வெள்ளி, 11 அக்டோபர், 2013

முதல் விண்வெளிப்; பயணம் மறைக்கப்பட்ட சுவாரஸ்யமான தகவல்கள் பிளாஸ்ரிக் பீரங்கி தான் ஆனால்..... முதல் விண்வெளிப்; பயணம் மறைக்கப்பட்ட சுவாரஸ்யமான தகவல்கள்


43 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் முதன் முதலில் நிலவில் கால் பதித்தான். அமெரிக்காவைச் சேர்ந்த நீல் ஆம்ஸ்டிராங், ஆல்ட்ரின், காலின்ஸ் ஆகிய 3 விண்வெளி வீரர்களும் 1969 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 21 ஆம் திகதி நிலவில் இறங்கினார்கள். முதலாவது விண்வெளிப் பயணம் பற்றி பரபரப்பாக பேசப்படும் ‘ராக்கெட் மேன்’ புத்தகத்தில் வெளியிடப்பட்டிருந்த சுவாரசியமான விஷயங்கள் இதோ.....
* விண்வெளி வீரர்கள் சென்ற அப்பலோ 11 விண்கலம் நிலவுக்கு சிறிது தூரத்தில் சென்றபோது சிறு பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. இதனால் திட்டமிட்ட இடத்தில் இறங்க முடியாமல் போனது. 3 1/2 மைல் தொலைவுக்கு அப்பால் சென்று இறங்கியது.
*அப்போது விண்கலத்தில் பயன்படுத்திய கம்ப்யூட்டர் தற்போது இருக்கும் செல்போன் அளவு வேகம் கூட இருக்கவில்லை.
* குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் சிரமப்பட வேண்டியதாக இருந்தது. ஏனெனில் எரிபொருளுடன் சம்பந்தப்பட்டு வடிகட்டியே பெறப்பட வேண்டியதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால் இந்த ஏமாற்றம் நிகழ்ந்தது. அதேபோல் சிறு நீர் கழிப்பது, மலம் கழிப்பது போன்றவற்றுக்கும் மிகுந்த சிரமப்பட வேண்டியதாக இருந்தது. இதனால் மலத்தை நிறுத்தி வைப்பதற்காக விண்வெளி வீரர்கள் மருந்து சாப்பிடும் நிலைக்கு ஆளாகினர்.
* அதேபோல் பெரிய விண்கலத்தில் இருந்து ஈகிள் எனப்படும் குட்டி விமானம் மூலம் நிலவில் தரை இறங்கினார்கள். ஈகிளிலும் பிரச்சினை ஏற்பட்டதால் 4 மைல் தூரத்துக்கு அப்பால்தான் தரை இறங்க முடிந்தது. நீல் ஆம்ஸ்ரோங் ஈகிள் மூலம் நிலவில் இறங்கும் போது அது ஏறக்குறைய எரிபொருள் தீர்ந்து நிலவின் தரையில் மோதுவதுபோல் சென்றது.
* நிலவில் காலடி வைத்ததை ‘மனிதனின் சிறிய அடி’ என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அது சிறிய அடியாக இருக்கவில்லை. அவர் ஈகிளின் ஏணிப்படியிலிருந்து 3.5 அடி தாவித்தான் நிலவில் கால் வைத்தார்.
* ஆம்ஸ்ரோங்கை தொடர்ந்து ஆல்ட்ரின் இறங்கினார். அப்போது ஈகிள் விண்கலத்தின் கதவை பூட்ட முடியாமல் சிரமப்பட்டார். ஏனெனில் அதை வெளியில் இருந்து பூட்டும் வகையில் வடிவமைக்கப்படவில்லை.
* நிலவில் இறங்கும் முன்பு நடந்திருந்த ஆய்வுப் படி நிலவின் மணல் மிருதுவாக இருக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால் நிலவில் இறங்கிய பிறகுதான் கடினமாக இருந்தது தெரியவந்தது. மனிதன் இறங்கிய இடம் முழுவதும் பாறையாக இருந்தது. இதனால் கொடியை நடுவதற்கு மிகுந்த சிரமப்பட்டார்கள்.
* நிலவில் நட்ட அமெரிக்கக் கொடி விறைப்பானதாக இருந்தது. ஆனால் அதை நாசா நிறுவனம் மறுத்துவிட்டது.
* நிலவில் இறங்கிய விண்வெளி வீரர்கள், நிலவுக்கு செல்லும் முன் தாங்கள் உயிருடன் திரும்புவது சந்தேகம் என்ற நிலையிலேயே பயணத்தை தொடங்கினர். இதற்காக தங்கள் உயிருக்கு இன்சூரன்ஸ்செய்ய முயன்றபோது எந்த நிறுவனமும் அதற்கு பொறுப்பு ஏற்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக