இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டவர் - சர்தார் வல்லபாய் பட்டேல்
• இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டவர் - சர்தார் வல்லபாய் பட்டேல்
• உலக அளவில் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டவர் - பிஸ்மார்க் (ஜெர்மனி)
-ச.ஞானபால்ராஜா, ஆழ்வான் துலக்கப்பட்டி
கொலோபஸ் குரங்கு
குரங்கு இனத்தில் இது மிகவும் வித்தியாசமானது. கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கலந்த கலவையில் இது காணப்படும். இதற்குப் பெருவிரல் கிடையாது. இதன் ஜீரண மண்டலம் பசுமாட்டைப் போலவே இருக்கிறது. அதாவது இந்த ஜீரண மண்டலம் நான்கு பகுதிகளாக உள்ளது.
பசு தான் தின்ற உணவை எப்படி சிறிதுநேரம் கழித்து மறுபடியும் வாய்க்குக் கொண்டு வந்து அசை போடுகிறதோ அதே போன்று கொலோபஸ் குரங்கும் தனது உணவை அசைபோடுகின்றது. இதன் இரைப்பையில் சேர்க்கப்படும் உணவில் நான்கில் ஒரு பங்கைத் தனது குட்டிக்குக் கொடுத்துவிட்டு மீதமுள்ள பங்கை தான் உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறது.
ஆப்ரிக்காவிலுள்ள அங்கோலாவில் இது அதிகம் காணப்படுகிறது. இது கூட்டம் கூட்டமாகத்தான் காணப்படும். ஒரு கூட்டத்தில் 3 முதல் 15 குரங்குகள் வரை இருக்கும்.
கொம்பு ஆந்தை!
தலைப்பைப் படித்ததும் ஆந்தைக்குக் கொம்பு முளைக்குமோ என்று நினைக்க வேண்டாம். இந்த ஆந்தையின் காதுகள்தான் கொம்புகள் போல நீண்டு கொண்டிருக்கும். இதனால் இதற்கு கொம்பு ஆந்தை என்ற பெயர் வழங்கப்படுகிறது.
இதன் கால்கள் மிகவும் வலிமையானவை. 13 கிலோ எடையுள்ள ஒரு விலங்கைக் கூட இது தனது கால்களால் பற்றிக் கொண்டு அலகினால் கொத்திக் கிழித்துவிடும்.
இது மற்ற ஆந்தைகளைப் போல கூடு கட்டாது. பிற பறவைகள் கட்டிய கூட்டைக் கைப்பற்றிக்கொண்டு அதில் வசிக்கும்.
இதற்கு வாசனையை அறியும் திறன் மிகவும் குறைவு. இதனால் இது தனது இரை இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க மிகவும் திண்டாடும்.
விஷத் தவளை!
மத்திய மற்றும் தென் அமெரிக்க கண்டத்தில் பாய்சன் டார்ட் ஃப்ராக் எனும் ஒருவித விஷத் தவளை காணப்படுகிறது. இந்தத் தவளையின் தோல் மீது விஷத்தன்மை உள்ளது. செவ்விந்தியர்கள் இந்தத் தவளையைக் கொன்று அதைத் தங்கள் அம்புகளின் நுனியில் தேய்த்து விலங்குகளை வேட்டையாட பயன்படுத்துகிறார்கள். இதனால் இந்த அம்பு பாய்ந்த விலங்கு பாதிக்கப்படும். அதன் நரம்பு மண்டலம் செயலிழந்து விடும். சில மணி நேரங்களுக்கு விலங்குகள் முடங்கிக் கிடக்கும்.
இந்தத் தவளைகள் தங்களுக்கென்று ஒரு எல்லையை வகுத்துக் கொண்டு அதற்குள் வாழ்கின்றன. ஒருபோதும் இந்த எல்லையைத் தாண்டுவது இல்லை.
-தொகுப்பு: கா.முருகேஸ்வரி, கோவை.
அமைதிப் புறா!
