Wow! சிக்னல் பூமியை வந்தடைந்தது பற்றிப் பார்ப்பதற்கு முன்னர், சிறிது பௌதிகம் (Phisics) படிக்கலாமா? “பௌதிகம் என்றால் பல்கலைக் கழகத்திலேயே சிதறி ஓடுவோம். அது இங்கேயுமா? இப்போ எதுக்குப் பௌதிகம்” என்கிறீர்களா? பல்லைக் கடித்துக் கொண்டு படியுங்கள். பௌதிகம் ஏனென்று புரியும்.பிரபஞ்சம் என்பது மிகவும் அமைதியானது. அமைதி என்றால், அவ்வளவு அமைதி. நமது பூமியைப் பாருங்கள். அமைதியே இல்லாமல், இயற்கையானாலும், செயற்கையானாலும் எப்போதும் சத்தத்துடனேயே சுற்றிக் கொண்டு இருக்கிறது. பூமியுடன் ஒப்பிடும் போது, பிரபஞ்சம் ரொம்பச் சாதுவான பிள்ளை. வானத்தில் இடி இடிக்கும் போது, பூமியில் நமக்கு பெரிதாகச் சத்தம் கேட்கிறது.பிரபஞ்சத்திலும் எத்தனையோ வெடிப்புகள் கணத்துக்குக் கணம் ஏற்படுகின்றன. சமயங்களில் நட்சத்திரங்களே வெடித்துச், சிதறுகின்றன. தினமும் ஒன்றுடன் ஒன்று நட்சத்திரங்களோ, கோள்களோ மோதித் தூளாகின்றன. அதனால் ஏற்படும் சத்தங்கள் நமக்கு கேட்கும் பட்சத்தில் நாம் இறந்தே விடுவோம். அவ்வளவு பாரிய சத்தம் உருவாகும். ஆனால் நமக்கு எதுவும் கேட்பதே இல்லை. அதிகம் ஏன்? நமது சூரியனில் கூட, கோடான கோடி ஐதரசன் குண்டுகள் வெடிப்பது போல, தினமும் வெடிப்புகள் ஏற்படுகின்றன. ஆனால் எங்கும் அமைதியே காணப்படுகிறது. “இவையெல்லாம் ரொம்பத் தூரத்தில் நடக்கின்றன,அதனால்தான் அந்தச் சத்தங்கள் நமக்குக் கேட்பதில்லை” என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது அல்லக் காரணம். அங்கு ஏற்படும் வெடிப்பின் அளவுக்கு அந்தத் தூரங்கள் ஒன்றுமே இல்லை. நிச்சயம் கேட்டே தீரும். ஆனால் கேட்பதில்லை. சொல்லப் போனால், அவற்றுக்கு அருகில் நின்றாலும், அந்தச் சத்தங்கள் நமக்குக் கேட்பதற்கு சாத்தியம் இல்லை. ஏன் தெரியுமா? இது பற்றி எப்போதாவது யோசனை செய்திருக்கிறீர்களா? ஒலி (சத்தம்) என்பது வேறு. ஒலியைக் கேட்பது என்பது வேறு. ஒலி எங்கும் உண்டு. அதைக் கேட்பது என்பதில்தான் நமக்குப் பிரச்சனை. ஒலியை நாம் எப்படிக் கேட்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும்.ஒரு இடத்தில் உருவாகும் ஒலி, நமது காதை வந்தடைவதற்கு ஊடகம் ஒன்று தேவை. பூமியில் அந்த ஊடகமாக இருப்பது காற்று. அதாவது அட்மாஸ்பியர். காற்று, சத்தத்தைக் கடத்திக் கொண்டு எமது காதை வந்தடைகிறது. பூமியில் மட்டுமல்ல, பிரபஞ்சம் எங்கும் ஒலி உண்டு. ஆனால் நமக்குக் கேட்பதில்லை. காரணம் பூமியைத் தாண்டி எங்குமே காற்று இல்லை. பிரபஞ்சம் எங்கும் காற்றில்லா வெறுமைதான் உண்டு. சூரியனில் இருந்தோ, நட்சத்திரங்களிலிருந்தோ சத்தத்தைக் கொண்டு வருவதற்குக் காற்றுப் போன்ற ஊடகம் நிச்சயம் தேவை. நமது விஞ்ஞானம் அறிந்தவரை பூமியைப் போன்ற இவ்வளவு நேர்த்தியான அட்மாஸ்பியர் உள்ள கோள் பிரபஞ்சத்தில் வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி ஏதாவது கிரகங்களுக்குப் பூமி போன்ற அட்மாஸ்பியர் இருந்தாலும், அது அங்குள்ள சத்தத்தை உள் வாங்குமேயொழிய வெளிவிடாது. மொத்தத்தில் பிரபஞ்சத்தின் பாரிய வெடிப்புகளின் சத்தங்களை நாம் கேட்காமல் இருப்பதற்குக் காரணம், பிரபஞ்சம் காற்றில்லாப் பெருவெளியென்பதுதான்.
திங்கள், 14 அக்டோபர், 2013
வானத்தில் இடி இடிக்கும் போது, பூமியில் நமக்கு பெரிதாகச் சத்தம் கேட்கிறது. ஏன் தெரியுமா?

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக