radio Frequency-RF). 3 KHz இலிருந்து 300 GHz வரைக்கும் உள்ள அலை வரிசைகளைத்தான் ரேடியோ அலை வரிசைகள் என்பார்கள். அவற்றைக் கீழே ஒரு அட்டவணையில் தந்திருக்கிறேன்.
ரேடியே சிக்னல்கள் தானாக உருவாவதில்லை. அவை உருவாக்கப்படுபவை. மனிதனாலோ அல்லது வேறு உயிரினங்களினாலோ உருவாக்கப்படுபவைதான் இந்த ரேடியோ சிக்னல்கள். ரேடியோ சிக்னல்களை உருவாக்குவதற்கும், உருவாக்கியவற்றைப் பெற்றுக் கொள்வதற்கும் கருவிகள் தேவை. இப்படியான கருவிகளில் ஒன்றுதான் ’ரேடியோ டெலெஸ்கோப்’ என்று சொல்லப்படும், வானியலை ஆராயப் பயன்படுத்தும் டெலெஸ்கோப்புகள். இவற்றுள் மிகப்பெரிய அளவுள்ள டெலெஸ்கோப்புகளை ’வெரி லார்ஜ் அர்ரே’ (Very Large Array-VLA) என்பார்கள். 25 மீட்டர்களிலிருந்து 300 மீட்டர்கள் வரை குறுக்களவுள்ளவைகள் அவை.
ரேடியோ டெலெஸ்கோப் உள்ள ஒரு வானிலை ஆராய்ச்சி மையமான, பேர்கின்ஸில் (Perkins- Delaware Ohio) 1977ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி நள்ளிரவு, ஜெர்ரி ஏமான் என்பவர் பணியாற்றிக் கொண்டிருந்த போது, திடீரென கணணித் திரையில் ஒரு அதிசயத்தைக் கண்டார். 220 ஒளி வருடங்களுக்கு அப்பால் இருக்கும் சஜிட்டாரியஸ் (Sagittarius) நட்சத்திரக் கூட்டங்களுக்கிடையில் இருந்து, மிகச் செறிவான ரேடியோ சிக்னல் ஒன்று வருவதைக் கண்டார். நன்றாகக் கவனியுங்கள் ரேடியோ சிக்னல் என்பது நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறுவதாலோ, இரண்டு நட்சத்திரங்கள் மோதுவதாலோ ஏற்படுவதல்ல.அதை யாராவது உருவாக்க வேண்டும்.சஜிட்டாரியஸ் நட்சத்திரக் கூட்டங்களில் உள்ள X1 சஜிட்டாரி, X2 சஜிட்டாரி ( Sagittarii X1,X2 ) ஆகிய இரண்டு நட்சத்திரங்களுக்குமிடையில் இருந்து அந்த சிக்னல் வந்தது.அதாவது அங்குள்ள ஒரு இடத்திலிருந்து வேறு ஒரு இடத்துக்கு ரேடியோக் கருவிகள் மூலம், நடந்த ஒரு சம்பாசனையாகத்தான் அது இருக்க முடியும். ஆனால் அந்த நேரத்தில் இருந்த கருவிகளின் திறண் போதாமையால், அதைத் தொடர்ந்து அவதானிக்க முடியவில்லை.  சரியாக 72 செக்கன்கள் வந்த அந்தச் சிக்னல் படிப்படியாகக் குறைந்து அப்படியே இல்லாமல் போயிற்று. 72 செக்கன்கள் என்பது நமக்குச் சிறிய நேரமாக இருந்தாலும், ஆராய்ச்சியாளர்களுக்கு அது பெரிய அளவு நேரம்தான். இந்த சிக்னலைப் பார்த்ததும் தன்னையறியாமல், Wow! என்று ஆச்சரியத்துடன், ஜெர்ரி அதே காகிதத்தில் எழுதினார்.அதனால் அதை Wow! சிக்னல் என்றே விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.
ரேடியோ சிக்னலாக வாவ் சிக்னல் இருந்ததால், அதை நிச்சயம் யாரோ அங்கு உருவாக்கியிருக்கிறார்கள் என்றுதான் விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்தார்கள். அந்த ’யாரோ’ என்பவர்கள் நிச்சயமாக ஏலியன்களாகத்தான் இருக்க முடியும். ராக்கெட் மூலம் விண்வெளிக்குச் செல்லும் அஸ்ட்ராநாட்ஸ் எல்லாருமே பூமியுடன் இப்படிப்பட்ட ரேடியோ அலை வரிசை மூலமாகத்தான் உரையாடுவார்கள். அது போல அங்கும் யாரோ, யாருடனோ உரையாடியிருக்க வேண்டும்.எப்போதோ ஒரேயொரு தடவை நடந்த சம்பவத்தை வைத்துக் கொண்டு, ஏலியன்கள்தான் சிக்னலை அனுப்பினார்கள் என்று எப்படி அடித்துச் சொல்ல முடியும்? ஒருதரம் என்பது எப்போதும் தற்செயலாக இருப்பதற்குத்தான் சாத்தியம் உண்டு. ஆனால் இந்தச் சாத்தியத்தை உடைத்தெறிந்தது இன்னுமொரு சம்பவம்.மேற்கு வேர்ஜீனியாவில் இருக்கும் கிரீன்பாங்க் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்த டான் மெரிக் (Dr.Don Merick) என்ற விண்வெளி ஆராய்ச்சியாளருக்கு, 23 யூலை 1997ம் ஆண்டு அதிகாலை 3மணிக்கு, ஒரு ரேடியோ சிக்னல் கிடைத்தது. அந்த சிக்னலைக் கண்டதும் அவர் போர்ட்டா ரிகாவில் இருக்கும் ஆரஷீபோ ஆராய்ச்சி நிலையத்துக்கும், மசாசூசெட்ஸ் ஆராய்ச்சி நிலையத்துக்கு ஃபோன் மூலமாக இந்தச் செய்தியையும், அந்த சிக்னல் வந்த இடத்தையும் அறிவித்தார். அவர்களும் அதே இடத்துக்குத் தங்கள் ரேடியோ டெலஸ்கோப்பைத் திருப்ப, அவர்களுக்கும் அதே சிக்னல் கிடைத்தது. இந்தச் சம்பவமும் விஞ்ஞானிகளைத் தூக்கிவாரிப் போட்ட சம்பவமாக அமைந்தது. ஆனால் இதில் அமெரிக்க அரசு ஏனோ ஒரு தயக்கதைக் காட்டியது. பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பதிலளித்த அரசு அதிகாரி, “அந்தச் சம்பவம் நடந்தது உண்மைதான். ஆனால் அது பற்றி எந்த அபிப்பிராயமும் சொல்லப் போவதில்லை. எந்தக் கேள்விக்கும் பதிலளிக்கப் போவதில்லை” என்று சொல்லிவிட்டு, உடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். அமெரிக்கா அங்கு எதை மறைக்க வெளிக்கிட்டது என்பது இன்னும் புதிராகவே இருக்கின்றது. ஆனால் அதைவிட ஒரு ஆச்சரியமான வேலையை அமெரிக்க அரசு அடுத்துச் செய்தது.’ஏலியன்களுக்கான ஆராய்ச்சிக்காக, 20 பில்லியன் டாலர்களை ஒவ்வொரு வருடத்துக்கும் ஒதுக்குவதாகவும், இது அடுத்த பத்து வருடங்களுக்கு அது தொடரும்’ என்றும் அறிவித்தது. இல்லாத ஏலியன்களை இருக்கிறது என்று ஆராய இவ்வளவு அதிகப்படியான பணத்தை அமெரிக்கா ஏன் ஒதுக்க வேண்டும்? உலகிலேயே அமெரிக்கா மட்டும் அல்ல, அனைத்து அரசுகளும் அதிகப்படியான பணத்தைச் செலவு செய்வது விண்வெளி ஆராய்ச்சியில்தான். அதுவும் குறிப்பாக ஏலியன் வேட்டையில்தான். வெளிக்கிரக உயிர்களைக் கண்டுபிடிப்பதற்கென்றே  SETI (Search for ExtraTerrestrial Intelligence) என்ற ஒரு உலகளாவிய அரச அமைப்பையே உருவாக்கி வைத்திருக்கின்றனர் என்றால் பார்துக் கொள்ளுங்கள்.
SETI என்று ஒரு அமைப்பு, அதற்கென்று கோடி கோடியான பணம், அதில் ஈடுபடுவதற்கு ஆயிரக்கணக்கான உலக மகா விஞ்ஞானிகள் என, அனைத்தையும் அரசுகள் உருவாக்கி ஏலியன்களை ஆராய்ந்து கொண்டிருந்தாலும், சாதாரண மக்களான நாம் ஏலியன்கள் பற்றிப் பேசினாலே அது பொய்யென்று அரசுகள் குதித்து கூத்தாடுகின்றன. அவர்களாகக் கண்டுபிடிக்கும் உண்மைகளையும் மறைக்கின்றன. நமது கண் முன்னாலே இருக்கும் பல ஆச்சரியங்களையோ, அதிசயங்களையோ கூட முறைப்படி ஆராய மறுக்கின்றன. கோடிக்கணக்கான கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் கோள்களுக்கெல்லாம் ராக்கெட்டை அனுப்பி, அங்கு என்ன இருக்கிறது என்று ஆராய்கிறார்கள். ஆனால் பூமியிலேயே இருக்கும் அதிசயங்களை ஆராய மறுக்கிறார்கள். எத்தனை ஆச்சரியங்கள் இன்றும் விடை சொல்லப்படாமல் மிஸ்டரிகளாகவே நம் முன்னால் நிற்கின்றன.
அப்படி நம் கண்முன்னே நிற்கும் ஒரு அதிசயம்தான் ஸ்டோன் ஹெஞ்ச். 5000 வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் அது அமைக்கப்பட்டிருக்கிறது. கற்கால நாகரீகத்தின் கடைசிக் காலகட்டம் அது.இங்கிலாந்தின் வரலாற்றில் எந்தப் பதிவுகளும் இல்லாத காட்டுவாசி மக்கள் மட்டும் வாழ்ந்த காலம். அந்தக் காலத்தில் 100 டன்களுக்கு அதிகமான எடையுள்ள கற்களை, பல நூறு கிலோ மீட்டர்கள் தூரத்திலிருந்து , வைல்ட் ஷையர் (Wiltshire) என்னுமிடத்துக்கு நகர்த்தி, ஸ்டோன் ஹெஞ்ச் கட்டப்பட்டிருக்கிறது. அதுவும் இந்தக் கட்டுரைக்கு ஆதாரமாக இருக்கும் பயிர் வட்டங்களின் வடிவிலேயே அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஸ்டோன் ஹெஞ்ச் அமைக்கப்பட்டிருக்கும் விதத்தில் நிறைய ஆச்சரியங்களும் மர்மங்களும் உண்டு. அந்த மர்மங்கள் இன்னும் விடுவிக்கப்படாமல் நம்மை வியப்பிலாழ்த்தியபடி இருக்கின்றன. “பயிர் வட்டங்கள் பல விதமாக பல இடங்களில் அமைக்கப்பட்டிருக்கிறதே, ஏன் ஸ்டோன் ஹெஞ்ச் மட்டும் ஒன்றுதான் இருக்கிறது?” என்று நீங்கள் கேட்டால், மேலும் ஆசாரியமான தகவல்களே நமக்குக் கிடைக்கின்றன. வட்ட வடிவமாக பலவித ஹெஞ்சுகள் இங்கிலாந்து எங்கும் காணப்படுகின்றன?இந்த ஸ்டோன் ஹெஞ்ச் எப்படிக் கட்டப்பட்டது? எதற்காகக் கட்டப்பட்டது? அது கட்டப்பட்டதில் உள்ள ஆச்சரியங்கள் என்ன? இது தவிர்ந்து மேலும் உள்ள மற்ற ஹெஞ்கள் எவை? என அனைத்துக் கேள்விகளுக்கான பதில்களுடன், அடுத்த தொடரில் சந்திப்போம்.

அதிசயம் ஆனால் உண்மை!

தற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக்கெட்டாத ஏதோ ஒரு’விதி’ அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதாரபூர்வமான நிகழ்வுகளை இங்கு பார்ப்போமா?
முதலில் இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்-
1.        ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி.
2.        இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம் மனைவிகளின் அருகில் இருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
3.        இருவர் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வாழும் போது பிள்ளை பெற்றனர். பிறந்தவுடன் குழந்தை இறந்தும் போனது.
4.        இருவரும் தலையின் பின்பகுதியில் குண்டு துளைத்துச் செத்தார்கள்.
5.        இருவரும் இறந்த பின் ஜான்சன் என்ற பெயருள்ளவர்கள் உடனே ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்கள். (ஆண்ட்ரூ ஜான்சன், லிண்டன் ஜான்சன்)
6.        ஆண்ட்ரூ ஜான்சன் பிறந்தது 1808. லிண்டன் ஜான்சன் பிறந்தது 1908. சரியாக அதே நூறு வருட இடைவெளி.
7.        இருவரையும் கொன்றவர்கள் பிறந்த வருடங்கள் கூட நூறு வருட இடைவெளிகள். ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1839. லீ ஹார்வி ஆஸ்வால்டு 1939.
8.        இரு கொலைகாரர்களும் பிடிபட்டு வழக்குத் தொடுப்பதற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
9.        பூத் லிங்கனை ஒரு தியேட்டரில் கொன்று விட்டு ஒரு கிடங்குக்கு ஓடினான். ஆஸ்வால்டு ஒரு கிடங்கிலிருந்து கொன்று விட்டு தியேட்டர் நோக்கி ஓடினான்.
10.     லிங்கனின் செயலாளரின் முன் பெயர் ஜான். ஜான் கென்னடியின் செயலாளரின் பின் பெயர் லிங்கன்.
இன்னொரு சம்பவம் Life  பத்திரிக்கையில் வெளியான உண்மை சம்பவம். இதனை வாரன் வீவர் என்ற கணித அறிஞர் தன் புத்தகம் ஒன்றிலும் குறிப்பிடுகிறார். அமெரிக்காவில் நெப்ராஸ்கா என்ற மாநிலத்தில் உள்ள Beatriceஎன்ற சிறிய நகரில் உள்ள ஒரு சர்ச்சில் 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி 15 பாடகர்கள் சேர்ந்து கூட்டாக சரியாக காலை 07.20 மணிக்குப் பாடுவதாக இருந்தது. ஆனால் அத்தனை பேரும் வேறு வேறு காரணங்களுக்கு சர்ச்சிற்கு வர அதிக தாமதமாகி விட்டது. ஒருத்தி ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் ஆழ்ந்து போய் கிளம்பத் தாமதமானது. இன்னொருத்தி கணிதப்பாடம் எழுதி முடித்துக் கிளம்பத் தாமதமானது. ஒருவருக்குக் காரை ஸ்டார்ட் செய்வதில் பிரச்சினை…இப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணம். இவர்கள் சரியான நேரத்திற்குள் வந்து சேராததே இவர்களைக் காப்பாற்றியது என்பது தான் அதிசயச் செய்தி. காலை சரியாக 07.25 க்கு வெடிகுண்டு வெடித்ததில் சர்ச் தரை மட்டமாகியது.
1900 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இத்தாலிய அரசர் உம்பர்டோ (King Umberto I) மோன்ஸா என்ற நகரில் ஒரு பெரிய ஓட்டலில் உணருந்தச் சென்ற போது அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த ஓட்டல் உரிமையாளர் அசப்பில் அவரைப் போலவே இருந்தது தான். அவரிடம் பேசிய போது மேலும் பல ஆச்சரியங்கள் அவருக்குக் காத்திருந்தன. அந்த ஓட்டல் உரிமையாளர் பெயரும் உம்பர்ட்டோ. இருவர் மனைவியர் பெயரும் மார்கரிட்டா. அந்த மன்னர் முடிசூட்டிய அதே நாளில் தான் அந்த ஓட்டல் உரிமையாளர் அந்த ஓட்டலைத் துவக்கினார்.  இருவர் பிறந்ததும் ஒரே நாள் 14-03-1844. ஆச்சரியத்தோடு அந்த ஓட்டல் அதிபருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு சென்ற மன்னர் ஒரு மாதம் கழித்து 29-07-1900 அன்று அந்த ஓட்டல் உரிமையாளர் ஒரு துப்பாக்கி சூட்டில் சற்று முன் தான் காலமானார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டார். சில மணி நேரங்களில் மன்னரும் ஒரு வன்முறைக் கும்பலால் கொல்லப்பட்டார்.
ஹென்றி சீக்லேண்ட் (Henry Ziegland) என்பவன் 1883 ஆம் ஆண்டு தன் காதலியுடனான உறவை முறித்துக் கொண்டான். அந்தக் காதலி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள அவளுடைய சகோதரர் கடும் கோபமடைந்து சீக்லேண்டைத் தேடிக் கண்டுபிடித்து சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். ஆனால் அதிர்ஷ்டவசமாக சீக்லேண்ட் சாகவில்லை. அந்தத் துப்பாக்கிக் குண்டு முகத்தை உராய்சிக் கொண்டு சென்று அங்கிருந்த மரத்தில் சென்று பதிந்தது. சில வருடங்கள் கழித்து அந்தப் பெரிய மரத்தை வெட்டி விட சீக்லேண்ட் நினைத்தான். ஆனால் அதை அவ்வளவு சுலபமாக வெட்டி விட முடியவில்லை. எனவே டைனமைட் குச்சிகளை வைத்து மரத்தைப் பிளக்க நினைத்தான். அப்படிச் செய்கையில் அந்த மரம் சுக்கு நூறாகி வெடிக்கையில் அந்தக் குண்டு சீக்லேண்டின் தலையில் பாய்ந்து அந்த இடத்திலேயே சீக்லேண்ட் மரணம் அடைந்தான். பல வருடங்கள் கழித்தும் அந்தக் குண்டு பழி தீர்த்துக் கொண்டது போல அல்லவா இருக்கிறது. இந்த இரு சம்பவங்களும் ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்ற புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ளன.
Ohioவில் பிறந்த இரட்டையர் வாழ்க்கையின் ஆச்சரியமான குறிப்புகள் 1980 ஜனவரி மாத ரீடர்ஸ் டைஜஸ்டில் வெளி வந்துள்ளன. இருவரும் பிறந்தவுடனேயே பிரிக்கப்பட்டு இருவேறு தொலைதூரக் குடும்பங்களுக்குத் தத்துத் தரப்பட்டனர். இருகுடும்பங்களும் ஒன்றிற்கு ஒன்று தெரியாமலேயே குழந்தைகளுக்கு ஜேம்ஸ் என்று பெயரிட்டனர். இருவரும் சட்ட அமலாக்கப் பிரிவில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இருவருக்குமே பல திறமைகள் ஒன்றாகவே இருந்தன. இருவரும் லிண்டா என்ற பெயருடைய பெண்களையே முதல் திருமணம் செய்து கொண்டனர். இருவருமே தங்கள் மகன்களுக்கு ஜேம்ஸ் ஆலன் என்ற பெயரையே இட்டனர். இங்கே சின்ன வித்தியாசம் சொல்ல வேண்டும் என்றால் ஒருவர் James Alan என்றும் இன்னொருவர் James Allan என்று ஒரு l எழுத்து சேர்த்தும் பெயர் வைத்தனர். இருவரும் முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டது பெட்டி (Betty) என்ற பெயருடைய பெண்களை. இருவரும் தங்கள் நாயிற்குToy என்ற பெயரையே வைத்திருந்தனர். நாற்பதாண்டு காலம் கழிந்து இணந்த அந்த இரட்டையர் தங்களை அறியாமல் தங்கள் வாழ்க்கைகளில் இருந்த ஒற்றுமையை எண்ணி அதிசயித்தனர்.
மேஜர் சம்மர்ஃபோர்டு என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரிக்கும் மின்னலுக்கும் இருந்த தொடர்பு ஆச்சரியமானது. அவர் முதல் உலகப்போர் சமயத்தில் குதிரையில் இருந்து போர் புரிந்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி இடுப்பிற்கு கீழ் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். பின் அவர் ஓரளவு குணமாகி கனடா நாட்டில் குடி பெயர்ந்தார். அங்கு ஆறாண்டு காலம் கழித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது மறுபடியும் மின்னலால் தாக்கப்பட்டார். வலது பக்கம் பக்கவாதம் அவரைப் பாதித்தது. மறுபடி குணமடைந்த அவர் உள்ளூர் பூங்காவில் உலாவிக் கொண்டிருந்த போது மின்னலால் தாக்கப்பட்டு உடம்பு முழுவதும் செயல் இழந்தார். அது நடந்து இரண்டாண்டுகளில் மரணம் அடைந்தார். இறந்த பின்னும் அவரை மின்னல் விடுவதாக இல்லை. நான்காண்டுகள் கழிந்து அவருடைய கல்லறை மின்னலால் தாக்கப்பட்டு சிதிலமாகியது.
இந்த நிகழ்ச்சிகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன அல்லவா? இவற்றை எல்லாம் தற்செயல் என்று கண்டிப்பாக நாம் நினைத்து விட முடியாது. இந்த சம்பவங்களைப் படிக்கையில் அவற்றில் முன்பே தீர்மானிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட ஒரு அம்சம் இருக்கிறது என்றல்லவா தோன்றுகிறது. ஏன், எதற்கு என்பது விளங்கா விட்டாலும் கூட அந்த ஏதோ ஒரு ‘விதி’யை நம்மால் மறுக்க முடிவதில்லை அல்லவா

கற்கள் தானாக நகரும் மர்மமான ‘மரண வெளி’ Death Valley National Park Inyo County, California


164268_355991057845829_953912859_nஅமெரிக்காவின் ‘ரேஸ் டிரெக் பிளாஸா’ பிரதேசம் உலகப் பிரசித்தமானது. இதற்கு ‘மரண வெளி’ என்று பெயர். ஏன் தெரியுமா?
இங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்களோ உயிரினங்க ளோ, மரம் மட்டைகளோ கிடை யாது. பாலைவனம் போன்ற பரந்து விரிந்து கிடக்கும் இப்பிரதேசத்தில் வறட்சி காலத்தில் நிலம் வெடிப் பு விழுந்து ஓட்டைகளில் ‘ஐஸ்’ படர்ந் திருக்கும்.
இந்த மர்ம பூமியில் கற்கள் தானாக நகர்ந்து செல்கின்றன. நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் இந்த மர்மத்திற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இவை நகர்ந்து சென்ற அடையாளங்க ள் தெளிவாகக் காணப் படுகி ன்றனவாம்.
இங்குள்ள கற்கள் இரண் டு அல்லது மூன்று வருட ங்க ளில் முழு பிர தேச த்தையும் சுற்றி வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
சில சமயங்களில் இரு கற் கள் ஒரே நேரத்தில் பயண த்தை ஆரம்பிக் கும். ரயில் பாதை போன்று அவை சமாந்தரமாக அந்த பூமி யைச் சுற்றி வருகின்ற ன.
சில சமயங்களில் அவற்றி ல் ஒருகல் வலது பக்க மோ இடது பக்க மோ திரும்பி தனது பயணத்தை தனியாக தொடர்வதுண்டு.
இவை பின்னோக்கி நகர் ந்த சந்தர்ப்பங்களும் இரு க்கவே செய்கிற து.
இந்த பரந்த நிலப்பரப்பிற் கு அருகில் இருக்கும் மலையி ல் இருந்து கற்துண்டுகள் உடைந்து விழுகின்றன. அவையே இந்தப் பூமியெங் கும் நடமாடுகின்றன.
இவை நடந்து திரியும் தூரம் 10 ஆயிரம் அடிகளை விட அதிகமாம். சில கற்கள் ஒரு அடி மட்டுமே நகர்கின்றன.
இந்த மர்ம பிரதேசம் குறித்து முதன் முதலில் 1948 இலே தகவல் வெளியானது. 1972-80 காலப் பகுதியில் பாரியளவிலான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
கற்கள் மர்மமாக நகர்வதற்கு இந்த பாலைவனமா அல்லது அங்கு ள்ள களி மண் தட்டா காரணம்?
இவை வேகமான காற்றினால்தான் நகர் கின்றன என்று சிலர் கூறலாம். ஆனால் இப்பகுதியில் கடும் காற்று வீசுவதில் லையாம். எனவே அந்த வாதமும் எடு படாது.
நிலத்துக்குள் இருக்கும் ஒருவித சக்தி யே கற்கள் நகர்வதற்குக் காரணம் என மெசசுசெட்ஸ் பகுதி ஹெம்சயர் பல் கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்து ள்ளனர்.
வெற்றுக் கண்களுக்கு புலப்படும் வகையில் இவை நகர்வது கிடையாது. சிறிய கல்லொன்று வரு டம் முழுவதும் இரண்டரை அங்குலம் மட்டுமே நகர்ந்த போதும் 36 கிலோ எடையுள்ள கல்லொன்று 659 அடிகள் நகர் ந்திருக்கிறது. கல்லின் அளவுக் கும் அவை நகர்வதற்கும் எது வித தொடர்பும் கிடையாது என் பதை இது காட்டுகிறது.
இந்தப் பாழடைந்த மர்மமான பிரதேசத்தில் மனித நடமாட்டம் இல் லாவிட்டாலும் கற்களின் நட மாட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அவை பற்றிய ஆய்வுகளும் தான்.

உலகின் தீரா மர்மங்கள்…