இரண்டாம் உலகப் போர் முடிவை நெருங்கிக் கொண்டிருந்த நேரம். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பிரபல ஓவியர் பிக்காúஸô, பிரான்ஸ் நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். இந்தக் கட்சி 1950-ஆம் ஆண்டு நடத்திய அமைதி மாநாட்டுக்காக பிக்காúஸô ஒரு புறா ஓவியம் வரைந்தார். அதுதான் இன்றுவரை உலகம் முழுவதும் அமைதிச் சின்னமாகப் பயன்படுத்தப்படுகிறது.
செக்கோயா மரம்!
மிகச் சிறிய விதை ஒன்றில்தான் பூமியிலேயே மிகப் பெரிய மரம் வளர்ந்திருக்கின்றது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
கலிஃபோர்னியாவில் காணப்படும் செக்கோயா என்ற மரம் நிலத்திலிருந்து 100 மீட்டர் உயரத்துக்கும் அதிகமாக வளர்ந்து நிற்கும். தரையிலிருந்து ஒன்றரை மீட்டர் உயரத்தில் இந்த மரத்தின் அடிப்பாகத்தின் விட்டம் 11 மீட்டர் கூட இருக்குமாம்.
இந்த ஒரு மரத்தை வைத்து ஆறு அறைகள் கொண்ட ஐம்பது வீடுகளைக் கட்ட முடியுமாம். இதன் மரப்பட்டை மட்டும் 60 செ.மீ. இதிலுள்ள டேனின் என்ற பொருள் பூச்சிகளை அண்டவிடாமல் செய்கின்றது. இம்மரத்தின் வேர்கள் 3 அல்லது 4 ஏக்கர் அளவுக்கு பரவியிருக்குமாம்.
ஒரு செக்கோயா மரம் 3000 ஆண்டுகள் வரை உயிர்
வாழும் என்று கணக்கிட்டுள்ளார்கள்.
இம்மரத்தின் விதைகள் ஒவ்வொன்றும் ஒரு குண்டூசியின் தலை அளவில்தான் இருக்கும். இந்த விதைகளுக்கு சிறிய இறக்கைகள்கூட உண்டு.
அஜந்தா!
அஜந்தா என்றவுடன் நம் நினைவுக்கு வருவது குகைக்கோயில்கள்தான். ஜான் ஸ்மித் என்ற ஆங்கிலேய அதிகாரி, 1819-இல் தனது தோழர்களுடன் காட்டுக்கு வேட்டைக்குச் சென்றபோது அடர்ந்த மரங்களுக்குப் பின்னால் ஒளிந்திருந்த 30 குகைக் கோயில்களைக் கண்டுபிடித்தார்.
மகாராஷ்டிராவில் வகோரா நதியை ஒட்டி, இயற்கையாக அமைந்துள்ள குன்றுகளில் இந்தக் கோயில்கள் அமைந்துள்ளன.
புத்தரின் பெருமையைப் பேசும் சிற்பங்
களும் வண்ணச் சித்திரங்களும் உள்ளே உள்ளன. இவை பார்ப்பதற்கு பிரமாண்டமாகவும் வியப்பூட்டுவதாகவும் இருக்கும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த கலாசாரம், கலைத்திறமை, புழக்கத்திலிருந்த அணிகலன்கள், உடை அலங்காரங்கள், இசைக் கருவிகள் எல்லாவற்றையும் இக்குகை ஓவியங்களிலும் சிற்பங்களிலும் காணலாம்.
-தொகுப்பு: தேனி முருகேசன்
முதலில்...
• முதலில் மனித இனம் தோன்றிய இடம் ஆசியா
• முதலில் உலக வரைபடத்தை வரைந்தவர் தாலமி
• முதலில் சர்க்கஸ் தோன்றிய நாடு ரோமாபுரி
• முதலில் குடையைக் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள்
• முதலில் ரேடார் உருவாக்கியவர்கள்
ஜெர்மானியர்
• முதலில் தோன்றிய இலக்கியம் இராமாயணம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக