சனி, 12 அக்டோபர், 2013

ஜெமினி இரட்டையர்

னைத்து அன்பின் உறவுகளுக்கும் பனித்துளி சங்கரின் வணக்கங்கள் . உங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு இன்று ஒரு தகவலின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி . தற்போதைய சூழலில் சினிமா என்பது நம்மில் பலருக்கு எதோ ஒரு சாதாரண முயற்சியாகத் தோன்றலாம் . ஆனால் ஒரு காலத்தில் சினிமா என்பது நமக்கு முன் வாழ்ந்தவர்களுக்கு ஒரு அதிசயமாகவே இருந்துவந்தது என்பது யாரும் மறுக்க இயலாத உண்மை . சரி இன்றையத் தகவலுக்கும் சினிமாவிற்கும் என்ன தொடர்பு என்று பலருக்கு கேள்விகள் எல்லாம் .
நீங்கள் அந்தக் காலத்து ஆளாக இருந்தாலும் சரி, இந்தக் காலத்து ஆளாக இருந்தாலும் சரி, ஜெமினி இரட்டையரை நிச்சயம் அறிந்திருப்பீர்கள் . பழைய கருப்பு, வெள்ளைப் படங்களை டி. வி. யில் பார்க்கும்போது ஜெமினி ஸ்டுடியோவின் பீப்பி ஊதும், ஜட்டி மட்டுமே அணிந்த இரட்டையர் சின்னத்தைப் பார்க்காமல் இருந்திருக்க வாய்ப்பேயில்லை .
அந்தச் சின்னத்துக்கான ஐடியா, ஜெமினி ஸ்டுடியோ அதிபர் எஸ். எஸ். வாசனுக்கு எங்கிருந்து வந்தது ?
ஜெமினி என்பது நட்சத்திரம் . ஜெமினி என்ற சொல் லத்தீன் மொழியைச் சார்ந்தது . அச்சொல்லுக்கே இரட்டையர் என்பதுதான் பொருள் . கேஸ்டர் மற்றும் போலகஸ் என்ற இரட்டை
நட்சத்திரங்கள் இணைந்ததுதான் ஜெமினி . கேஸ்டரும், போலக்ஸும் இரட்டையர். கிரேக்கப் புராணத்து கதை மாந்தர்கள் . ஒரே தாய் . ஆனால், வேறு வேறு தந்தை என்பதாக வித்தியாசமான கதை உண்டு . அக்காலத்தில் மாலுமிகளுக்கு இரவில் திசை காட்டும் நட்சத்திரமாக ஜெமினிதான் இருந்துவந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . என்ன நண்பர்களே இன்றையத் தகவல் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் . மீண்டும் ஒரு அறியத் தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக