செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு வாய்ப்பு இருக்கிறதா என ஆராய அமெரிக்காவின் நாசா மையம் க்யூரியாசிட்டி விண்கலத்தை அனுப்பியது. கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி செவ்வாய் கிரகத்தில் இயங்கிய அந்த விண்கலம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.’
செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறை, மணலை சேகரித்து ஆய்வு செய்யும் வசதி க்யூரியாசிட்டி விண்கலத்திலேயே இருக்கிறது. செவ்வாய் கிரக மணலை ஆய்வு செய்தபோது, அதில் தண்ணீர் இருப்பதை விண்கலம் கண்டுபிடித்துள்ளது. மண்ணில் 2 சதவீதம் தண்ணீர் இருப்பதை விண்கலம் உறுதி செய்துள்ளது. அதோடு குளோரின், ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு இருப்பதும் விண்கலம் அனுப்பியுள்ள தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளதாக நாசா அமைப்பின் மூத்த விஞ்ஞானி லெஷின் தெரிவித்துள்ளார்.
தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அடுத்து உயிரினங்கள் இருக்கிறதா என்ற ஆய்வு தீவிரப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக