சனி, 12 அக்டோபர், 2013

விண்வெளி மனிதர்கள் - வியப்பான ஒரு சுவராஸ்யம்

னைவருக்கும் வணக்கம். இப்பொழுதெல்லாம் பூமியில் நடத்தப்படும் ஆராய்ச்சிகளை விட விண்ணில் நடத்தப்படும் ஆராய்ச்சிகள் தான் அதிகம் அந்த அளவிற்கு மதுரை டூ தேனி என்பது போல மண்ணுலகம் டூ விண்ணுலகம் என்ற அளவில் மிகவும் சாதாரணமாக பயணிக்கத் தொடங்கிவிட்டனர். சரி அப்படி இந்த நிலவுக்கு சென்று வர எவ்வளவுதான் டிக்கெட் கேட்பார்கள் என்று யாருக்கேனும் தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் சற்று உங்களின் இதயங்களை பாதுகாப்பாகப் பார்த்துகொள்ளுங்கள். அந்த அளவிற்கு மிகபெரியத் தொகை சும்மா 35 மில்லியன் டாலர். அதிலும் ஆயிரம் விதிமுறைகள் இவற்றில் தேர்வு செய்யப்பட்டால் மட்டுமே அங்கு செல்ல முடியுமாம்.
முதன்முதலில் விண்வெளிக்குச் சென்ற மனிதன், யூரி ககாரின் என்பவராவார். 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி, ரஷ்யா ஆளில்லாத விண்கலமான ஸ்புட்னிக் I -யினை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. பூமியைச் சுற்றிச் செலுத்தப்பட்ட   விண்கலமொன்றில் இவரைச் சுமந்து சென்ற கலமும், 1961 ஆம் ஆண்டு ஏப்ரலில் ரஷ்யாவினாலேயே அனுப்பப்பட்டது.


ஷ்ய விண்வெளி ஓடம் மூலம் 2007ம் ஆண்டு ஏப்ரலில் ஒருமுறை விண்வெளியை எட்டிப் பார்த்துவிட்டவர்தான் சிமோன்யி. அதற்காக அவர் 25 மில்லியன் டாலர்கள் செலவு செய்தார். இப்போது விண்வெளிக்குச் செல்ல 35 மில்லியன் டாலர் என்று முடிவு செய்திருக்கிறார்கள் .

ரிங்க இதெல்லாம் எதற்கு நமக்கு இப்படி  35 மில்லியன் டாலர் கட்டி நிலவு போறாங்களே அவங்க அங்க சாப்பிட என்ன என்ன கொடுப்பாங்க என்று மட்டும் உங்களுக்கு தெரிந்தது நம்மில் யாருமே விண்ணுக்கு செல்ல கனவில் கூட நினைக்க மாட்டோம். அட பொய்யில்லைங்க உண்மைதான் விதவிதமான உணவுகள் கிடைத்தாலும், விண்வெளி வீரர்கள் பாவம்தான்... விண்வெளியில் புவிஈர்ப்பு விசை கிடையாது என்பதால், அவர்களால் உணவின் வாசத்தை நுகரமுடியாது; ருசியையும் முழு அளவில் உணரமுடியாது. பசியைத் தீர்க்க ஏதாவது விழுங்கியாக வேண்டுமே என்றுதான் சாப்பிட வேண்டியிருக்கும் என்றால் பார்த்துகொள்ளுங்கள்.
ங்கே இப்ப சொல்லுங்க விண்வெளிக்குப் போக ஆசைப்படுற எல்லோரும் கை தூக்குங்க பார்க்கலாம். என்னப்பா ஒருத்தரைக் கூட காணவில்லை.

டிஸ்கி : என்னதான் இருந்தாலும் பூமியைவிட்டு வேற்றுகிரகத்திற்கு சென்று விழுங்குவதிலும் ஒரு சுகம்தான் போல நம்ம பணக்கார பயணிகளுக்கு..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக